செவ்வாலி பேரினம்

தொல்லுலக பறவைகளின் குழு
(செந்நிற வாலுடைய பாடும் பறவை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
செந்நிற வாலுடைய பாடும் பறவை
பொதுவான செந்நிற வாலுடைய பாடும் பறவை, ஃபீனிகுரசு ஃபீனிகுரசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
பசாரிபார்மிசு
குடும்பம்:
மசுசிகாபிடே
பேரினம் & சிற்றினங்கள்

உரையைக் காண்க

செவ்வாலி பேரினம் (Phoenicurus) என்பது சிறிய அளவிலான, தொல்லுலக பறவைகளின் குழு ஆகும். இவை முன்னர் அமெரிக்க பாடும் பறவைக் (டர்டிடே) குடும்பத்தில் வகைப்படுத்தப்பட்டன. ஆனால் இப்போது இவை தொல்லுலக ஈப்பிடிப்பான் குடும்பத்தின் மஸ்கிகாபிடே ஒரு பகுதியாக அறியப்படுகின்றன. இவை தற்போது நான்கு பேரினங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. உண்மையான ரெட்ஸ்டார்ட்ஸ் ஃபீனிகுரசு, நெருங்கிய தொடர்புடைய பேரினங்கள் சைமரோரோனிசு மற்றும் ரியாகோர்னிசு, குறைந்த நெருங்கிய தொடர்புடைய ஒற்றைச் சிற்றினமுடைய, லுசினியா ஆகியவை இந்த நான்கு வகைகளாகும்.

இவை பூச்சிகளை உண்ணக்கூடியவை. தரையில் காணும் பூச்சிகளை உண்ணும் பறவைகள் இவை. இவற்றில் பெரும்பாலானவை சிவப்பு வால் கொண்டவை. இதுவே இக்குழுவிற்கு இப்பெயரைக் கொடுக்கின்றது.ஒரு விலங்கின் வால் என்ற பொருள்கொண்ட மத்திய ஆங்கிலச் சொல் ஸ்டெர்ட் (stert) மற்றும் பழைய ஆங்கிலத்தின் ஸ்டியோர்ட் (steort) என்பதிலிருந்து பெறப்பட்டது ஸ்டார்ட் ("start") என்ற நவீன ஆங்கிலச் சொல். பெரும்பாலான சிற்றினங்கள் வலசைப் போகக்கூடியன. வட பகுதியில் வாழும் இனங்கள் நீண்ட தூரம் பயணம் செய்பவை. தென்கிழக்கு இனங்கள் பெரும்பாலும் செங்குத்தாக இடம்பெயரக்கூடியன. உயரமான பகுதிகளில் இனப்பெருக்கம் செய்து குளிர்காலத்தில் கீழ்நோக்கி வருபவை.[1]

இவை சிறிய பூச்சி உண்ணிகள். ஆண் பறவைகள் பெரும்பாலும் சிவப்பு, நீலம், வெள்ளை மற்றும் கருப்பு ஆகிய பல்வேறு கலவையில் பிரகாசமான நிறத்தில் உள்ளன. பெண் குருவி சிவப்பு வாலுடன் வெளிர் பழுப்பு நிறத்தில் உள்ளன.[1] சமீபத்திய மரபணு ஆய்வுகள் ஃபீனிகுரசு ஒற்றைச் சிற்றினமுடையதல்ல என்றாலும் 'ஃபீனிகுரசு' பேரினத்திற்குள் சைமரோரோனிசு மற்றும் ரியாகார்னிசு ஆகியவற்றைச் சேர்ப்பதன் மூலம் அவ்வாறு கொள்ளலாம். [2] ஆனால், இது குறித்து பன்னாட்டு பறவையியல் காங்கிரஸ் இன்னும் முடிவு எடுக்கவில்லை.[3]

செட்டோபாகா மற்றும் மியோபொரசு இனத்திலுள்ள புதிய உலக ரெட்ஸ்டார்ட்டுகள் நெருங்கிய தொடர்புடையவை அல்ல. இவைகள் புதிய உலக பாடும்பறவை குடும்பத்தில் பருலிடே இனவகையின. பிந்தைய இனத்தின் உறுப்பினர்கள், விரிவான வெள்ளை மற்றும் வால்களில் சிவப்பு இல்லாதவைகளாகும், இவை "வைட்ஸ்டார்ட்ஸ்" என்றும் அழைக்கப்படுகின்றன.[4]

இனங்கள் பட்டியல் தொகு

  • பேரினம் ஃபீனிகுரசு
    • ப்ரெஸ்வால்ஸ்கி செவ்வாலி (ஃபீனிகுரசு அலாசானிகசு)
    • எவர்ஸ்மேன் செவ்வாலி (ஃபீனிகுரசு எரித்ரோனோட்டசு)
    • செவ்வாலி ( ஃபீனிகுரஸ் ஓக்ரூரோசு)
    • ஹோட்சன் செவ்வாலி (ஃபீனிகுரஸ் ஹோட்சோனி)
    • வெண்தொண்டை செவ்வாலி (ஃபீனிகுரஸ் ஸ்கிஸ்டிசெப்ஸ்)
    • டாரியன் செவ்வாலி (ஃபீனிகுரஸ் அரோரியசு)
    • மசியர் செவ்வாலி (ஃபீனிகுரசு மசெரி)

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Hoyo, J. del, et al., eds. (2005). Handbook of the Birds of the World, vol. 10. Barcelona: Lynx Edicions. பக். 768–776. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:84-87334-72-5. https://archive.org/details/handbookofbirdso0001unse/page/768. 
  2. Sangster, G., Alström, P., Forsmark, E., & Olsson, U. (2010). Multi-locus phylogenetic analysis of Old World chats and flycatchers reveals extensive paraphyly at family, subfamily and genus level (Aves: Muscicapidae). Molecular Phylogenetics and Evolution 57: 380–392 Full text
  3. IOC World Bird List Family Muscicapidae பரணிடப்பட்டது 2011-09-28 at the வந்தவழி இயந்திரம்
  4. IOC World Bird List Family Parulidae பரணிடப்பட்டது 2012-05-01 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=செவ்வாலி_பேரினம்&oldid=3320031" இலிருந்து மீள்விக்கப்பட்டது