சேரலைட்டு
பாசுப்பேட்டு கனிமம்
சேரலைட்டு (Cheralite) என்பது CaTh(PO4)2.[1][2] என்ற மூலக்கூற்று வாய்ப்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். இது நீரற்ற பாசுபேட்டு வகை கனிமமாகும். அட்டோனைட்டு, மோனசைட்டு ஆகிய கனிமங்களுடன் சம உருவமைப்பை கொண்டுள்ளது. இது அமைப்பில் உள்ள முழுமையான நேர்மின் அயனி மாற்றீட்டின் விளைபொருளாக இக்கனிமம் கருதப்படுகிறது.
2 LREE3+ ↔ Ca2+ + Th4+.
இது முன்னதாக இக்கனிமம் பிரபாண்டைட்டு என்ற பெயரில் அறியப்பட்டது.
இயற்பண்புகள்:[2]
பண்பு | மதிப்பு |
---|---|
பளபளப்பு | கண்ணாடி பளபளப்பு |
விவரிப்பு | மங்கல் அல்லது மெழுகு மிளிர்வு |
நிறம் | சாம்பல் பழுப்பு முதல் செம்பழுப்பு வரை (விளிம்புகளில்), வெளிர் மஞ்சள், பழுப்பு பச்சை |
கடினத் தன்மை | மோவின் கடினத்தன்மை 5 |
அடர்த்தி | 4.72 - 5.02 கி/செ.மீ3 |
மேற்கோள்கள்
தொகு- ↑ Kees Linthout. "Tripartite division of the system 2REEPO4-CaTh (PO4)2-2ThSiO4, discreditation of brabantite, and recognition of cheralite as the name for members dominated by CaTh(PO4)2, Canadian Mineralogist 45 (2007) 503-508" (PDF). பார்க்கப்பட்ட நாள் May 11, 2018.
- ↑ 2.0 2.1 Cheralite on Mindat.org