சோபா தீபக் சிங்

ஷோபா தீபக் சிங் (Shobha Deepak Singh) இந்திய இசை நாடக மேலாளர், புகைப்படம் பிடிப்பவர், எழுத்தாளர், செவ்விசை நடனர் மற்றும் ஸ்ரீராம் பாரதீய கலா கேந்திராவின் இயக்குனர் ஆவார், [1] தில்லி சார்ந்த கலாச்சார அமைப்பான இது அதன் பள்ளிகள் மற்றும் மேடை நிகழ்ச்சிகள் மூலம், இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்க்கான பரப்புரையில் ஈடுபடுகிறது.[2] சாவ் நடனத்திற்கு புத்துயிர் அளித்ததன் மூலம் இவர் பரவலாக அறியப்படுகிறார். இது ஒடிசாவின் ஒரு பழங்குடி தற்காப்பு நடன வடிவம் ஆகும். [3] கலை மற்றும் கலாச்சாரத்திற்கான அவரது பங்களிப்பிற்காக இந்திய அரசு 1999 ஆம் ஆண்டில் நான்காவது மிக உயர்ந்த குடிசார் விருதான பத்மசிறீ வழங்கியது. [4]

சுயசரிதை தொகு

 
ஸ்ரீராம் பாரதிய கலா மையம் .

சோபா அக்டோபர் 21, 1943 அன்று, இந்தியாவின் தலைநகர் புது தில்லியில் பிறந்தார். [3] புதுடெல்லியின் மாடர்ன் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்த பிறகு , 1963 இல் தில்லி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார் மற்றும் 1964 ஆம் ஆண்டில் தனது தந்தையின் நிறுவனமான டெல்லி துணி மற்றும் பொது ஆலையில் மேலாண்மை பயிற்சியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். நான்கு ஆண்டுகள் கழித்து, 1967 ல் தீபக் சிங் என்பவரைத் திருமணம் செய்தார், பின்னர், இவர் தில்லி துணி மற்றும் பொது ஆலையில் இருந்து விலகி ஸ்ரீராம் பாரதீய கலா கேந்திராவில் சேர்ந்தார்.[3] இது 1952 ஆம் ஆண்டில் இவரது தாயாரினால் துவங்கப்பட்டது[5]. கேந்திராவின் காமினி அரங்கத்தை நிர்வகிக்கும் போது, இவர் இளங்கலை பட்டப்படிப்பைப் பெற தனது படிப்பைத் தொடர்ந்தார் மற்றும் சம்பு மகாராஜ் மற்றும் பிர்ஜு மகராஜ் ஆகியோரின் கீழ் நடனத்தையும், பிஸ்வாஜித் ராய் சவுத்ரி மற்றும் அம்ஜத் அலி கான் ஆகியோரின் கீழ் இசையையும் பயின்றார். [3]

1992 ஆம் ஆண்டில், தேசிய நாடகப் பள்ளியின் முன்னாள் இயக்குநரும் நவீன இந்திய நாடகத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவருமான இப்ராஹிம் அல்காசியின் லிவிங் தியேட்டரில் சேர்ந்தார், [6] மற்றும் நாடக இயக்குனர் பிரிவினைப் பயின்றார் 1996 இல் அதில் பட்டயம் பெற்றார். இவர் அல்காசியுடன் இணைந்து பணிபுரிந்தார், திரீ சிஸ்டர்சு , திரீ கிரீக் டிராஜடீசு, எ இசுட்ரீட்கார் னேம்டு டிசயர், டெத் ஆஃப் அ சேல்சுமேன் ஆகிய படைப்புகளில் அவரது உதவி இயக்குனராகவும் பணிபுரிந்தார். [3] 2011 இல் சுமித்ரா சரத் ராம் இறந்த பிறகு, பாரதீய கலா கேந்திராவின் இயக்குநராக பொறுப்பேற்றார். மேலும் தனது கணவரின் உதவியுடன் கேந்திராவின் செயல்பாடுகளை நடத்தினார். [7]

இவர் புதுதில்லியில் தனது கணவர் தீபக் சிங்குடன் வசிக்கிறார். இந்தத் தம்பதியருக்கு ஒரு மகள் உள்ளார். [3]

மரபு தொகு

மிக முக்கியமான பங்களிப்புகளில் ஒன்று, பாரதீய கலா கேந்திராவின் கீழ் இயங்கும் "இசை மற்றும் நடனக் கல்லூரி" ஆகும். இது இந்துஸ்தானி இசையில் பாடல்கள் மற்றும் இசைக்கருவிகள், மெல்லிசை குரல் மற்றும் நடனம் , கதக், பரதநாட்டியம், ஒடிசி, சாவ் நடனம், பாலே மற்றும் சமகால நடனம் போன்ற பிரிவுகளை வழங்குகிறது. [8] ரவிசங்கர், பிர்ஜு மகராஜ், அம்ஜத் அலி கான், சம்பு மகாராஜ் மற்றும் ஷோவான நாராயண் போன்ற பல புகழ்பெற்ற கலைஞர்கள் மற்றும் கலை ஆசிரியர்கள் இந்த அமைப்புடன் தொடர்புடையவர்கள் ஆவர். [8] அவர் புதுடில்லியில் நடத்தப்படும் வருடாந்திர நடன விழாவான சம்மர் பாலே விழாவின் அமைப்பாளர் ஆவார். [9] கலையில் சிறந்து விளங்கும் பிர்ஜு மகாராஜ் 2011 இல் தொடக்க விருது, வாழ்நாள் சாதனையாளருக்கான சுமித்ரா சரத் ராம் விருதையும் பெற்றார்.[10]

மேற்கோள்கள் தொகு

  1. "The Director's Cut". Indian Express. 22 March 2013. பார்க்கப்பட்ட நாள் 3 November 2015.
  2. Ashish Khokar, Sumitra Charat Ram (1998). Shriram Bharatiya Kala Kendra: A History. Lustre Press. பக். 192. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788174360434. https://books.google.com/books?id=k_9kAAAAMAAJ&redir_esc=y. 
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 "Personal Profile". Shriram Bharatiya Kala Kendra. 2015. Archived from the original on 16 அக்டோபர் 2015. பார்க்கப்பட்ட நாள் 3 November 2015.
  4. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
  5. "Taking Centre Stage". Indian Express. 25 August 2012. பார்க்கப்பட்ட நாள் 3 November 2015.
  6. "Ebrahim Alkaz". Encyclopædia Britannica. 2015. பார்க்கப்பட்ட நாள் 3 November 2015.
  7. Ashish Mohan Khokar (9 August 2011). "Sumitra Charat Ram: Doyenne of art patronage dies". Narthaki. பார்க்கப்பட்ட நாள் 3 November 2015.
  8. 8.0 8.1 "Prospectus" (PDF). Shriram Bharatiya Kala Kendra. 2015. Archived from the original (PDF) on 13 அக்டோபர் 2017. பார்க்கப்பட்ட நாள் 3 November 2015.
  9. "Ballet Parking". Indian Express. 3 May 2011. பார்க்கப்பட்ட நாள் 3 November 2015.
  10. "Pt. Birju Maharaj felicitated at this do". Times of India. 25 February 2011. பார்க்கப்பட்ட நாள் 3 November 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோபா_தீபக்_சிங்&oldid=3790444" இலிருந்து மீள்விக்கப்பட்டது