சைவ சித்தாந்த சாத்திர வரலாறு (நூல்)

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு என்பது க.வெள்ளைவாரணனார் அவர்களால் இயற்றப்பெற்ற நூலாகும். இந்நூலை தஞ்சை தமிழப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் இ.சுந்தரமூர்த்தி அணிந்துரை எழுதியுள்ளார்.

இந்நூலில் சிவவழிபாட்டின் தொன்மையும் உலகளாவிய விரிவும், தொல்காப்பியர் கூறும் வழிபாட்டு நெறிகளும், தத்துவக் கொள்ளைகளும், சங்கச் செய்யுட்கலில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாட்டு தத்துவக் கொள்கைகளும், சங்கவிலக்கியத்தில் சிவன் வழிபாடும் சைவ சமயத் தத்துவ உண்மைகளும் இடம்பெற்றுள்ள.

அத்துடன் திருவள்ளுவர் கூறும் வாழ்வியல் நெறிகளும், தத்துவ உண்மைகளும், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள சிவநெறிக் கோட்பாடுகளும், திருமந்தரம் கூறும் சைவ சித்தாந்தக் கொள்கைகளும், திருமுறையில் இடம்பெற்றுள்ள சிவநெறிக் கொள்கைகளும் ஆய்வு செய்து வெளியிடப்பட்டுள்ளன.