சோபனா காமினேனி

இந்தியத் தொழில் நிர்வாகி

சோபனா காமினேனி (Shobana Kamineni) இந்தியாவைச் சேர்ந்த வணிக நிர்வாகியும் மற்றும் அப்பல்லோ மருத்துவமனையின் நிர்வாக துணைத் தலைவரும் ஆவார்.

சோபனா காமினேனி
2017இல் சோபனா காமினேனி
வாழ்க்கைத்
துணை
அனில் காமினேனி
பிள்ளைகள்2
உறவினர்கள்

சோபனா, அப்பல்லோ மருத்துவமனையின் நிறுவனரும் தலைவருமான பிரதாப் சி. ரெட்டிடியின் மகள் ஆவார்.[1] இவருக்கு பிரீத்தா ரெட்டி, சங்கீதா ரெட்டி மற்றும் சுனிதா ரெட்டி என மூன்று சகோதரிகள் உள்ளனர். சகோதரிகள் அனைவரும் அப்பல்லோ மருத்துவமனையில் நிர்வாகிகளாக பணிபுரிகின்றனர்.[2][3]

சோபனா ஒரு தொழிலதிபரும் வனவிலங்கு பாதுகாப்பாளருமான அனில் காமினேனி என்பவரை மணந்தார். தம்பதியருக்கு உபாசனா மற்றும் அனுஷ்பாலா என்ற இரண்டு மகள்கள் பிறந்தனர். உபாசனா திரைப்பட நடிகர் ராம் சரணை மணந்தார். அனுஷ்பாலா 2021 டிசம்பரில் தொழில்முறை கார் பந்தய வீரரான அர்மான் இப்ராஹிம் என்பவரை மணந்தார்.[4]

தொழில் வாழ்க்கை

தொகு

சோபனா இளம் வயதிலிருந்தே அப்பல்லோ குழுமத்தில் பல்வேறு பதவிகளை வகித்தார். 2017 முதல் 2018 வரை இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் தலைவராக பணியாற்றினார். இந்த பதவியை வகித்த முதல் பெண்மணி இவர்தான்.[5][6][7][8] சுகாதாரம் மற்றும் மருந்துகளில் இவர் செய்த பணியை அங்கீகரிக்கும் வகையில், அமெரிக்காவின் பிரையன்ட் பல்கலைக்கழகம் இவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது.[9]

மேற்கோள்கள்

தொகு
  1. "Apollo Hospitals' Shobana Kamineni is the new President of CII". Forbes India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-08-25.
  2. Gupta, Anish (5 November 2012). "How Preetha does it". fortuneindia.com. பார்க்கப்பட்ட நாள் 17 November 2019.
  3. "Apollo Hospitals, a $2 billion health empire run by four sisters, makes a comeback". livemint.com. 21 November 2018. பார்க்கப்பட்ட நாள் 17 November 2019.
  4. Anushpala Kamineni weds Armaan Ebrahim
  5. "I feel cheated as a citizen, says Shobana Kamineni, Executive Vice Chairperson of Apollo Hospitals". 11 April 2019. https://www.businesstoday.in/current/economy-politics/this-top-apollo-hospital-executives-name-got-deleted-from-voters-list-and-she-is-furious/story/336236.html. 
  6. Tellis, Shannon (2019-03-18). "Making health care mobile: Shobana Kamineni says smartphones phones can be the disruptive tech India needs". The Economic Times. பார்க்கப்பட்ட நாள் 2019-08-25.
  7. Gupte, Masoom (2018-05-10). "Shobana Kamineni says mansplaining exists in boardrooms; men can be forgiven for ignorance, not arrogance". The Economic Times. பார்க்கப்பட்ட நாள் 2019-08-25.
  8. "GST is India's new tryst with destiny: CII President Shobana Kamineni". The Indian Express (in Indian English). 2017-06-29. பார்க்கப்பட்ட நாள் 2019-08-25.
  9. "Shobana Kamineni | WEF | Women Economic Forum". WEF (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோபனா_காமினேனி&oldid=4149413" இலிருந்து மீள்விக்கப்பட்டது