சொர்ணவதி ஆறு
சொர்ணவதி ஆறு காவிரியின் துணை ஆறுகளில் ஒன்றாகும். இது கர்நாடகத்தின் நசுருர் மலைப்பகுதியில் தோன்றி 88 கிமீ ஓடிப் பின்னர் காவிரியில் கலக்கிறது. இது 1,787 சதுர கிமீ நீர்பிடிப்பு பகுதியை கொண்டுள்ளது. இதன் குறுக்கே அட்டிகுலிபுரா (Attigulipura) என்ற இடத்தில் அணை கட்டப்பட்டுள்ளது. இவ்வணையானது சாம்ராஜ்நகர் வட்டத்தில் உள்ளது. இது சிக்கஹொலே நீர்த்தேக்கத் திட்டத்திலிருந்து 3 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. அணை திட்டமிடப்பட்டபோது எதிர்பார்த்த அளவு தற்போது நீர்வரத்து இல்லாததால் சிக்கஹொலே நீர்த்தேக்கத்திலிருந்து உபரி நீர் சொர்ணவதி அணைக்கு 2.8 கிமீ நீளமுடைய கால்வாய் மூலம் கொண்டு வரப்படுகிறது.
சொர்ணவதி என்னும் ஆற்றைச் சிலப்பதிகாரம் பொன்னி என்னும் தூய தமிழ்ப்பெயரால் குறிப்பிடுகிறது. 'பொன்படு நெடுவரை'ப் பகுதியில் இது தோன்றுவதால் இதற்குப் பொன்னி என்று பெயர். சங்ககாலப் புலவர் ஆவூர் மூலங்கிழார் பாடல் (புறநானூறு 166) இதனைத் தெளிவுபடுத்துகிறது.
உசாத்துணை
தொகுhttp://waterresources.kar.nic.in/salient_features_suvarnavathy.htm