வங்காளதேசத்தில் செர்பூர் மாவட்டத்தின் அமைவிடம்

செர்பூர் மாவட்டம் (Sherpur District) (வங்காள: শেরপুর জেলা, தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் மைமன்சிங் கோட்டத்தில் அமைந்துள்ளது. வங்காளதேசத்தின் வடக்கில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் செர்பூர் நகரத்தில் அமைந்துள்ளது.

நாட்டின் தலைநகரமான டாக்காவிலிருந்து 198 கிலோ மீட்டர் தொலைவில் வடக்கே இம்மாவட்டம் அமைந்துள்ளது.

பொருளடக்கம்

மாவட்ட எல்லைகள்தொகு

செர்பூர் மாவட்டத்தின் வடக்கில் இந்தியாவின் மேகாலயா மாநிலமும், தெற்கில் ஜமால்பூர் மாவட்டமும், கிழக்கில் மைமன்சிங் மாவட்டமும், மேற்கில் ஜமால்பூர் மாவட்டம் எல்லைகளாக உள்ளது. [1]

மாவட்ட நிர்வாகம்தொகு

1364.67 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட செர்பூர் மாவட்டம் ஐந்து துணை மாவட்டங்களைக் கொண்டுள்ளது.[2] அவைகள்: ஜெனய்கட்டி, நக்ளா, நலிதாபரி, செர்பூர் மற்றும் ஸ்ரீபர்தி ஆகும். மேலும் இம்மாவட்டத்தில் ஐம்பத்தி இரண்டு கிராம ஒன்றியக் குழுக்களும், 434 வருவாய் கிராமங்களும், 695 கிராமங்களும் உள்ளது. இம்மாவட்டத்தின் அஞ்சல் சுட்டு எண் 2100 ஆகும். தொலைபேசி குறியிடு எண் 0931 ஆகும். இம்மாவட்டம் மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.

பொருளாதாரம்தொகு

இம்மாவட்டம் வேளாண்மைப் பொருளாதாரத்தை நம்பியுள்ளது. இங்கு கோங்சா ஆறு, பழைய பிரம்மபுத்திர ஆறு, வகாய் ஆறு, பதாய் ஆறு, கங்சா ஆறு, சோமேஸ்வரி ஆறு, மலிஜ்கி ஆறு, நேத்தாய் போன்ற ஆறுகள் பாய்வதால் நீர் வளமும், மண் வளமும் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் நெல், சணல், கோதுமை, நிலக்கடலை, எண்ணெய் வித்துக்கள், மா, சோளம், கரும்பு உருளைக்கிழங்கு, மிளகு போன்றவைகள் பயிரிடப்படுகிறது.

மக்கள் தொகையியல்தொகு

1364.67 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இம்மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி (இறுதி முடிவு அறிவிக்கப்படவில்லை) மக்கள் தொகை 13,58,325 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 6,76,388 ஆகவும், பெண்கள் 6,81,937 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் 99 ஆண்களுக்கு 100 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 995 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 37.9 % ஆக உள்ளது.[3]இம்மாவட்டத்தின் பெரும்பாலான மக்கள் இசுலாமிய சமயத்தைப் பின்பற்றுபவர்களாகவும், வங்காள மொழியைப் பேசுபவர்களாகவும் உள்ளனர்.

கல்விதொகு

வங்காளதேசத்தின் பிற மாவட்டங்களைப் போன்று, இம்மாவட்டத்திலும் நான்கு படிகள் கொண்ட கல்வி அமைப்புகள் உள்ளது. அவைகள்: ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட தொடக்கப்பள்ளிகளும் (கிரேடு 1 – 5), ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட செகண்டரி பள்ளிகளும் (கிரேடு 6 – 10), இரண்டாண்டு படிப்பு கொண்ட மேனிலைப்பள்ளிகளும் (கிரேடு 11 – 12), நான்கு ஆண்டு படிப்பு கொண்ட இளநிலை பட்டப்படிப்பு மற்றும் ஒராண்டு கால முதுநிலை பட்டப்படிப்பு கொண்ட பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் உள்ளது. வங்காள மொழியுடன், ஆங்கில மொழியும் அனைத்து நிலைகளிலும் கற்பிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=செர்பூர்_மாவட்டம்&oldid=2179400" இருந்து மீள்விக்கப்பட்டது