சென் மேரிஸ் மத்திய கல்லூரி, பொகவந்தலாவை

சென் மேரிஸ் மத்திய கல்லூரி இலங்கை, நுவரெலியா மாவட்டத்தில் அட்டன் கல்வி வலயத்தில் அமைந்துள்ளது. இதில் 2007 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 47 ஆசிரியர்களும் 1800 மாணவர்களும் உள்ளனர்.

சென் மேரிஸ் மத்திய கல்லூரி இலங்கை அரசின் ஆயிரம் பாடசாலைகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இரண்டு பாடசாலைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆரம்பப் பிரிவு சென் மேரிஸ் ஆரம்ப பிரிவு என்றும் இடைநிலை முதல் உயர்தரம் வரை சென் மேரிஸ் மத்திய கல்லூரி என்றும் தனித்தனியாக இயங்குகின்றன. சென் மேரிஸ் மத்திய கல்லூரியினர் இந்நாள் அதிபர் ஆ. வேலுசாமி ஆவார். 2019ஆம் ஆண்டு இப்பாடசாலை நூற்றாண்டை கொண்டாடுகிறது.