சோஃபுனுவோ
சோஃபுனுவோ என்பது ஒரு அங்கமி நாகா இனத்தின் நாட்டுப்புறக் கதையாகும், இது ஒரு தாயையும் அவரது குழந்தையையும் பற்றிய ஒரு கதையாகும், அவர்கள் பல்வேறு துன்பங்களைத் தாண்டி ருசோமாவில் உள்ள தங்கள் சொந்த கிராமத்திற்குத் திரும்பும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தனர்.[1][2]
சோஃபுனுவோ | |
---|---|
நாட்டுப்புறக் கதை | |
பெயர்: | சோஃபுனுவோ |
தகவல் | |
பகுதி: | தற்போதைய நாகலாந்து மற்றும் மணிப்பூர் |
கதையின் பின்னணி
தொகுசோஃபுனுவோ என்பவள் ருசோமா கிராமத்தைச் சேர்ந்த ஒரு அழகான பெண். அவள் வேறொரு கிராமத்தைச் சேர்ந்த ஒருவனுடன் திருமணம் செய்துகொண்டாள். ஒரு மனைவியாக, அவள் தன் கணவன் மீது அசைக்க முடியாத நம்பிக்கையையும் விசுவாசத்தையும் வைத்திருக்கிறாள். எல்லா அழகான ஆடைகளையும் அணிந்து அவனை கவர்ச்சித்தாள். ஆனால் அங்குள்ள சில பெண்களால் அவளது திருமண வெற்றியைப் பற்றிய பொறாமையை மறைக்க முடியவில்லை. அவர்கள் அவள் கணவனிடம் அவளை விவாகரத்து செய்ய தூண்டினர். இறுதியாக அவனும் அவர்களின் வீண் பழிக்கு மயங்கி விவாகரத்து செய்ததால் சோஃபுனுவோ அவரை விட்டு பிரிந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒரு நாள் இரவு அவள் தன் குழந்தையைத் தூக்கிக் கொண்டு எரியும் தீபத்தை மட்டும் ஏந்தியபடி தன் கணவன் வீட்டை விட்டு வெளியேறி தன் மூதாதையரின் ஊருக்குப் புறப்பட்டாள். கடினமான பாலைவன நிலப்பரப்பைக் கடந்து செல்லும் வழியில், மேலும் சோதனையாக ஒரு தீய ஆவியின் கூர்மையான ஈட்டியால் அவள் கொல்லப்பட்டாள். அவள் குழந்தையைத் தனியாக விட்டுவிட்டு உயிரிழந்தாள். சிறிது நேரத்திற்குப் பிறகு,அந்த குழந்தையும் தனது தாயின் சடலத்தில் நீட்டிக்கொண்டிருந்த விலா எலும்பால் விழுந்து இறந்தது, அப்படியே அவை இரண்டும் மனித வடிவிலான கற்களாக உருமாறின.
இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட அவர்களது உறவினர்கள் அவர்களை தேடி சென்று கற்களை கண்டெடுத்தனர். அவர்கள் தாய்- சிலையும் குழந்தையின் சிலையையும் தனித்தனியாக பிரித்தெடுக்க முயன்ற போது கடுமையான புயல் ஏற்பட்டு அவர்களின் முயற்சி தோல்வியடைந்தது. அவற்றை ஒன்றாகவே கட்டி இழுத்தபோது, காற்று முற்றிலும் அமைதியாக இருந்தது. இதன்படி இரண்டையும் பிரிக்கவே முடியாதென்பதை மக்கள் புரிந்து கொண்டனர்.சோஃபுனுவோ மற்றும் அவரது குழந்தையின் கற்சிலைகள் ருசோமாவுக்கு கொண்டு வரப்பட்டன, இன்றும் அவர்கள் பெரிய புராணக்கதைகளாக மக்கள் மனதில் உள்ளனர்.
கலாச்சார மரபின் தொடர்ச்சி
தொகுதிரைப்படம்
தொகுஇந்த நாட்டுப்புறக் கதையின் பாதிப்பில் 2005 ஆம் ஆண்டு நான் சந்திரனா? சோப்ஃபுனுவோவின் சரித்திரம் என்ற பெயரில், மெட்வினுவோ சக்ரி இயக்கிய ஒரு ஆவண நாடகத் திரைப்படம் வெளியானது.[3] தலைப்பில் உள்ள சந்திரன் அவளது வழிகாட்டியாக இருந்து செயல்பட்டதால் ஒரு உருவக உத்வேகமாக இடம்பெற்றுள்ளது, நாடகமாக்கல், படங்கள், அசல் பாடல்கள் மற்றும் நேர்காணல்கள் போன்றவைகள் மூலம் சோப்ஃபுனுவோவின் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்கள் சொல்லப்பட்டுள்ளது. செயல்படுகிறது.[3] நாகாலாந்தில் உள்ள ருசோமா மற்றும் விஸ்வேமா ஆகிய இடங்களில் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "First Orange Festival begins at Rüsoma". Nagaland Post. 10 January 2020. Archived from the original on 25 செப்டம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 21 August 2020.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "1st Orange Festival from January 10 - 11". Morung Express. 8 January 2020. பார்க்கப்பட்ட நாள் 21 August 2020.
- ↑ 3.0 3.1 "Folklore premiere in Naga film - Young filmmaker turns popular tale of a gritty woman into celluloid". The Telegraph. 6 January 2006. பார்க்கப்பட்ட நாள் 21 August 2020.
- ↑ "Nagalim News". Nagalim. 7 January 2006. பார்க்கப்பட்ட நாள் 21 August 2020.