செல்மே

செங்கிஸ்கானின் தளபதி மற்றும் நெருங்கிய துணை ஆள்

செல்மே (மொங்கோலியம்: Зэлмэ, c.1160 - ?) ஒரு படைத்தலைவரும் செங்கிஸ் கானின் நெருங்கிய தோழரும் ஆவார். இவர் மங்கோலிய படைத்தளபதி சுபுதையின் அண்ணன் ஆவார்.[1] இவர் ஓர் ஆயிரம் வீரர்களுக்கு (மிங்கன்) தலைவனாக நியமிக்கப்பட்டார்.

சுயசரிதை

தொகு

மங்கோலியர்களின் இரகசிய வரலாற்றின்படி இவர் குழந்தையாய் இருந்தபொழுது தெமுசினிடம் (செங்கிஸ் கான்) கொடுக்கப்பட்டார், ஆனால் இளவயது காரணமாக திருப்பி அனுப்பப்பட்டார். தெமுசின் வாங் கானை சந்தித்தபோது, இவரது தந்தை சர்சியுடை மீண்டும் இவரை தெமுசினிடம் கொடுத்தார். இவர் எதற்காக கொடுக்கப்பட்டார் என்பதற்கான தெளிவான தகவல்கள் இல்லை.

வருங்காலத் தளபதி செபேயின் அம்பால் தெமுசின் கழுத்தில் காயமுற்றபோது, அவரிடமிருந்து விஷம் கலந்த இரத்தத்தை உறிஞ்சி வெளியெடுத்துக் காப்பாற்றினார். மேலும் தெமுசினுக்காக எதிரிகளின் கூடாரத்திலிருந்து தயிரை (பால் கிடைக்காததால்) இரவு நேரத்தில் எடுத்து வந்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Richard A. Gabriel, Subotai the Valiant: Genghis Khan's Greatest General, Westport, Conn.: Praeger, 2004, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-275-97582-7, pp. 7, 6.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செல்மே&oldid=2697057" இலிருந்து மீள்விக்கப்பட்டது