சைலன்ஸ்டு (2011 வருடத் திரைப்படம்)

சைலன்ஸ்டு அல்லது தி குருசிபிள் 2011 ஆம் ஆண்டு வெளியான தென் கொரிய திரைப்படம். 2000ம் ஆண்டுகளின் காலகட்டத்தில் தென் கொரியாவின் ஓர் மாற்றுத்திறனாளிப் பள்ளியில் நடந்த உண்மை நிகழ்வின் அடிப்படையில் 2009 ஆம் ஆண்டு எழுதப்பட்ட நாவலின் திரை வடிவம்[1] .

சைலன்ஸ்டு திரைப்படக் காட்சி

செவிப்புலன் திறன் குறைந்த குழந்தைகளுக்கான பள்ளியில் பணியாற்ற வரும் புது ஆசிரியர் அப்பள்ளியில் படிக்கும் அக்குழந்தைகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளைப் பற்றி அறிவதையும் அதைத் தொடர்ந்த நிகழ்வுகளும் கதைக்களமாக உள்ளன.

இத்திரைப்படம் ஏற்படுத்திய தாக்கத்தால் பொதுமக்களின் எதிர்ப்பு அதிகரிக்கவே, குறைந்த தண்டனை வழங்கப்பட்டு மூடப்பட்டிருந்த உண்மை நிகழ்வின் வழக்கு மீண்டும் திறக்கப்பட்டது.[2][3]

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு