செயா செட்லி

செயா செட்லி (Jaya Jaitly) (பிறப்பு 14 சூன் 1942) ஒரு இந்திய அரசியல்வாதியும், முன்னாள் சமதா கட்சியின் தலைவரும், ஒரு ஆர்வலரும், எழுத்தாளரும், இந்திய கைவினைப் பொருட்கள் கண்காணிப்பாளரும் ஆவார். 2002இல் நடந்த 'வெஸ்ட் எண்ட் நடவடிக்கை' சர்ச்சை காரணமாக இவர் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகினார் [1] 'வெஸ்ட் எண்ட் நடவடிக்கை'யின் ஒரு பகுதியாக கையூட்டு வழக்கில் தனது பங்குக்காக 2020ஆம் ஆண்டில் இவருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.[2] [3] [4]

மே 2008 இல் செயா செட்லி மாணவர்களிடம் உரையாற்றுகிறார்

சுயசரிதை தொகு

செயா செட்லி 14 சூன் 1942 அன்று சிம்லாவில் பிறந்தார். இவரது தந்தை கேரளாவைச் சேர்ந்த கே. கே. சேத்தூர், யப்பானுக்கான முதல் இந்திய தூதராவார்.[5] செயா தனது தந்தையுடன் சப்பான், மியான்மருக்குச் சென்றிருந்தார். இவரது பதின்மூன்று வயதில் இவரது தந்தை இறந்தார். இவரும் இவரது தாயும் தில்லிக்குத் திரும்பினர். அங்கு இவர் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர், அமெரிக்காவின் சுமித் கல்லூரியில் படிக்க உதவித்தொகை பெற்றார். கல்லூரியில் அசோக் செட்லி என்பவரைச் சந்தித்து 1965இல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அக்சய், அதிதி (பின்னர் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜாவை மணந்தார்) என்ற இரண்டு குழந்தைகள் பிறந்தனர். [5]

அரசியல் வாழ்க்கை தொகு

அரசியல்வாதியான ஜார்ஜ் பெர்னாண்டஸிடம் தனது கணவர் வேலை செய்யத் தொடங்கியபோது அவரைச் சந்தித்தார். பெர்னாண்டஸின் வேண்டுகோளின் பேரில், இவர் சோசலிச தொழிற்சங்கத்தில் சேர்ந்தார். 1984 சீக்கிய கலவரத்திற்குப் பிறகு, இவர் அரசியலில் தீவிரமாக இருந்தார். இவர் பெர்னாண்டஸ், மது லிமாயி ஆகிய இருவரையும் வழிகாட்டிகளாகக் குறிப்பிட்டார்.[5] அதே ஆண்டில், இவர் ஜனதா கட்சியில் சேர்ந்தார். பின்னர் கட்சி பிரிந்து ஜனதா தளத்தை உருவாக்கியது, பின்னர், இவரும் பெர்னாண்டஸும் சமதா கட்சியை உருவாக்கினர். இவரும் இவரது கணவர் அசோக்கும் பின்னர் விவாகரத்து பெற்றனர். அரசியலில் தனது தீவிர பங்கு முக்கிய காரணம் என்று இவர் கூறுகிறார். [5] 25 ஆண்டுகளுக்கும் மேலாக, பெர்னாண்டஸ் இவருடைய கூட்டாளியாக இருந்து வருகிறார். [6]

வெஸ்ட் எண்ட் நடவடிக்கை தொகு

தெகல்காவின் ஊழல் 'வெஸ்ட் எண்ட் நடவடிக்கை' வெடித்த பிறகு, இவர் இரண்டு லட்சம் ரூபாய் கையூட்டு வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டார். [7] சில நாட்களுக்குப் பிறகு 2002இல் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகினார். [8] 2012ஆம் ஆண்டில், தன்னை எதிர்த்த பெர்னாண்டஸின் உறவினர்களுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு செய்த பிறகு, ஆல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட பெர்னாண்டஸைப் பார்க்க இவர் அனுமதிக்கப்பட்டார். [9] 2020இல், அடல் பிகாரி வாச்பாயின் அரசாங்கத்தை சங்கடப்படுத்திய பாதுகாப்பு ஒப்பந்த கையூட்டு வழக்கில் இவரது பங்கிற்காக 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் இது இவரது பதவி விலகலுக்கும் வழிவகுத்தது. [3]

பணிகள் தொகு

செயா இந்தியாவின் கலை மற்றும் கைவினை குடிசைத் தொழில்களை ஊக்குவிப்பவராகவும் அதில் நிபுணராகவும் இருந்தார். 1986 ஆம் ஆண்டில் 'தஸ்த்கரி ஹாத் சமிதி' (கலை & கைவினை சந்தை) இவரால் நிறுவப்பட்டது, பாரம்பரிய இந்திய கைவினைஞர்களின் கிராமப்புற கைவினைஞர்கள் பல புதுமையான உத்திகள் மூலம் சந்தையில் நம்பிக்கையைப் பெற உதவுகிறது. இவரது பணி இந்தியா, பாக்கித்தான், வியட்நாம், ஆப்பிரிக்கா, ஆசியா போன்ற நாடுகளின் கைவினைஞர்களை ஒன்றிணைக்கிறது. மேலும், உலகெங்கிலும் உள்ள கைவினை பயிற்சியாளர்களை ஒன்றிணைத்து தங்கள் திறமைகளை பகிர்ந்து கொள்ளவும் திறனை வளர்க்கவும் இந்திய அரசால் தூதரகத்தில் ஒரு கருவியாக எடுத்துக்கொள்ளப்பட்டது. [10] [11] [12]

மேற்கோள்கள் தொகு

  1. "Jaya Jaitly: A journey into the self - The Times of India". பார்க்கப்பட்ட நாள் 2015-09-06.
  2. Service, Tribune News. "Tehelka expose: Jaya Jaitly, 2 others convicted in corruption case". Tribuneindia News Service (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-03.
  3. 3.0 3.1 Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  4. "Tehelka expose: Jaya Jaitly, 2 others get 4-year jail term" (in en-IN). The Hindu. 2020-07-30. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/national/tehelka-expose-jaya-jaitly-2-others-get-4-year-jail-term/article32229351.ece. 
  5. 5.0 5.1 5.2 5.3 "Jaya Jaitly: A journey into the self - The Times of India". பார்க்கப்பட்ட நாள் 2015-09-06."Jaya Jaitly: A journey into the self - The Times of India". Retrieved 6 September 2015.
  6. "He's My George!". www.outlookindia.com. Outlook India. பார்க்கப்பட்ட நாள் December 30, 2017.
  7. "www.firstpost.com/india/to-jaya-jaitly-others-in-tehelka-sting-preying-on-tejpal-now-is-opportunism-1283339.html". firstpost.com. பார்க்கப்பட்ட நாள் 2016-06-08.
  8. "Tehelka tapes: Together George Fernandez and Jaya Jaitly swam and together got caught in a tide : Cover Story - India Today". indiatoday.intoday.in. பார்க்கப்பட்ட நாள் 2015-09-06.
  9. "Supreme Court allows Jaya Jaitly to visit George Fernandes". பார்க்கப்பட்ட நாள் 2015-09-06.
  10. "A bazaar for India's folk arts". 4 November 2014.
  11. "Jaya Jaitly inaugrates [sic] 28th annual Dastkari Haat Samiti's in collaboration with Egyptian artistes in Delhi - Times of India".
  12. "Make in India, sell in India".
"https://ta.wikipedia.org/w/index.php?title=செயா_செட்லி&oldid=3286030" இலிருந்து மீள்விக்கப்பட்டது