செயற்கை கடல்நீர்

செயற்கை கடல்நீர் (Artificial seawater ) என்பது தாது உப்புகளும் உயிர்ச்சத்துக்களும் கலந்து கரைந்துள்ள கடல்நீரையொத்த கலவைநீராகும். இந்நீர் கடல் உயிரியியலில் மற்றும் கடல்சார் பாறையடி நீர் வாழினங்கள் ஆகியவற்றிற்காக முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது. பாசிகள், பாக்டீரியா, தாவரங்கள் மற்றும் விலங்குகள் போன்ற நீர் வாழினங்களுக்குப் பொருத்தமாக ஊடகத்தை தயாரிக்க உதவுகிறது. செயற்கை கடல்நீரில் இயற்கை கடல்நீரைவிட மீளாக்கத்திறன் மிகுந்திருப்பதாக அறிவியல் கண்ணோட்டத்தில் கருதப்படுகிறது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் 1967 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட மாதிரி செயற்கை கடல்நீரின் பகுதிப்பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இச்செயல்முறைக் குறிப்பில் இரண்டு வகையான தாது உப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன. முதலாவது வகை நீரிலி உப்புகள் ஆகும். இவற்றின் எடையை கண்டறிய இயலும். இரண்டாவது வகை உப்புகள் நீரேறிய உப்புகள் ஆகும் இவை செயற்கை கடல்நீரில் கரைசலாக மட்டுமே சேர்க்கப்படுகின்றன.

எடையறி உப்புகள்
உப்பு மூலக்கூற்று எடை கி கி.கி−1 கரைசல்
சோடியம் குளோரைடு (NaCl) 58.44 23.926
சோடியம் சல்பேட்டு (Na2SO4) 142.04 4.008
பொட்டாசியம் குளோரைடு (KCl) 74.56 0.677
சோடியம் பைகார்பனேட்டு (NaHCO3) 84.00 0.196
பொட்டாசியம் புரோமைடு (KBr) 119.01 0.098
போரிக் அமிலம் (H3BO3) 61.83 0.026
சோடியம் புளோரைடு (NaF) 41.99 0.003
பருமனறி உப்புகள்
Salt மூலக்கூற்று எடை மோல் கி.கி−1 கரைசல்
மக்னீசியம் குளோரைடு (MgCl2.6H2O) 203.33 0.05327
கால்சியம் குளோரைடு (CaCl2.2H20) 147.03 0.01033
இசுட்ரான்சியம் குளோரைடு (SrCl2.6H2O) 266.64 0.00009

மேற்கண்ட அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து தாது உப்புகளும் கனிமவேதியியல் தாது உப்புகளாகும். 1978 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட செயற்கை கடல்நீரில் குறைவான அளவில் உயிர்ச்சத்துகளும் கரிமச்சேர்மங்களும் சேர்க்கப்பட்டன.

சர்வதேசத் தரத்துடன் செயற்கை கடல்நீரைத் தயாரிப்பதற்கான செயல்முறைக் குறிப்புகளை அமெரிக்க மூலப்பொருள் மற்றும் பரிசோதனைக் குழுமம் (அ.மூ.ப.கு ) வரையறுத்துள்ளது[1] . தற்போதைய நிலையான தரம் அ.மூ.ப.கு டி1141-98 எனப்பெயரிடப்பட்டுள்ளது. ( ஆனால் அசல் தரவளவு அ.மூ.ப.கு டி1141-52) மற்றும் மாற்று கடல்நீர் தயாரிப்பதற்கான தரப்பயன்பாட்டை விவரிக்கிறது. அ.மூ.ப.கு டி1141-98 தரம் கொண்ட செயற்கை கடல்நீர் பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. அரிமாணம் ஆய்வுகள், கடற்கருவி அளவீடுகள் மற்றும் வேதியியற் செயற்முறைகள் முதலியன இவற்றில் அடங்கும்.

மேற்கோள்கள் தொகு

  1. "Standard Practice for the Preparation of Substitute Ocean Water". ASTM International. பார்க்கப்பட்ட நாள் 16 June 2014.

இவற்றையும் காண்க தொகு

வெளிப்புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=செயற்கை_கடல்நீர்&oldid=3246141" இலிருந்து மீள்விக்கப்பட்டது