செ. இளவழகி

செ. இளவழகி (S. Ilavazhaki) (பிறப்பு:1984) இந்திய கேரம் வீராங்கனை ஆவார். இவர் உலக கேரம் போட்டிகளில் இருமுறை வெற்றி பெற்றுள்ளார்.[1]

செ. இளவழகி
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியன்
பிறப்பு1984
வியாசர்பாடி, வட சென்னை, இந்தியா
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுகேரம்

பிறப்புதொகு

இவர் 1984 ஆம் ஆண்டில் சென்னை, வியாசர்பாடியில் பிறந்தார். இவரின் தந்தை எ. இருதயராஜ் ஆட்டோரிக்‌ஷா ஓட்டுநர் ஆவார். இவரின் தாய் செல்வி இல்லத்தரசி. இவருக்கு இரு இளைய சகோதரிகள் உள்ளனர்.

தொழில் வாழ்க்கைதொகு

இவர் திருவள்ளுவர் மாவட்ட கேரம் சங்கத்தின் உறுப்பினராக உள்ளார்.மேலும் இந்தியா சார்பாக ஆசிய போட்டிகளிலும் , சர்வதேச கேரம் போட்டிகளிலும் விளையாடி வருகிறார்.[2] 2008 ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான கேரம் போட்டியில் முன்னாள் வாகையாளர் ராஷ்மி குமாரியினை வீழ்த்தி பட்டம் வென்றார்.[3][4]

அதே ஆண்டில் நடைபெற்ற உலக கேரம் போட்டியின் அரையிறுதிப் போட்டியில் ராஷ்மி குமாரியினை வீழ்த்தினார். பின் இறுதிப் போட்டியில் பி. நிர்மலா என்பவரை 25-11, 25-11 எனும் கணக்கில் வீழ்த்தி பட்டம் பெற்றார்.[5] இந்தப் போட்டிக்கு முன்னாள் இந்திய ரிசர்வ் வங்கி அலுவலர் கே. விஜ்யல் என்பவர் இவருக்கு பொருளாதார உதவிகளைச் செய்தார்.[6] 2012 ஆம் ஆணடில் நடைபெற்ற உலக கேரம் போட்டியில் ராஷ்மி குமாரியிடம் தோல்வியுற்று இரண்டாமிடம் பெற்றார். பின் இரட்டையர் பிரிவில் ராஷ்மி குமாரியுடன் இணைந்து பட்டம் பெற்றார்.[7][8][9]

சான்றுகள்தொகு

  1. "Ilavazhaki. S | Deccan Chronicle" (en).
  2. "Thiruvallur District Carrom Association, World Carrom Champion Academy".
  3. "Strike and pocket queen". The New Indian Express. http://www.newindianexpress.com/cities/chennai/2017/sep/08/strike-and-pocket-queen-1654288.html. 
  4. "Senior national carrom tourney in Chennai from tomorrow". Outlookindia. https://www.outlookindia.com/newsscroll/senior-national-carrom-tourney-in-chennai-from-tomorrow/1176980. 
  5. "Ilavazhagi is World champion" (in en-IN). The Hindu. 2008-02-19. http://www.thehindu.com/todays-paper/tp-sports/Ilavazhagi-is-World-champion/article15169357.ece. 
  6. "5th World Championship » International Carrom Federation" (en-US).
  7. "6th World Championship » International Carrom Federation" (en-US).
  8. "ONGC::Carrom".
  9. "ONGC::ONGCian emerges International ‘Champion of Champions’".
"https://ta.wikipedia.org/w/index.php?title=செ._இளவழகி&oldid=2719953" இருந்து மீள்விக்கப்பட்டது