சொல்லாக்க ஆட்ட எழுத்துப் பங்கீடு
சொல்லாக்க ஆட்ட எழுத்துப் பங்கீடு (Scrabble Letter Distributions) என்பது சொல்லாக்க ஆட்டத்தின் பல்வேறுபட்ட பதிப்புகளில் பயன்படுத்தப்படும் காய்களில் எழுத்துகள் பங்கிடப்பட்டுள்ள முறை ஆகும். ஒவ்வொரு மொழியிலும் எழுத்துகளின் பயன்படுத்தப்படும் விழுக்காடு வேறுபடுவதாலேயே சொல்லாக்க ஆட்ட எழுத்துப் பங்கீடும் மொழிக்கு மொழி வேறுபடுகின்றது. சொல்லாக்க ஆட்டத்தில் குறைவாகப் பயன்படுத்தப்படும் எழுத்துக்குக் கூடிய புள்ளிகள் வழங்குதல் பொதுவான விதியாகும்.
பெரும்பாலான மொழிகளுக்கான சொல்லாக்க ஆட்டங்களில் 102 காய்கள் பயன்படுத்தப்படுகின்றன.
உள்ளடக்கம் | ||
---|---|---|
ஆங்கிலம்
தொகுகாய் | எண்ணிக்கை | புள்ளிகள் | ||
---|---|---|---|---|
A | 9 | 1 | ||
B | 2 | 3 | ||
C | 2 | 3 | ||
D | 4 | 2 | ||
E | 12 | 1 | ||
F | 2 | 4 | ||
G | 3 | 2 | ||
H | 2 | 4 | ||
I | 9 | 1 | ||
J | 1 | 8 | ||
K | 1 | 5 | ||
L | 4 | 1 | ||
M | 2 | 3 | ||
Nநடுமேசைட்ஸ் kvetcd | 6 | 1 | ||
O | 8 | 1 | ||
P | 2 | 3 | ||
Q | 1 | 10 | ||
R | 6 | 1 | ||
S | 4 | 1 | ||
T | 6 | 1 | ||
U | 4 | 1 | ||
V | 2 | 4 | ||
W | 2 | 4 | ||
X | 1 | 8 | ||
Y | 2 | 4 | ||
Z | 1 | 10 | ||
வெற்றுக் காய் | 2 | 0 |
ஆங்கிலச் சொல்லாக்க ஆட்டக் காய்களின் தொகுதி 100 காய்களைப் பின்வருமாறு கொண்டிருக்கும்.
- புள்ளியில்லை: வெற்றுக் காய் × 2
- ஒரு புள்ளி: E × 12, A × 9, I × 9, O × 8, N × 6, R × 6, T × 6, L × 4, S × 4, U × 4
- இரண்டு புள்ளிகள்: D × 4, G × 3
- மூன்று புள்ளிகள்: B × 2, C × 2, M × 2, P × 2
- நான்கு புள்ளிகள்: F × 2, H × 2, V × 2, W × 2, Y × 2
- ஐந்து புள்ளிகள்: K × 1
- எட்டுப் புள்ளிகள்: J × 1, X × 1
- பத்துப் புள்ளிகள்: Q × 1, Z × 1
1938இல் இவ்வாட்டத்தை ஆல்விரடு மோசெர் பட்சு கண்டுபிடித்ததிலிருந்து மேற்கூறிய பங்கீடு மாற்றமடையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
2004இல் மேட்டலால் வெளியிடப்பட்ட மீச்சொல்லாக்க ஆட்டத்தில் 200 காய்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை பின்வருமாறு:-
- புள்ளியில்லை: வெற்றுக் காய் × 4
- ஒரு புள்ளி: E × 24, A × 16, O × 15, T × 15, I × 13, N × 13, R × 13, S × 10, L × 7, U × 7
- இரண்டு புள்ளிகள்: D × 8, G × 5
- மூன்று புள்ளிகள்: C × 6, M × 6, B × 4, P × 4
- நான்கு புள்ளிகள்: H × 5, F × 4, W × 4, Y × 4, V × 3
- ஐந்து புள்ளிகள்: K × 2
- எட்டுப் புள்ளிகள்: J × 2, X × 2
- பத்துப் புள்ளிகள்: Q × 2, Z × 2
ஆபிரிக்கானம்
தொகுஆபிரிக்கானப் பதிப்பில் பின்வரும் 102 காய்கள் பயன்படுத்தப்படுகின்றன.
- புள்ளியில்லை: வெற்றுக் காய் × 2
- ஒரு புள்ளி: E × 16, A × 9, I × 8, D × 6, N × 8, O × 6, R × 6, S × 6, T × 6
- இரண்டு புள்ளிகள்: G × 4, H × 3, L × 3
- மூன்று புள்ளிகள்: K × 3, W × 3
- நான்கு புள்ளிகள்: M × 2, U × 2, Y × 2
- ஐந்து புள்ளிகள்: P × 2, V × 2
- எட்டுப் புள்ளிகள்: B × 1, F × 1
- பத்துப் புள்ளிகள்: J × 1
ஆபிரிக்கான மொழியில் Zஉம் Xஉம் பயன்படுத்தப்பட்டாலும் அவை மிகக் குறைவாகவே பயன்படுத்தப்படுவதால் ஆபிரிக்கானச் சொல்லாக்க ஆட்டத்தில் இடம்பெறவில்லை. ஆனாலுங்கூட, வெற்றுக் காயை Z ஆகவோ X ஆகவோ பயன்படுத்த முடியும். ஆபிரிக்கான மொழியில் கடன் பெற்றுப் பயன்படுத்தப்படும் ஒரு சில சொற்களைத் தவிர, ஏனைய சொற்களில் Cஉம் Qஉம் பயன்படுத்தப்படாததால் அவ்வெழுத்துகளும் உள்ளடக்கப்படவில்லை.
அரபு
தொகுஅரபுப் பதிப்பில் பின்வரும் 100 காய்கள் பயன்படுத்தப்படுகின்றன.
- புள்ளியில்லை: வெற்றுக் காய் × 2
- ஒரு புள்ளி: ﺍ × 8, ﻝ × 4, ﺝ × 4, ﺡ × 3, ﺥ × 3, ﻡ × 3, ﻥ × 3, ﻩ × 3, ﻭ × 3, ﻯ × 3
- இரண்டு புள்ளிகள்: ﺏ × 4, ﺭ × 3, ﺕ × 4, ﺩ × 3, ﺱ × 3, ﺙ × 3
- மூன்று புள்ளிகள்: ﻑ × 3, ﻕ × 3, ﺫ × 3, ﺵ × 3, ﺯ × 3
- நான்கு புள்ளிகள்: ﺹ × 3, ﺽ × 3, ﻉ × 3, ﻙ × 3, ﻁ × 2
- ஐந்து புள்ளிகள்: ﻅ × 2
- ஆறு புள்ளிகள்: ﺉ × 2
- எட்டுப் புள்ளிகள்: ﻍ × 2, ﺀ × 2
- பத்துப் புள்ளிகள்: ﺃ × 2, ﺅ × 2