சேசுலதா கொசுரு

டாக்டர் சேசுலதா கொசுரு (Seshulatha Kosuru) இவர் ஒரு முன்னணி கருநாடக இசைக்கலைஞரும் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த ஆசிரியரும் ஆவார். இவர் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பரவலாக நிகழ்ச்சிகளை பல இசை நிகழ்ச்சிகளை நிகழ்தியுள்ளார். மேலும், பல முன்னணி அமைப்புகளிடமிருந்து ஏராளமான விருதுகளையும், பட்டங்களையும் பெற்றுள்ளார். இவர் பல கருநாடக மற்றும் பக்திப் பாடல்களின் தொகுப்புகளை இசையமைத்து வெளியிட்டுள்ளார். மேலும் இவர் பல நடன நிகழ்ச்சிகளுக்கும் இசையமைத்துள்ளார். [1]

பின்னணி

தொகு

இந்தியாவின் ஐதராபாத்த்திலுள்ள பொட்டி சிறீராமுலு தெலுங்கு பல்கலைக்கழகத்தில் இசையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். தியாகராஜருக்கு சிறப்பு குறிப்புடன் இசை டிரினிட்டியின் ஒற்றை இசையமைப்பைக் கொண்ட அரிய ஜன்ய ராகங்களை ஆராய்சி செய்தார். திருப்பதி பத்மாவதி மகிலா பல்கலைக்கழகத்தில் இசையில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். மேலும், உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் தெலுங்கு இலக்கியத்தில் முதுகலையும் மற்றும் ஆந்திர பல்கலைக்கழகத்தில் இசையில் இளங்கலையும் பெற்றுள்ளார். [2]

இவர் தனது தாயார் மற்றும் சிறீ சோடவரபு சுப்பா ராவ், சிறீ தேசபதி ராஜு, சிறீ சிஸ்து பிரபாகர கிருட்டிண மூர்த்தி சாஸ்திரி ஆகியோரின் கீழ் தனது ஆரம்ப பயிற்சியை மேற்கொண்டார். மேலும் சிறீ பாலந்திரபு ரஜனிகாந்த ராவ், சிறீ ஏ. நாராயண ஐயர், சிறீ கே. ஆர். கணபதி மற்றும் வி. எல். ஜானகி ராம் போன்ற புகழ் பெற்ற இசை மேதைகளிடம் இவர் பயிறிப் பெற்றுள்ளார். 1981-88 ஆம் ஆண்டில் மறைந்த சிறீவோலெட்டி வெங்கடேஸ்வரூலு என்பவரிடமிருந்து ஆந்திர மாநில சங்கீத அகாதமியின் உதவித்தொகையுடன் மேம்பட்ட பயிற்சியைப் பெற்றார். மேலும் சங்கீதா கலாநிதி சிறீ நேதுனூரி கிருட்டிணமூர்த்தி என்பவரிடம் மேம்பட்ட பயிற்சியையும் பெற்றார்.

தொழில்

தொகு

சேசுலதா கொசுரு இந்தியாவிலும் வெளிநாட்டிலும் ஏராளமான நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறார். இவர் 1989 முதல் தெலுங்கு பல்கலைக்கழகத்தின் இசைத் துறை ஆசிரியராக உள்ளார். பாரம்பரிய மற்றும் மெல்லிசைக் கலைஞரான இவர் ஐதராபாத் அகில இந்திய வானொலியின் தரக்கலைஞர் ஆவார் இவர் அகில இந்திய வானொலி, தூர்தர்ஷன் மற்றும் பிற தொலைக்காட்சிகளில் பாரம்பரியம் & பக்தி இசையில் நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். தொலைக்காட்சி மற்றும் பிற இசை சங்கங்களில் பல இசை நிகழ்ச்சிகளில் நடுவராக இவர் பணியாற்றி வருகிறார். இவர் பல பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் பல நடன நிகழ்ச்சிகளுக்கும் (சர்வம் சாய் மயம், சம்பவாமி யுகே யுகே, கோடா தேவி போன்றவை) மற்றும் இசை ஓபராக்களுக்கும் இசையமைத்துள்ளார். பல்வேறு விரிவுரை நிகழ்ச்சிகள், வீட்டில் தனி வகுப்புகள் மற்றும் இணையவழி பயிற்சி ஆகியவற்றையும் நடத்துகிறார். இவர் தற்போது சிஃபாஸ் (சிங்கப்பூர் இந்திய நுண்கலை அமைப்பு) என்ற நிறுவனத்தில் ஆசிரியராகவும் அகாதமி பதிவாளராகவும் உள்ளார்.

விருதுகள்

தொகு

1984 ஆம் ஆண்டில் பி.ஏ. இசையில் முதலிடம் பிடித்ததற்காக துவாரம் வெங்கடசாமி நாயுடு மற்றும் திருமதி இவதுரி பாலா ஸ்வரஸ்வதி தேவி நினைவு பணப் பரிசுகள் பெற்றுள்ளார். 1987 ஆம் ஆண்டில் அரிமா சங்கத்திலிருந்து மாவட்ட மற்றும் மாநில அளவில் 'சிறந்த இளம் திறமையான நபர் விருது' பெற்றுள்ளார். மகாராட்டிராவிலிருந்து கில் பாரதீய கந்தர்வ வித்யாலயா மண்டல் சங்க அலங்காரில் முதலிடம் பிடித்ததற்காக திருமதி. ருக்மிணி ஜெகநாதன் புரஸ்கார் விருது இவருக்கு வழங்கப்பட்டது.

குறிப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேசுலதா_கொசுரு&oldid=2934901" இலிருந்து மீள்விக்கப்பட்டது