செந்தமிழ்க் கல்லூரி, மதுரை
மதுரையில் உள்ள செந்தமிழ்க் கல்லூரி தமிழ்நாட்டிலுள்ள தமிழ்க் கல்லூரிகளில் ஒன்று.
மதுரையில் பாண்டித்துரைத் தேவர் 14-09-1901 அன்று நான்காம் தமிழ்ச்சங்கத்தை நிறுவினார்.
- தமிழ்க்கல்லூரிகள் தோற்றுவித்தல்,
- சுவடிகளைத் தேடியும், வெளிவந்த பழைய நூல்களையும் பதிப்பித்தல்,
- தமிழ்த் தேர்வுகள் நடத்துதல்,
- மேலைநாட்டு ஆய்வுக் கோணத்தில் தமிழை ஆய்தல்,
- மேலைநாட்டு நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தல்,
- சேதுபதி செந்தமிழ்க் கலாசாலை என்னும் பெயரால் மாணவர்களுக்கு உண்டி உறையுள் வழங்கித் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்பித்தல்
ஆகிய குறிக்கோள்களுடன் அது செயல்பட்டுவந்தது.
இதன் குறிக்கோளின்படி 1957-ஆம் ஆண்டு செந்தமிழ்க்கல்லூரி தோற்றுவிக்கப்பட்டது. இதில் தமிழ் பயின்று, தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்குப் ‘பண்டிதர்’ என்னும் பட்டம் வழங்கப்பட்டுவந்தது. சில ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தக் கல்லூரி சென்னைப் பல்கலைக் கழக வரம்புக்குள் கொண்டுவரப்பட்டது.