சென்னம்பள்ளி கோட்டை

சென்னம்பள்ளி கோட்டை (Chennampalli Fort) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் கர்நூல் மாவட்டத்தில் உள்ள துங்கிலி மண்டலம் சென்னம்பள்ளி என்னும் ஊரில் உள்ள ஒரு பழங்காலக் கோட்டை ஆகும். விஜயநகரப் பேரரசின் அரவிடு மரபை சேர்த்த திம்மராஜா என்பவர் 100 ஏக்கர் பரப்பளவில் கொண்ட மலையை குடைந்து இந்த சென்னம்பள்ளி கோட்டையை 16 ஆம் நூற்றாண்டில் கட்டினார். அவரது காலத்திற்கு பிறகு குத்திராஜா, விஜயநகர அரசர்கள் ஆட்சியின் கீழ் இந்த கோட்டை இருந்ததாகவும், போர்ச்சுகீசியர்கள் போர் தொடுத்து வந்தபோது, மன்னர்கள் இந்த கோட்டையின் கீழ் உள்ள சுரங்கத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர, வைடூரியங்கள் அடங்கிய புதையலை பதுக்கி வைத்ததாகவும் கூறப்படுகிறது. ஆந்திர மாநிலம் தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து கோட்டையில் புதையல் இருப்பதாக தெரிவித்தனர்[1][2][3]

சென்னம்பள்ளி கோட்டை
Chennampalli Fort
பகுதி: விஜயநகரப் பேரரசு,
கர்னூல்
சென்னம்பள்ளி கோட்டை Chennampalli Fort is located in இந்தியா
சென்னம்பள்ளி கோட்டை Chennampalli Fort
சென்னம்பள்ளி கோட்டை
Chennampalli Fort
இடத் தகவல்
உரிமையாளர் இந்தியத் தொல்லியல் ஆய்வகம்
கட்டுப்படுத்துவது இந்தியத் தொல்லியல் ஆய்வகம்
மக்கள்
அனுமதி
ஆம்
நிலைமை வரலாற்று சின்னமாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது
இட வரலாறு
கட்டிய காலம் 16ஆம் நூற்றாண்டு
பயன்பாட்டுக்
காலம்
தற்போதுவரை
கட்டியவர் திம்மராஜா
காவற்படைத் தகவல்
தங்கியிருப்போர் விஜயநகரப் பேரரசு,

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்னம்பள்ளி_கோட்டை&oldid=3032768" இலிருந்து மீள்விக்கப்பட்டது