சைதை சா. துரைசாமி

சைதை சா. துரைசாமி (Saidai Sa. Duraisamy, பிறப்பு :பெப்ரவரி 16, 1951) தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிமுக கட்சி அரசியல்வாதியாவார். 1984ஆம் ஆண்டு சைதாப்பேட்டைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது அரசியல் வழிகாட்டியாகக் கருதிய ம. கோ. இராமச்சந்திரன் மறைவிற்குப் பிறகு அரசியல் ஈடுபாட்டைக் குறைத்துக் கொண்டார். தமிழ்நாட்டில் இந்திய ஆட்சிப் பணி & இந்தியக் காவல் பணித் தேர்வுகளுக்கு பயிற்சியளிக்கும் மனிதநேயம் என்ற மையத்தின் நிறுவனரும் தலைவருமாக உள்ளார். இந்த அமைபு இந்திய குடிசார் பணிகளுக்கான நடுவண் தேர்வாணைய தேர்வுகள், தமிழ்நாடு தேர்வாணையத் தேர்வுகள் ஆகியவற்றிற்கு பயிற்சி அளிக்கிறது. தமிழ்நாடு சட்டமன்ற 2011 தேர்தல்களில் அதிமுக சார்பில் கொளத்தூர் தொகுதியில், முன்னாள் துணை முதல் அமைச்சரும் திமுகவின் வேட்பாளருமான மு.க.ஸ்டாலினிடம் குறைந்த வாக்கெண்ணிக்கையில் தோல்வி அடைந்தார். அதனைத் தொடர்ந்து 2011ஆம் ஆண்டின் உள்ளாட்சி தேர்தல்களில் சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு நேரடிப் போட்டியில் வென்று சென்னை மாநகராட்சியின் முதல் அதிமுக மேயர் என்ற பெருமை பெற்றுள்ளார்.[1]

சைதை சா. துரைசாமி
சென்னை மாநகராட்சி
பதவியில்
2011–2016
முன்னவர் மா. சுப்பிரமணியம்
சைதாப்பேட்டைத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1984–1989
முன்னவர் டி. புருசோத்தமன் (திமுக)
பின்வந்தவர் ஆர். எஸ். சிறீதர் (திமுக)
தனிநபர் தகவல்
பிறப்பு பெப்ரவரி 16, 1951 (1951-02-16) (அகவை 70)
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி அஇஅதிமுக
இருப்பிடம் சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணி அரசியல்வாதி
சமயம் இந்து

மேற்கோள்கள்தொகு

வெளியிணைப்புகள்தொகு

முன்னர்
மா. சுப்பிரமணியம்
சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர்
(மேயர்)

2011-2016
பின்னர்
தேர்தல் நடைபெறவில்லை
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைதை_சா._துரைசாமி&oldid=3147572" இருந்து மீள்விக்கப்பட்டது