செயற்றிட்ட முகாமைத்துவம்

(செயற்திட்ட முகாமைத்துவம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

செயற்றிட்ட முகாமைத்துவம் அல்லது செயற்றிட்ட மேலாண்மை (ஆங்கிலம்:Project management) என்பது வளங்களைத் திட்டமிட்டு ஒழுங்கமைத்து முகாமை செய்து செயற்திட்ட இலக்குகளையும் குறிக்கோள்களையும் வெற்றிகரமாக மேற்கொள்வதற்கான ஒரு ஒழுக்க விதி முறையாக கருதப்படுகிறது. இது ஒரு பயனுடையதான அல்லது மாற்றத்தை ஏற்படுத்துக் கூடிய அல்லது பெறுமதி ஊட்டப்பட்ட ஒரு தனித்துவமான பொருட்கள் அல்லது சேவையை உருவாக்க மேற்கொள்ளும் ஒரு முடிவுள்ள ஒரு முயற்சியாகும்.[1] இது திட்டமிடல், ஒழுங்குபடுத்துதல், கட்டுப்படுத்துதல், ஊக்கப்படுத்துதல் போன்றவற்றின் மூலம் குறிப்பிட்ட இலக்குகளை அடைவதற்கான ஓரு துறையாகும். செயற்றிட்டம் என்பது ஒரு குறிப்பிட்ட பொருளையோ அல்லது சேவையையோ[2] உருவாக்கும் பொருட்டு ஒரு வரையருக்கப்பட்ட தொடக்கத்தை கொண்டு கூறிப்பிட்ட கால வரம்பில் தனித்தன்மையான நோக்கத்துடன் முடிக்கப்படும் தற்காலிக முயற்சி ஆகும்.[3] செயற்றிட்ட மேலாண்மையின் பெரும் சவால் செயற்றிட்ட இலக்குகளை மற்றும் நோக்கங்களை[4] இருக்கும் செயற்றிட்ட கட்டுப்பாடுகளுக்குள்[5] அடைவதாகும். செயற்றிட்டத்தின் முதன்மை இடர்ப்பாடுகளாக நோக்கம், நேரம், தரம் மற்றும் பாதீடு போன்றவை இருக்கின்றன

இங்கு செயற்றிட்டமானது செய்முறைகள் செயற்பாடுகளிலிருந்து வேறுபடுத்தி நோக்கப்படுகிறது. காரணம் செய்முறைகள் செயற்பாடுகள் நிரந்தரமான அல்லது ஒரு பகுதி நிரந்தரமான, தொடர்ச்சியாக ஒரே பொருள் அல்லது சேவையை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கை ஆகும்.நடைமுறையில் இவ்விரு தொழிற்பாடுகளும் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத் திறன்கள், பயன்படுத்தப்படும் முகாமைத்துவத் தத்துவங்கள் என்பவற்றிற்கேற்ப இவ்விரு செயல்முறைகளும் சில சந்தர்ப்பங்களில் வேறுபட்டுக் காணப்படும்.[6]

செயற்றிட்ட முகாமைத்துவத்தின் முதல் நிலை சவால் என்பது, செயற்றிட்ட தடைகளைக் கருத்தில் கொண்டு செயல் திட்ட இலக்குகள் குறிக்கோள்களை அடைவதாகும். செயல்திட்டத்தின் எல்லை, நேரம், நிதி என்பன பொதுவான தடைகளாக கருதப்படும். இரண்டாம் நிலை சவாலாக கருதப்படுவது நிறுவனத்தின் முன்னரே தீர்மானிக்கபட்ட நோக்கங்களை அடைந்து கொள்வதற்கு செயற்திட்டத்திற்கு தேவையான உள்ளீடுகளை உச்சப் பயனைப் பெறத்தக்க முறையில் வளங்களை ஒதுக்கீடு செய்வதும் அவற்றை ஒன்றிணைத்து செயற்படுத்துவதுமாகும்.

செயற்றிட்டமென்பது செயற்றிட்டத்தின் நோக்கங்கள் குறிக்கோள்களை அடைந்து கொள்வதற்காக வளங்களையும் அவற்றிற்கு பொருத்தமான பல செயற்பாடுகளையும் முன் கூடியே தீர்மானிக்கும் ஒரு நடவடிக்கையாகும்.

வரலாறு

தொகு
 
உரோம படைவீரர்கள் கோட்டையொன்றை நிர்மானித்தல், கி.மு 113

பண்டைய சமூக பிரிவுகள் நகர்ப்புற நாகரீகங்களில் ஒரு நகரை தெரிவு செய்து பொழுது வர்த்தகம் மற்றும் தொழிலாளர் சிறப்பு சார்ந்து திட்டமிடல் சிக்கலாக இருந்தது. எகிப்து பிரமிடுகள் அல்லது சீனப் பெருஞ்சுவர் போன்ற சில பண்டைய கலாச்சாரங்கள் நேரம் மற்றும் வளங்களை திறமையாக மேலாண்மை செய்து செயற்றிட்டங்களை செயல்படுத்தியுள்ளனர். செயற்றிட்ட மேலாண்மை உள்நாட்டு கட்டுமான, பொறியியல், மற்றும் கனரக பாதுகாப்பு நடவடிக்கை உட்பட பயன்பாடு பல துறைகளில் இருந்து ஓரு தனித்துரையாக உருவாகியுள்ளது.[7]

தொழிற்புரட்சிக்குப் பின்பு சிக்கலான செயற்றிட்டங்கள் மற்றும் அதன் பன்முகத்தன்மையின் விளைவாக செயற்றிட்ட மேலாண்மை மிகவும் கடினமாக மாறியது. இந்தத் தேவையை எதிர்கொள்ளும் வகையில், செயற்றிட்ட மேலாண்மையில் புதிய கருத்துக்கள் 1900 ம் ஆண்டு முழுவதும் தோன்றத் தொடங்கியது.[8]

 
கென்றி கான்ற்(1861–1919), திட்டமிடல் மற்றும் கட்டுப்பாடு நுட்பங்களின் தந்தை

இருபதாம் நூற்றாண்டில் செயற்றிட்ட மேலாண்மை தந்தையர்கள் என தனித்து நின்ற இருவரை கூறிப்பிடலாம். அவரில் ஓருவர் கான்ட் விளக்கப்படம்த்தை நமக்களித்த கென்றி கான்ற் மற்றொவர் செயற்றிட்ட மேலாண்மைக்கு ஐந்து மேலாண்மை செயல்பாடுகளை வழங்கிய என்றி ஃபயோல் ஆவர். கான்ற் மற்றும் ஃபயோல் இருவரும் ஃபிரடரிக் வின்ஸ்லோ டெய்லரின் அறிவியல் மேலாண்மை கோட்பாடுகளின் மாணவர்களாக இருந்தனர். இவரின் கொள்கைகளே வேலை பிரிப்பு அமைப்பு மற்றும் வள ஒதுக்கீடு போன்ற செயற்றிட்ட மேலாண்மை விடயங்கள் உருவாக காரணமாக இருந்தன.

மேற்கோள்கள்

தொகு
  1. The Definitive Guide to Project Management. Nokes, Sebastian. 2nd Ed.n. London (Financial Times / Prentice Hall): 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-273-71097-4
  2. http://www.pmi.org/About-Us/About-Us-What-is-Project-Management.aspx
  3. *The Definitive Guide to Project Management. Nokes, Sebastian. 2nd Ed.n. London (Financial Times / Prentice Hall): 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-273-71097-4
  4. Lewis R. Ireland (2006) Project Management. McGraw-Hill Professional, 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-147160-X. p.110.
  5. Joseph Phillips (2003). PMP Project Management Professional Study Guide. McGraw-Hill Professional, 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-223062-2 p.354.
  6. "A Complete Project Management Guide". Kissflow.com. பார்க்கப்பட்ட நாள் 2018-11-23.
  7. David I. Cleland, Roland Gareis (2006). Global Project Management Handbook. "Chapter 1: "The evolution of project management". McGraw-Hill Professional, 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-146045-4
  8. The History of Project Management