சோபரன் சிங் யாதவ்

இந்திய அரசியல்வாதி

சோபரன் சிங் யாதவ் (Sobaran Singh Yadav) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் இந்தியாவில் உத்தரப்பிரதேசத்தின் பதினான்காவது சட்டமன்றத்திலிருந்து உறுப்பினராக உள்ளார். இவர் உத்தரப்பிரதேசத்தின் மைன்புரி மாவட்டத்தில் கர்ஹால் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். சோபரன் சிங் யாதவ் சமாஜ்வாதி கட்சி உறுப்பினராக உள்ளார்.[3][4][5][6]

சோபரன் சிங் யாதவ்
சட்டமன்ற உறுப்பினர் உத்தரப்பிரதேசம்
பதவியில்
மார்ச் 2017 – மார்ச் 2022
பதவியில்
மார்ச் 2012 – மார்ச் 2017
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு7 ஆகத்து 1951 (1951-08-07) (அகவை 72)[1]
எடாவா மாவட்டம்[1]
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிசமாஜ்வாதி கட்சி[1]
துணைவர்மாயா தேவி யாதவ் (மனைவி)
உறவுகள்கிரிஜா தேவி (சகோதரி)
தர்சன் சிங் யாதவ் (சகோதரன்)
பிள்ளைகள்01 மகன் & 2 மகள்
பெற்றோர்காமத பிரசாத் யாதவ் (தந்தை)[1]
வாழிடம்எடாவா மாவட்டம்
முன்னாள் கல்லூரிஅலகாபாத் பல்கலைக்கழகம்[2]
தொழில்விவசாய், அரசியல்வாதி

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி தொகு

சோபரன் சிங் யாதவ் இட்டாவா மாவட்டத்தில் பிறந்தார். இவர் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.

அரசியல் வாழ்க்கை தொகு

சோபரன் சிங் யாதவ் 2002லிருந்து நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த கர்ஹால் தொகுதியினை 2022ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், தானாக முன்வந்து அகிலேஷ் யாதவிற்கு விட்டுக்கொடுத்ததாக சோபரன் சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.[7] இங்கு போட்டியிட்ட அகிலேஷ் யாதவ் தனக்கு எதிராகப் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரைவிட 67504 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார்.[8]

வகித்த பதவிகள் தொகு

# முதல் வரை பதவி குறிப்பு
01 மார்ச் 2017 மார்ச் 2022 உறுப்பினர், 17வது சட்டமன்ற உறுப்பினர்
02 மார்ச் 2012 மார்ச் 2017 உறுப்பினர், 16வது சட்டமன்ற உறுப்பினர்
03 மே 2007 மார்ச் 2012 உறுப்பினர், 15வது சட்டமன்ற உறுப்பினர்
04 பிப்ரவரி 2002 மே 2007 உறுப்பினர், 14வது சட்டமன்ற உறுப்பினர்

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Member Profile". Legislative Assembly official website. http://uplegisassembly.gov.in/ENGLISH/pdfs/members_profile/110.pdf. பார்த்த நாள்: 10 December 2015. 
  2. "Candidate affidavit". My neta.info. http://myneta.info/up2012/candidate.php?candidate_id=1401. பார்த்த நாள்: 10 December 2015. 
  3. "2012 Election Results". இந்தியத் தேர்தல் ஆணையம் website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/AE2012/Stats_Report_UP2012.pdf. பார்த்த நாள்: 10 December 2015. 
  4. "2007 Election Results". இந்தியத் தேர்தல் ஆணையம் website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_2007/StatReport_AS_2007_UTTAR_PRADESH.pdf. பார்த்த நாள்: 10 December 2015. 
  5. "2002 Election Results". இந்தியத் தேர்தல் ஆணையம் website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_2002/Stat_rep_UP_2002.pdf. பார்த்த நாள்: 10 December 2015. 
  6. "All MLAs from constituency". elections.in. http://www.elections.in/uttar-pradesh/assembly-constituencies/karhal.html. பார்த்த நாள்: 10 December 2015. 
  7. https://zeenews.india.com/hindi/india/up-uttarakhand/uttar-pradesh/sp-vacates-mainpuri-karhal-seat-for-akhilesh-yadav-from-four-time-mla-know-sobran-singh-yadav-reaction/1076791
  8. https://results.eci.gov.in/ResultAcGenMar2022/ConstituencywiseS24110.htm?ac=110
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோபரன்_சிங்_யாதவ்&oldid=3743738" இலிருந்து மீள்விக்கப்பட்டது