செலீனோசிஸ்டீன்

செலீனோசிஸ்டீன் [Selenocysteine (Se-Cys)] என்னும் அமினோ அமிலம் பல்வேறு நொதிகளில் (உதாரணமாக, குளூடாதையோன் பெராக்சைடுகள், டெட்ராஅயோடோதைரோனின் அயோடின் நீக்கிகள், தையோரெடாக்சின் குறைப்பிகள், ஃபார்மேட் ஹைட்ரசன் நீக்கிகள், கிளைசின் குறைப்பிகள் மற்றும் சில ஹைட்ரசன் ஏற்றிகள்) உள்ளது.

செலீனோசிஸ்டீன்[1]
L-selenocysteine-2D-skeletal.png
Selenocysteine-3D-vdW.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
3-செலனைல்-2-அமினோ புரோபநோயிக் அமிலம்
வேறு பெயர்கள்
இனங்காட்டிகள்
10236-58-5
ChEMBL ChEMBL109962 Yes check.svgY
ChemSpider 23436 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C05688 Yes check.svgY
பப்கெம் 25076
பண்புகள்
C3H7NO2Se
வாய்ப்பாட்டு எடை 168.07 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

பெயரிடல்முறைமைதொகு

வேதிப்பெயர் ஒழுங்குமுறைக் குழுவினால் (IUPAC/IUBMB) செலீனோ சிஸ்டீனின் மூவெழுத்து மற்றும் ஓரெழுத்தாக, Sec மற்றும் U முறையேப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.[2]

கட்டமைப்புதொகு

சிஸ்டீனைப் போன்ற கட்டமைப்பை செலீனோசிஸ்டீன் கொண்டிருந்தாலும், கந்தகத்திற்கு பதிலாக செலீனியம் அணுவைக் கொண்டுள்ளதால் செலீனோல் தொகுதியை உருவாக்குகிறது. ஒன்று (அ) அதற்கு மேற்பட்ட செலீனோ சிஸ்டீன் படிவங்களைக் கொண்டப் புரதங்கள் செலீனோ புரதங்கள் என்றழைக்கப்படுகின்றன.

உயிரியல் பண்புகள்தொகு

செலீனோசிஸ்டீன், சிஸ்டீனைக் காட்டிலும் குறைந்த காடித் தன்மை எண்ணையும் (pKa), ஆனால் அதிக குறைப்புத் திறனையும் கொண்டதாகவும் உள்ளது. இப் பண்புகள், செலீனோ சிஸ்டீனை எதிர் ஆக்சிகரணப் புரதங்களில் பயன்பட உதவுகிறது.

மேற்கோள்கள்தொகு

  1. Merck Index, 12th Edition, 8584
  2. IUPAC-IUBMB Joint Commission on Biochemical Nomenclature (JCBN) and Nomenclature Committee of IUBMB (NC-IUBMB) (1999). "Newsletter 1999" (reprint, with permission). European Journal of Biochemistry 264 (2): 607–609. doi:10.1046/j.1432-1327.1999.news99.x. http://www.chem.qmul.ac.uk/iubmb/newsletter/1999/item3.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=செலீனோசிஸ்டீன்&oldid=2042918" இருந்து மீள்விக்கப்பட்டது