சோபியா வாடியா

சோபியா வாடியா (நீ சோபியா காமாச்சோ), கொலம்பியாவில் பிறந்த இந்தியரான இறையியல் அறிஞர், இலக்கியவாதி, பென் என்ற அகில இந்திய மையத்தின் நிறுவனர் மற்றும் அதன் இதழான தி இந்தியன் பென் (The Indian PEN) இன் நிறுவனர் ஆசிரியர் ஆவார்.[1][2] அவர் உலகக் கலாச்சாரத்தின் இந்திய நிறுவனம், பெங்களூரு [3] மற்றும் ஆசிய புத்தக அறக்கட்டளை, மும்பை ஆகியவற்றை இணைந்து நிறுவினார்.[4] இந்திய அரசாங்கம் 1960 இல் வாடியாவை கௌரவித்தது. தேசத்திற்கு அவர் செய்த சேவைகளுக்காக நான்காவது மிக உயர்ந்த இந்திய குடிமகன் விருதான பத்மஸ்ரீ விருதை அவருக்கு வழங்கியது.[5]

சோபியா வாடியா
பிறப்பு1901
கொலம்பியா
இறப்பு27 April 1986
இந்தியா
மற்ற பெயர்கள்நீ சோபியா காமாச்சோ
பணிதத்துவவாதி, இலக்கியவாதி
வாழ்க்கைத்
துணை
பி. பி. வாடியா
விருதுகள்பத்மஸ்ரீ

சுயசரிதை

தொகு

சோபியா கமாச்சோ 1901 இல் கொலம்பியாவில் பிறந்தார். தனது தாய்நாடான கொலம்பியா,பாரிஸ், லண்டன் மற்றும் நியூயார்க்கில் தனது கல்வியை மேற்கொண்டார்.[6] 1927 ஆம் ஆண்டில், அவர் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணத்தில் ஒரு இந்திய இறையியலாளரான பி.பி. வாடியாவைச் சந்தித்தார்.[7] அவரது தத்துவத்தால் ஈர்க்கப்பட்டு 1928 இல் அவரை மணந்தார். அடுத்த ஆண்டு, அவர் தன் கணவருடன் இந்தியா சென்று அவருடன் இணைந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இருவரும், ஐக்கிய இறையியல் அறிஞர்கள் கழகத்தை பல கிளைகளாக ஐரோப்பாவின் பல்வேறு இடங்களில் நிறுவினர்.[8] மேலும் 1929 இல் மும்பையில் முதல் இந்திய கிளையை நிறுவினர்.[9]

இந்த ஜோடி, 1930 ஆம் ஆண்டு, பென்னின் அகில இந்திய மையத்தை மும்பையில் நிறுவியது.[10] மேலும் தி இந்தியா பென் மற்றும் தி ஆர்யன் பாத் ஆகிய இரண்டு இதழ்களைத் துவக்கியது.[11] தி இந்தியா பென் இதழின் ஆசிரியராக இருந்த சோபியா, அவர் இறக்கும் வரை அந்தப் பதவியில் இருந்தார்.[12] 1945 ஆம் ஆண்டில், தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவில் பெங்களூருவிற்கு அருகிலுள்ள பசவனகுடியில் 1945 ஆம் ஆண்டில் இந்திய உலக கலாச்சார நிறுவனத்தை நிறுவினார்.[13] இந்த காலகட்டத்தில், அவர் 1936 இல் மதங்களின் சகோதரத்துவம் மற்றும் 1941 இல் நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூரின் முன்னுரையுடன் குடியுரிமைக்கான தயாரிப்பு ஆகிய இரண்டு புத்தகங்களை வெளியிட்டார்.[14] மதங்களின் சகோதரத்துவத்தின் இரண்டாவது பதிப்பு 1944 இல் மகாத்மா காந்தி எழுதிய முன்னுரையுடன் வெளிவந்தது.[15] மும்பையில் ஆசிய புத்தக அறக்கட்டளையை நிறுவுவதில் அவர் முக்கியப் பங்காற்றினா.ர் [15] அது பின்னர் அவரது கணவரின் புகழ்பெற்ற படைப்பான காந்திய வழி என்னும் நூலை வெளியிட்டது.[16]

சோபியா வாடியா 1958 இல் தனது கணவரின் மரணத்திற்குப் பிறகும் தனது சமூக வாழ்க்கையைத் தொடர்ந்தார்.[17] மேலும் பதினொரு அகில இந்திய எழுத்தாளர்கள் மாநாடுகளை ஒருங்கிணைத்து நடத்தினார்.[14] இந்திய அரசாங்கம் 1960 இல் பத்மஸ்ரீ விருதை அவருக்கு வழங்கியது [18] சோபியா, 27 ஏப்ரல் 1986 அன்று உயிர் துறந்தார்.[15]

மேற்கோள்கள்

தொகு
  1. name="Indian English and the Fiction of National Literature3">Rosemary Marangoly George (2013). Indian English and the Fiction of National Literature. Cambridge University Press. p. 294. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781107729551.
  2. name="Madame Sophia Wadia: 'Friend, Philosopher and Guide'3">Nissim Ezekiel (July 1986). "Madame Sophia Wadia: 'Friend, Philosopher and Guide'". Indian Literature 29 (4(114)): 146–148. 
  3. name="IIWC">"IIWC". IIWC. 2015. பார்க்கப்பட்ட நாள் 27 April 2015.
  4. name="Madame Sophia Wadia: 'Friend, Philosopher and Guide'">Nissim Ezekiel (July 1986). "Madame Sophia Wadia: 'Friend, Philosopher and Guide'". Indian Literature 29 (4(114)): 146–148. 
  5. name="Padma Shri">"Padma Shri" (PDF). Padma Shri. 2015. Archived from the original (PDF) on 15 அக்டோபர் 2015. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.
  6. name="Blavatsky Theosophy Group">"Blavatsky Theosophy Group". Blavatsky Theosophy Group. 2015. பார்க்கப்பட்ட நாள் 27 April 2015.
  7. name="Teosofiskakompaniet">"Teosofiskakompaniet". Teosofiskakompaniet. 2015. பார்க்கப்பட்ட நாள் 27 April 2015.
  8. name="Indian English and the Fiction of National Literature"
  9. name="Teosofiskakompaniet"
  10. name="Pen International">"Pen International". Pen International. 2015. Archived from the original on 4 ஏப்ரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 27 April 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  11. name="Blavatsky Theosophy Group">"Blavatsky Theosophy Group". Blavatsky Theosophy Group. 2015. பார்க்கப்பட்ட நாள் 27 April 2015."Blavatsky Theosophy Group". Blavatsky Theosophy Group. 2015. Retrieved 27 April 2015.
  12. name="Blavatsky Theosophy Group"
  13. name="IIWC">"IIWC". IIWC. 2015. பார்க்கப்பட்ட நாள் 27 April 2015."IIWC". IIWC. 2015. Retrieved 27 April 2015.
  14. 14.0 14.1 name="Madame Sophia Wadia: 'Friend, Philosopher and Guide'">Nissim Ezekiel (July 1986). "Madame Sophia Wadia: 'Friend, Philosopher and Guide'". Indian Literature 29 (4(114)): 146–148. Nissim Ezekiel (July 1986). "Madame Sophia Wadia: 'Friend, Philosopher and Guide'". Indian Literature. 29 (4(114)): 146–148. JSTOR 23335225.
  15. 15.0 15.1 15.2 name="Madame Sophia Wadia: 'Friend, Philosopher and Guide'"
  16. name="Raja Yoga Books">"Raja Yoga Books". Raja Yoga Books. 2015. Archived from the original on 7 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 27 April 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  17. name="Teosofiskakompaniet">"Teosofiskakompaniet". Teosofiskakompaniet. 2015. பார்க்கப்பட்ட நாள் 27 April 2015."Teosofiskakompaniet". Teosofiskakompaniet. 2015. Retrieved 27 April 2015.
  18. name="Padma Shri">"Padma Shri" (PDF). Padma Shri. 2015. Archived from the original (PDF) on 15 அக்டோபர் 2015. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014."Padma Shri" பரணிடப்பட்டது 2015-10-15 at the வந்தவழி இயந்திரம் (PDF). Padma Shri. 2015. Retrieved 11 November 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோபியா_வாடியா&oldid=4110370" இலிருந்து மீள்விக்கப்பட்டது