சேமக்கலம் (பொறியியல்)

பொதுவாகப் பொறியியலில், சேமக்கலம் (accumulator) என்பது மின்சக்தியைச் சேமித்துப் பிறகு பயன்படுத்த உதவுகிறது. இதன் முதல் வடிவமைப்பு பிளாண்டே என்பவரால் செய்யப்பட்டதாகும். நீரழுத்தச் சேமக்கலம் (Hydraulic accumulator) என்பது சுருங்கா நீரழுத்தத் திரவத்தை ஒரு வெளிப்பொருளினால் அழுத்தங்கொடுக்கும்படியாத ஓர் அழுத்தச் சேமிப்புத் தேக்கம் ஆகும். அந்த வெளிப்பொருளானது சுருள்வில், உயர்ந்த எடை அல்லது அழுத்தப்பட்ட வாயு ஆகியவையாகும்.

தற்காலத்தில் இரண்டு முக்கிய சேமக்கலங்கள் பயன்படுத்தப்படுகிறது. அவை பின்வருமாறு:

  1. காரீய அமில சேமக்கலம்
  2. எடிசன் அல்லது நிக்கல்-இரும்பு சேமக்கலம்

காரீய அமில சேமக்கலம் தொகு

இந்த வகை சேமக்கலத்தில் இரு காரீயத் தகடுகளை கந்தக அமிலம் நிறைந்த பாத்திரத்தில் வைக்கப்பட்டு, மின்னோட்டத்தை அதன் வழியே செலுத்தும் பொழுது ஒரு தகடு காரீயமாகவும், மற்றொரு தகடு காரீயடைஆக்சைடாக மாறி, மின்சாரத்தை சேமிக்கிறது. சராசரியாக இதன் மின்னழுத்தம் 2 வோல்டாக இருக்கும்.

எடிசன் அல்லது நிக்கல்-இரும்பு சேமக்கலம் தொகு

இதில் பொட்டாசியம் ஹைட்ராக்‌சைடு கரைசலுக்குள் நிக்கல் ஹைட்ரேடு தகடையும், இரும்பு ஆக்சைடு தகடையும் வைத்திருப்பர். இந்த தகடுகள் நிக்கல் டை ஆக்சைடாகவும், இரும்பாகவும் மாறி அதன் வழியிலே மின்னோட்டம் செல்லுகின்றன. சராசரியாக இதன் மின்னழுத்தம் 1.4 வோல்டாக இருக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேமக்கலம்_(பொறியியல்)&oldid=2746087" இலிருந்து மீள்விக்கப்பட்டது