சோம் நாத் சாது

நடிகர்,வசனகர்த்தா, மற்றும் இயக்குனர்

சோம் நாத் சாது (Som Nath Sadhu ) என்பவர் 1935 ஆண்டு முதல் 1982 வரையிலான காலத்தில் வாழ்ந்த ஓர் இந்திய நாடகக் கலைஞர் ஆவார். காசுமீர் நாடகத் துறையில் நடிகர்,வசனகர்த்தா[1], மற்றும் இயக்குனர் [2] முதலான பங்களிப்புகளை வழங்கியதால் நன்கு அறியப்பட்டார்.

சோம் நாத் சாது
பிறப்பு1935
காசுமீர், இந்தியா
இறப்பு1982
புது தில்லி
பணிநாடக ஆசிரியர் , நாடக நடிகர்
அறியப்படுவதுகாசுமீர் நாடகம்
பெற்றோர்பிரேம் நாத் பரதேசி
விருதுகள்பத்ம சீறீ

புகழ்பெற்ற நாடகக் கலைஞரான பிரேம் நாத் பரதேசு[3] என்பவரின் மகனாக சோம்நாத் 1935 ஆம் ஆண்டில் பிறந்தார். பின்னர் 1955 [2][4] ஆம் ஆண்டு காசுமீர் வானொலி நிலையத்தில் சேர்ந்து தன் வாழ்க்கையை தொடங்கினார். சானகி, லவாகுட்பாய் (இளைய சகோதரர்), சீ ராங் (இரண்டு வண்ணங்கள்), சாமா டான் (மெழுகுவர்த்தி), அவிகின் (சுழல்), சாராரேட் (குறும்பு) முதலியன சோம் நாத்தின் குறிப்பிடத்தக்க சில படைப்புகளாகும் [5] சாயர் -இ-காசுமீர் மாக்யூர், மெயின்சு ராட் ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் சாது நடித்தார்[6] 1974 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் நான்காவது உயர்ந்த குடிமை விருதான பத்மசிறீ விருதை இவருக்கு வழங்கி சிறப்பித்தது[7],1982 ஆம் ஆண்டு தன்னுடைய 47 ஆம் வயதில் சோம் நாத் சாது காலமானார்[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Somnath Sadhu's Grand Rehearsal staged". Greater Kashmir. 19 September 2012. Archived from the original on 17 June 2015. பார்க்கப்பட்ட நாள் 14 June 2015.
  2. 2.0 2.1 2.2 Ananda Lal (ed) (2004). "Sadhu, Som Nath". Encyclopedia. The Oxford Companion to Indian Theatre. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780199861248. பார்க்கப்பட்ட நாள் 14 June 2015. {{cite web}}: |author= has generic name (help)
  3. Nyla Ali Khan, Gopalkrishan Gandhi (2014). "The Life of a Kashmiri Woman: Dialectic of Resistance and Accommodation". Palgrave Macmillan. p. 160. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781137463296. பார்க்கப்பட்ட நாள் 14 June 2015.
  4. "Som Nath Sadhu". Reporting Point. 2015. Archived from the original on 17 ஜூன் 2015. பார்க்கப்பட்ட நாள் 14 June 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Chinar Shade". Autarmota. 2009. பார்க்கப்பட்ட நாள் 14 June 2015.
  6. "Mainz Raat". YouTube video. 25 May 2011. பார்க்கப்பட்ட நாள் 14 June 2015.
  7. "Padma Shri" (PDF). Padma Shri. 2015. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோம்_நாத்_சாது&oldid=3556228" இலிருந்து மீள்விக்கப்பட்டது