செருபோகுரோவாசிய மொழி

செருபோகுரோவாசிய மொழி என்பது இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த தென் சிலாவிய மொழிகளுள் ஒன்று. இம்மொழி செருபியா, குரோவாசியா, பாசுனியாவும் எர்சகொவினாவும், மான்டினேகிரோ போன்ற நாடுகளின் முதன்மை மொழியாக உள்ளது. இம்மொழியை 15 மில்லியன் மக்கள் பேசுகின்றனர். பல வழக்கு மொழியான இதில் ஒன்றையொன்று புரிந்துகொள்ளக்கூடிய நான்கு வேறுபாடுகளைக் கொண்டது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்கள் மற்றும் சிரில்லிய எழுத்துக்களைக் கொண்டு எழுதப்படுகிறது.

செருபோகுரோவாசியம்
srpskohrvatski, hrvatskosrpski
српскохрватски, хрватскосрпски
நாடு(கள்) செர்பியா
 குரோவாசியா
 பொசுனியா எர்செகோவினா
 மொண்டெனேகுரோ
 கொசோவோ a
பிராந்தியம்மேற்கு பால்கன்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
15 மில்லியன்[1]  (date missing)
Standard forms
பொது செருபோ-குரோசியம் (வழக்கற்றது)
பேச்சு வழக்கு
இலத்தீன் எழுத்துக்கள்
சிரில்லிய எழுத்துக்கள்
மொழிக் குறியீடுகள்
ISO 639-1sh (வழக்கொழிந்தது)
ISO 639-2scr, scc (வழக்கொழிந்தது)
ISO 639-3Variously:
hbs — செருபோகுரோசியம்
srp — செருபியம்
hrv — குரோசியம்
bos — பாசுனியம்
  பல்லின மக்களால் செருபோகுரோசியம் பேசப்படும் பகுதிகள்.


Note: a கொசோவோ விடுதலை பிணக்கில் உள்ளது, 2008 கொசோவோ விடுதலை அறிவிப்பு கட்டுரையைப் பார்க்கவும்.

இம்மொழி, யூகோசுலாவியா உருவாவதற்குப் பல பத்தாண்டுகள் முன்பே, 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் சீர்தரப்படுத்தப்பட்டது. தொடக்கத்தில் இருந்தே செருபியச் சீர்தரம், குரோசியச் சீர்தரம் என இரட்டைச் சீர்தரங்கள் காணப்பட்டன. செருபியரும், குரோசியரும் இரு வேறு மதங்களைப் பின்பற்றுபவர்கள். வரலாற்று அடிப்படையில், வெவ்வேறு பேரரசுகளுக்குள் அடங்கியிருந்தவர்கள். இசுட்டக்காவியக் கிளைமொழியின் கிழக்கு எர்சகோவினியத் துணை வழக்கை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், சற்றே வேறுபட்ட இலக்கிய வடிவங்களைத் தமது சீர்தரங்களாகக் கொண்டிருந்தனர். விடுதலைக்குப் பின்னர், பொசுனியம், பொசுனியா-எர்சகொவினாவில் அலுவல் சீர்தரமாக்கப்பட்டது. மான்டனெகிரின் சீர்தரம் ஒன்றை உருவாக்குவதற்கும் முயற்சி செய்கின்றனர். இதனால், செருபோகுரோவாசியம் அவ்வப்பகுதிகளில், செருபியம், குரோசியம், பொசுனியம், மான்டனேகிரின் என இனப் பெயர்கள் இட்டு வழங்கப்படுகிறது. 20 ஆம் நூற்றாண்டில், செரிபோகுரோவாசியம் யூகோசுலாவிய இராச்சியத்தின் அலுவல் மொழியாகப் பயன்பட்டது. அப்போது இது "யூகோசுலாவியம்" எனப்பட்டது. பின்னர், யூகோசுலாவிய சோசலிசக் கூட்டாட்சிக் குடியரசின் அலுவல் மொழிகளுள் ஒன்றாக விளங்கியது. யூகோசுலாவியா கலைக்கப்பட்ட பின்னர், மொழி தொடர்பான மனப்போக்கில் மாற்றம் ஏற்பட்டு, இன, அரசியல் அடிப்படைகளில் மொழி பிரிவடைந்தது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Serbo-Croatian". Ethnologue.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செருபோகுரோவாசிய_மொழி&oldid=1481824" இலிருந்து மீள்விக்கப்பட்டது