சோககி சகான் தோனு கொலை

சோககி சகான் தோனு கொலை (Murder of Sohagi Jahan Tonu) என்பது வங்காளதேச மாணவி சோககி சகான் தோனுவை அடையாளம் தெரியாத நபர்களால் வன்கலவி , கொலை செய்ததைக் குறிக்கிறது. [1] [2]

வரலாறு தொகு

தோனு கொமில்லா விக்டோரியா கல்லூரியில் பயிலும் 19 வயது மாணவி ஆவார். [3] அவரது தந்தை கொமிலா படை வீரர்களின் தற்காலக் குடியிருப்பில் ஊழியராக இருந்தார். [4] அவரது உடல் 20 மார்ச் 2016 அன்று கொமிலா படைவீரர்களிள் தற்காலக் குடியிருப்பில் கண்டுபிடிக்கப்பட்டது . [5] தனியார் ஆசிரியர் ஒருவரிடம் பாடம் படிக்கச் சென்ற போது காணமல் போனார். [6]

விசாரணை தொகு

தோனுவின் தந்தை லாலு, கலு என்றும் அழைக்கப்படுகிறார். தனது மகள் சோககி சகான் தோனு கொலை தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது கொமில்லாவில் உள்ள கொட்வாலி முன்மாதிரி காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்தார். காவல் துறையினர் இந்த வழக்கை துப்பறியும் கிளைக்கு மாற்றியுள்ளனர் . [7] இந்த வழக்கு 1 ஏப்ரல் 2016 அன்று குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. முதல் பிரேத பரிசோதனையில் வன்கலவி அல்லது கொலைக்கான எந்த ஆதாரமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிக்கை 4 ஏப்ரல் 2016 அன்று வெளியிடப்பட்டது. [8] இது வன்கலவி அல்ல எனும் அறிக்கையானது பொதுமக்களிடையே பரவலாக சர்ச்சையை உருவாக்கியது.எனவே சர்ச்சையினைத் தீர்க்கும் வகையில் வங்காளதேச உயர் நீதிமன்றம் சோககி சகான் தோனுவின் உடலை தோண்டி எடுத்து இரண்டாவது பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டது. [3] முதல் பிரேத பரிசோதனை சிட்டகாங் மருத்துவக் கல்லூரியில் நடத்தப்பட்டது. [9] பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் கொமிலா மாவட்டத்தின் முரத்நகர் உபாசில்லாவில் உள்ள மிர்சாபூரில் அவள் அடக்கம் செய்யப்பட்டாள். [10]

கொமிலா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடத்தப்பட்ட இரண்டாவது பிரேத பரிசோதனையில் பாலியல் வன்கலவி செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்தன. [11] குற்றவியல் புலனாய்வுத் துறையின் கீழ் நடத்தப்பட்ட டிஎன்ஏ சோதனை மே 2016 இல் டி. என். ஏ.சோதனை மூலம் வன்கலவிக்கான ஆதாரங்கள் கிடைத்தது. [5] கரந்துணர் ஆய்வாளர் குற்ற ஆய்வகத்தால் மூன்று ஆண்களிடமிருந்து விந்து தோனுவின் உள்ளாடைகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. [12]

ஒரு இராணுவ அதிகாரியின் மகன் பியலை கரந்துணர் ஆய்வாளார் பிரிவு விசாரித்தது, அவர் சோககி சகான் தோனுவை பலமுறை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்பது விசாரணையின் மூலம் தெரிய வந்தது. [13] மேலும், இரண்டு இராணுவ வீரர்களையும் கரந்துணர் ஆய்வாளர்கள் விசாரித்தனர். [14]

சோககி சகான் தோனுவினை வன்கலவி மற்றும் கொலை செய்த சம்பவத்தில் சாகித் என்ற ராணுவ உதவி ஆய்வாளர் மற்றும் அவரது மனைவிக்கும் தொடர்பு இருப்பதாக தோனுவின் பெற்றோர் கூறினர். இருப்பினும், அத்தகைய நபர்களை அதிகாரிகள் விசாரிக்கவில்லை. [15] [16]

4 வருட விசாரணைக்குப் பிறகும், இந்த வழக்கில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. காவல் துறை அதிகாரிகளால் கொலையில் ஈடுபட்ட நபர்களை கண்டறிவதில் சிக்கல் இருந்தது. இது பரவலாக மக்களிடையே போராட்டங்கள் எழக் காரணமாக அமைந்தது. [17] [18] சமூக ஊடகங்களில் சோககி சகான் தோனுவின் வன்கலவி மற்றும் கொலைக்கான நியாயம் கிடைக்க பல்வேறு மக்கள் தங்களது ஆதரவினைத் தெரிவித்தனர்.

அக்டோபர் 21, 2020 அன்று, குற்றப் புலனாய்வுத் துறை இந்த வழக்கை பிபிஐக்கு ஒப்படைத்தது. [19]

எதிர்ப்புகள் தொகு

இந்த கொலை பங்களாதேஷில் நாடு தழுவிய எதிர்ப்புகளை உருவாக்கியது மற்றும் ஒரு சமூக ஊடக இயக்கத்தை அறிவித்தது. [20] [21] வங்காளதேச மற்றும் வங்காளதேச மாணவர் சங்கத்தின் அனைத்து வளாகங்களிலும் இதனை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்றன. [22] [23]

சான்றுகள் தொகு

  1. "Women train in self-defence in Dhaka for protection against sexual assaults". bdnews24.com. http://bdnews24.com/bangladesh/2016/04/08/women-train-in-self-defence-in-dhaka-for-protection-against-sexual-assaults. 
  2. "'Pressure on Tonu's family to confess'". Prothom Alo இம் மூலத்தில் இருந்து 1 மார்ச் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170301182422/http://en.prothom-alo.com/bangladesh/news/99521/%E2%80%98Pressure-on-Tonu%E2%80%99s-family-to-confess%E2%80%99. 
  3. 3.0 3.1 "CID say Tonu was raped before murder". bdnews24.com. http://bdnews24.com/bangladesh/2016/05/16/cid-say-tonu-was-raped-before-murder. "CID say Tonu was raped before murder". bdnews24.com. Retrieved 28 February 2017.
  4. "CID interrogates 5 over Tonu murder". Prothom Alo இம் மூலத்தில் இருந்து 1 மார்ச் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170301180830/http://en.prothom-alo.com/bangladesh/news/101031/CID-interrogates-5-over-Tonu-murder. 
  5. 5.0 5.1 "Tonu murder: DNA test finds evidence of rape" (in en). The Daily Star. 16 May 2016. http://www.thedailystar.net/country/tonu-murder-dna-test-finds-evidence-rape-1225111. "Tonu murder: DNA test finds evidence of rape". The Daily Star. 16 May 2016. Retrieved 28 February 2017.
  6. "4 more quizzed over Tonu murder". Prothom Alo இம் மூலத்தில் இருந்து 1 மார்ச் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170301182419/http://en.prothom-alo.com/bangladesh/news/102259/4-more-quizzed-over-Tonu-murder. 
  7. "No headway in Tonu murder probe in 10 months" (in en). The Daily Star. 20 January 2017. http://www.thedailystar.net/country/no-headway-tonu-murder-probe-10-months-1348249. 
  8. "Seven months into Tonu murder: Family losing hope of getting justice". Dhaka Tribune. 24 October 2016. http://www.dhakatribune.com/bangladesh/2016/10/24/seven-months-tonu-killing-family-losing-hope-getting-justice/. 
  9. "Tonu’s parents want to meet PM over her murder case". bdnews24.com. http://bdnews24.com/bangladesh/2017/01/01/tonus-parents-want-to-meet-pm-over-her-murder-case. 
  10. "Tonu murder: Demand for police investigation of a mystery number keeps growing". bdnews24.com. http://bdnews24.com/bangladesh/2016/03/25/tonu-murder-demand-for-police-investigation-of-a-mystery-number-keeps-growing. 
  11. "Tonu's 2nd autopsy finds evidence of 'sexual assault'" (in en). The Daily Star. 12 June 2016. http://www.thedailystar.net/country/tonus-2nd-autopsy-report-submitted-cid-1238359. 
  12. "DNA test finds rape evidence". Prothom Alo இம் மூலத்தில் இருந்து 24 டிசம்பர் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171224164108/http://en.prothom-alo.com/bangladesh/news/104847/DNA-test-finds-rape-evidence-in-Tonu-s-body. 
  13. "CID quizzes army officer’s son over Tonu murder". bdnews24.com. https://bdnews24.com/bangladesh/2016/04/04/cid-quizzes-army-officers-son-over-tonu-murder. 
  14. "2 army men quizzed in Tonu murder case". Dhaka Tribune. https://www.dhakatribune.com/bangladesh/2016/04/08/2-army-men-quizzed-tonu-murder-case. 
  15. "Parents claim 2 Army men were involved in Tonu murder". bdnews24.com. https://bdnews24.com/bangladesh/2016/05/10/parents-claim-2-army-men-were-involved-in-tonu-murder. 
  16. "Tonu's parents: Two army men involved". Dhaka Tribune. https://www.dhakatribune.com/bangladesh/2016/05/11/tonus-parents-two-army-men-involved. 
  17. "4th death anniversary passes silently with no headway in probe" (in en). New Age. https://www.newagebd.net/article/102835/4th-death-anniversary-passes-silently-with-no-headway-in-probe. 
  18. "4 years of Tonu Murder: ‘Everyone forgot my daughter, but how will I forget her’". Dhaka Tribune. 2020-03-21. https://www.dhakatribune.com/bangladesh/dhaka/2020/03/21/4-years-of-tonu-murder-everyone-forgot-my-daughter-but-how-will-i-forget-her. 
  19. "Tonu Murder: CID hands over case to PBI". Dhaka Tribune. 2020-11-17. https://www.dhakatribune.com/bangladesh/nation/2020/11/17/tonu-murder-cid-hands-over-case-to-pbi. 
  20. "Don't forget Tonu". The Daily Star. http://www.thedailystar.net/op-ed/dont-forget-tonu-1199116. 
  21. "Army helping in probe into Tonu murder". The Daily Star. http://www.thedailystar.net/backpage/protests-over-tonu-murder-1199785. 
  22. "Tonu killing: March to PMO stopped, strike called". The Daily Star. http://www.thedailystar.net/country/tonu-killing-march-pmo-stopped-shahbagh-1202212. 
  23. "Protest continues demanding justice for Tonu". The Daily Star. http://www.thedailystar.net/country/protest-continues-demanding-justice-tonu-1201741. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோககி_சகான்_தோனு_கொலை&oldid=3780366" இலிருந்து மீள்விக்கப்பட்டது