செம்மநாட்டு மறவர்

மறவரில் ஒரு வகையினர்

செம்மநாட்டு மறவர் என்பவர்கள் தமிழகத்தில் [1] மறவர் இனத்ததின்[2] ஒரு வகையினர் ஆவர்.[3]

பெயர்க்காரணம்தொகு

செம்பியன் நாட்டு மறவர்கள் இராமர் சீதையை மீட்பதற்கு, இலங்கை செல்வதற்கு கட்டிய திருவணையை (சேதுவை) காப்பதற்கு நியமிக்கப்பட்ட ஒரு தலைவனின் வழிவந்தவர்கள் என்று சொல்லப்படுகின்றது.

இன்னொரு ஆதாரமாக சோழ மன்னன் இராஜராஜ சோழன் இலங்கை படையெடுப்பின் போது சேதுவையும், பாண்டிய நாட்டையும் காக்க தன்னுடைய தளபதிகளில் ஒருவனை இப்பூமியின் காவலனாய் நியமித்ததாக ஒரு வரலாறு கூறுகின்றது.

செம்பிய நாடு மறவர்களில் சேதுபதிகள் முக்கியமானவர்கள். செம்பிநாட்டு மறவர்கள் சேது அணையைக் காப்பதற்கு வந்தவர்களாதலால் சேதுகாவலர்கள் என்றும் சேதுபதிகள் என்றும் அழைக்கப்பட்டனர். செம்பிய நாட்டு மறவர்களில் சேதுபதிகள் முடிதரிக்கும் மன்னர்களாதலால் செம்பியநாட்டு மறவர்களுக்கு மறமன்னர் என்றும் கரந்தையர்கோன் என்ற பட்டம் உண்டு.[4]

கிளைகள்தொகு

அகராதியில் இந்தச் சொல்லுக்கு வம்சம் என்று பொருள் கூறப்பட்டுள்ளது. இந்த வம்சத்தைச் சார்ந்தவர் என்பதைச் சொல்லுவதுதான் கோத்திரம்.

கிளை என்பது திருமண நிகழ்ச்சிகளுக்காக உருவாக்கப்பட்டது. ஒரே கிளை சார்ந்த ஆணும், பெண்ணும் உறவினர்கள் ஆகவிடினும் சகோதர உறவு முறையே. கிளை என்பது பெண்ணைச் சார்ந்தது. இதை பெண் வழி சேரல் என கூறுவர். பெண்ணுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பெண்ணின் கிளையே சாரும்.[5]

 1. மரிக்கா கிளை (மரணம் அற்றவர்)
 2. பிச்சை கிளை (பிச்சையன் கிளை)
 3. தொண்டமான் கிளை
 4. கட்டூரான் கிளை
 5. கருப்புத்திரன் கிளை
 6. சீற்றமன் கிளை
 7. தனிச்சன் கிளை (துனிஞ்சான்)

பழக்கவழக்கங்கள்தொகு

செம்மநாட்டு மறவரின பெண்கள் மூக்குத்தி அணியும் வழக்கம் உடையவர்கள். இந்தியாவின் முதல் பெண் சுதந்திர போராட்ட வீராங்கனை வேலு நாச்சியார் இந்த செம்ம நாட்டு மறவர் குலத்தை சார்ந்தவர்.[6] இவர்கள் கணவன் இறந்த பிறகு சதி எனும் உடன்கட்டை ஏறும் பழக்கம் உடையவர்கள்.[7]

பண்பாடுதொகு

செம்பியநாட்டு பெண்கள் காது வளர்த்து (தமிழ் பண்பாட்டுக்கு உட்பட்ட நடப்பு நிகழ்வுகள்) தண்டட்டி (பாப்படம்) அணியும் வழக்கம் உடையவர்கள்.

இந்த வழக்கம் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், கமுதி வட்டங்களிலும், சேர்வைகாரன் ஊரணி கிராமங்களிலும், திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் வட்டங்களிலும், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் விருதுநகர் மாவட்டத்திலும் தற்போதும் நடைமுறையில் உள்ளது.

மேற்கோள்கள்தொகு

 1. https://www.dinamalar.com › ne... மத்திய அரசின் சலுகைகள் மறுப்பு ...
 2. சீர்மரபினர் தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்
 3. சீர்மரபினர்
 4. . 
 5. மறவர் (இனக் குழுமம்)
 6. https://ns7.tv/index.php/ta/tamil-news/tamilnadu/25/12/2018/veermangai-velunachiyars-222th-anniversary
 7. இராமநாதபுரம் சமஸ்தானம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்மநாட்டு_மறவர்&oldid=3005851" இருந்து மீள்விக்கப்பட்டது