சோம வள்ளியப்பன்

அறிமுகம்தொகு

சோம வள்ளியப்பன் தமிழகத்தின் அனைத்து முன்னணிப் பத்திரிக்கைகளிலும் இதழ்களிலும் கட்டுரைகள், தொடர்கள் எழுதுபவர். தொலைக்காட்சிகளில் பங்குச் சந்தை மற்றும் பொருளாதாரம் தொடர்பான நிகழ்ச்சிகளில் கருத்துக்கள் சொல்பவர். தமிழகம் முழுவதுமிருந்தும் பல்வேறு கல்லூரிகள், அமைப்புகள் மற்றும் நிறுவனங்களால் பேச, பயிற்சி கொடுக்க அழைக்கப்படுபவர். நிர்வாகம், உறவுகள், சுயமுன்னேற்றம், பணம், பங்குச் சந்தை, ஆளுமைகள் பற்றி இதுவரை 40 புத்தகங்கள் எழுதியுள்ளார்.

கல்வி மற்றும் அனுபவம்தொகு

பொருளாதாரம் படித்திருக்கும் சோம.வள்ளியப்பன், பெல், பெப்ஸி, வேர்ல்பூல், டாக்டர் ரெட்டீஸ் பவுண்டேஷன், நவியா உட்பட பல்வேறு நிறுவனங்களில் 30 ஆண்டுகள் மனிதவளத் துறையில் பணியாற்றினார். தற்போது மேன்மை மேனேஜ்மெண்ட் கன்சல்டன்சியின் தலைமை ஆலோசகராகவும் பயிற்சியாளராகவும் சென்னையில் பணிபுரிகிறார்.

சான்றாதாரம்தொகு

திட்டமிடுவோம் வெற்றி பெறுவோம்(மே-2013).சோம.வள்ளியப்பன்(ஆசிரியர்).ஆப்பிள் பப்ளிஷிங் இண்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட்,சென்னை-29.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோம_வள்ளியப்பன்&oldid=2396953" இருந்து மீள்விக்கப்பட்டது