சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு இந்தியாவின் தமிழக மாநிலத்தின் மதுரை மாவட்டத்தில் இயங்கும் மாநில உயர் நீதிமன்றக்கிளையாகும்.
வரலாறு
தொகுதென் மாவட்ட மக்களின் நீண்ட போராட்டத்திற்குப் பின் மத்திய அரசு 1981ல் நீதிபதி ஜஸ்வந்த் சிங் கமிஷனை அமைத்தது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் நிரந்தரக் கிளையமைக்க கமிஷன் பரிந்துரைத்தது.அதன் பின்னரும் ஏற்பட்ட தாமதத்தை எதிர்த்த மதுரை வழக்கறிஞர்களின் போராட்டத்தினாலும் 2002ல் பதவியேற்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டியின் உறுதியான முயற்சியாலும் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு நீதிமன்றக் கட்டிடங்களும் உருவாயின. குடியரசுத் தலைவரின் அறிவிக்கைக்குப் பிறகு 24.7.2004ல் நிர்ணயிக்கப்பட்ட 12 நீதிபதிகளுடன் மதுரைக் கிளை 13 தென் மாவட்டங்களுக்கு நீதி பரிபாலனத்தைத் தொடங்கியது.[1]இக்கிளை உயர்நீதிமன்றம்ஜூலை 24 2004 [2] முதல் அப்பொழுதய இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி திரு ஆர் சி லகோத்தியால்,[2] சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி திரு பி. சுபாஷன் ரெட்டியின் தலைமையில் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளான நீதியரசர்கள் திரு சிவராஜ் வி பாட்டீல், திரு. கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதியரசர் முனைவர் திரு அரு. இலக்சுமணன், மாண்புமிகு மத்திய சட்டத்துறை அமைச்சர் எச். ஆர். பரத்வாஜ் ,[2]மற்றும் மாநில சட்டத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. டி. ஜெயக்குமார் ,[2]முன்னிலையில் துவக்கிவைக்கப்பெற்று இயங்கிவருகின்றது.
நீதி முறைமை
தொகுஇதன் அமர்வுகள் 24.07.2004,[2] முதல் அதிகாரப்பூர்வமாக துவக்கப்பட்டது. இதன் நீதிமுறைமைகள் அ நீதிபரிபாலணைகள் உள்ளடக்கிய மாவட்டங்களாக ,[2]கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, திண்டுக்கல், இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, தேனி, தென்காசி மற்றும் கரூர் ,[2]ஆகிய மாவட்டங்களின் நீதிமுறைமைகளை கண்காணிக்கின்றது.மதுரைக்கிளை சுழற்சிமன்றமா(circuit court) அல்லது நிரந்தர நீதிமன்றமா (permanent bench) என்ற விவாதத்தில் நிரந்தர அமர்வு என்று முடிவானது.ஆனால் நிரந்தரமாக நீதிபதிகளை நியமிக்காமல் சென்னையிலிருந்தே நீதிபதிகள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.[1]
நீதிமன்ற கட்டமைப்பு
தொகுஇதன் நிர்வாக கட்டமைப்பு 22,929 ச மீ ,[2]கீழ்ப்பரப்பளவில் அமைந்துள்ளது.மன்றத்திற்காக இரண்டு அடுக்கு கட்டுமானமாக 7.20 மீ ,[2]உயரக் கூரைத் தளத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. மற்ற அலுவலக செயல்பாட்டுக்காக நான்கு அடுக்கு கட்டுமானமாக 3.60 மீ உயரத் தளத்துடன் அமைந்துள்ளது.
மொத்த கீழ்ப்பரப்பளவு 15,209 ச.மீ ,[2]அளவுடன் 12 அறை ,[2]எண்ணிக்கையில் மன்றங்கள், மற்றும் நீதிபதி அறைகள், பார்வையாளர்கள் அறைகளுடன் கூடியவைகளாக அமைந்துள்ளன.
நீதிமன்றம் முழுவதும் குளிர்சாதன வசதியுடன் கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது.,[2] மக்கள் நீதிமன்றத்தை எளிதில் அணுகும் விதமாக, உச்ச நீதிமன்றம் மற்றும் தில்லி உயர் நீதிமன்றங்களை மாதிரியாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றங்கள். அதன் அனைத்து மன்ற நிகழ்வுகளும் வலைத்தளத்துடன்,[2] இணைக்கப்பட்டுள்ளது
இவற்றையும் பார்க்கவும்
தொகுவெளி இணைப்புக்கள்
தொகுசென்னை உயர் நீதிமன்றம் இணையம்-மதுரைக் கிளை பரணிடப்பட்டது 2009-08-23 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "மதுரை அமர்வு சுழலும் பலகையா?". தி இந்து. 24 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 24 அக்டோபர் 2013.
- ↑ 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு-உயர் நீதிமன்ற இணையம் பரணிடப்பட்டது 2009-08-23 at the வந்தவழி இயந்திரம்பார்த்து பரணிடப்பட்ட நாள் 07-04-2009