சோலார் இம்பல்சு-2

சோலார் இம்பல்சு-2 அல்லது சூரிய ஆற்றல் வானூர்தி-2 (Solar Impulse-2) , சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த பெர்ட்ராண்ட் பிக்கார்டு மற்றும் ஆண்ட்ரே போர்ஸ்பெர்க் ஆகிய விமானிகள் சூரிய ஆற்றலால் இயங்கும் இவ்வானூர்தியை 13 ஆண்டு கால ஆய்வு முடிவில் வடிவமைத்துள்ளனர். 2740 கிலோ கிராம் எடை கொண்ட இந்த விமானத்தில், 135 மைக்ரேன் தடுமம் (மனித தலைமுடி அளவு) எடை கொண்ட 17,248 சூரிய மின்கலத் தகடுகள் (சோலார் செல்கள்) பொருத்தப்பட்டு, அதன் மூலம் மின்சக்தி உற்பத்தி செய்து, அதனை 633 கிலோ கிராம் எடை கொண்ட நான்கு லித்தியம் பாலிமர் மின்கலங்கள் மூலம் சேமிக்கப்பட்ட மின்சாரத்தைப் பயன்படுத்தி விமானத்தின் புரோப்பல்லர்கள் எனப்படும் சுழலிகளால் எஞ்சின்கள் இயங்குகிறது.

சோலார் இம்பல்சு-2 வானூர்தி
Solar Impulse SI2 pilote Bertrand Piccard Payerne November 2014.jpg
சோலார் இம்பல்சு-2 (HB-SIB) வானூர்தி..
வகை சூரிய ஆற்றல் மூலம் இயங்கும் சோதனை ஓட்ட வானூர்தி
National origin சுவிட்சர்லாந்து
உற்பத்தியாளர் சோலார் இம்பல்சு நிறுவனம்
வடிவமைப்பாளர் பெர்ட்ராண்ட் பிக்கார்டு மற்றும் ஆண்ட்ரே போர்ஸ்பெர்க்
முதல் பயணம் 9 மார்ச்சு 2015

மணிக்கு 50 முதல் 100 கி.மீ வேகத்தில் பயணிக்கும் இவ்வானூர்தி 8,500 மீட்டர் (26,000 அடி) உயரம் வரை பறக்க வல்லது. தொடர்ந்து 120 மணி நேரம் வரை இவ்விமானத்தை இயக்க முடியும். இந்த விமானத்தின் 72 மீட்டர் (236 அடி) நீள இறக்கைகளில் சூரியத் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. பகலில் சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் ஆற்றலைச் சேமித்து இவ்வானூர்தி செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பகலில் சூரிய ஒளியின் காரணமாக நிறைய மின்சாரம் கிடைக்கும் என்பதால் சோலார் இம்பல்சு வானூர்தி பகல் நேரங்களில் அதிக பட்சமாக 28 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும். இரவில் மின்சாரத்தை மிச்சப்படுத்த அதிக பட்சமாக 3000 அடி உயரத்தில் பறக்கும்.

இவ்விமானத்தில் ஒரு விமானி மட்டுமே அமரக்கூடிய வகையில் இருக்கை இருப்பதால் பெர்ட்ராண்ட் பிக்கார்டு மற்றும் ஆண்ட்ரே போர்ஸ்பெர்க் ஆகிய விமானிகள் இவ்விமானத்தை மாற்றி மாற்றி ஓட்டுகிறார்கள்.[2]. [3]. [4]

இவ்வானூர்தி 9 மார்ச் 2015, திங்களன்று அபுதாபிலிருந்து புறப்பட்டு, ஏமன் நாட்டுத் தலைநகர் மஸ்கட்டில் தரை இறங்கி, பின் அரபுக் கடல் மேல் பறந்து இந்தியா, மியான்மர், சீனா ஆகிய நாடுகளில் தங்கி பின், பசிபிக் பெருங்கடல் மேல் எங்கும் நிற்காமல் தொடர்ந்து பறந்து ஐக்கிய அமெரிக்காவில் தரையிறங்கி பின் அட்லாண்டிக் பெருங்கடல் மேல் தொடர்ந்து பறந்து, மொராக்கோ அல்லது தெற்கு ஐரோப்பா ஆகிய நாடுகளில் ஒன்றில் தங்கி, மீண்டும் புறப்பட்ட இடமான அபுதாபிக்கு திரும்பும்.

பயண நோக்கம்தொகு

எந்த எரிபொருளும் இல்லாமல் சூரிய ஒளி சக்தியால் மட்டுமே இயங்கும் இவ்விமானத்தின் மூலம் உலகைச் சுற்றி வந்து சாதனை படைக்கும் முயற்சியில் சோலார் இம்பல்சு-2 ஈடுபட்டுள்ளது. பசிபிக் பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதிகளில் எங்கும் நிற்காமல், நீண்ட தூரப் பயணத்திற்கான சூரிய ஆற்றல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சாதனை புரிந்திட முடியும் என்பதை உலகிற்கு தெரிவிக்கவும்; தூய்மையான தொழில்நுட்பங்கள் பற்றிய விழிப்புணர்வை பரப்பும் நோக்குடன் பயணிக்கிறது என சோலார் இம்பல்சு-2வை உருவாக்கியதாக சுவிட்சர்லாந்து நாட்டு விமானிகள் ஆண்ட்ரே போர்ஸ்பெர்க் மற்றும் பெர்ட்ராண்ட் பிக்கார்டு' கூறுகிறார்கள்.

பசிபிக் பெருங்கடல் பயணம்தொகு

 • 30 மே 2015‎ அன்று நாஞ்சிங்கிலிருந்து ஹவாய்க்கு புறப்பட்ட வானூர்தி 40 மணி நேரத்திற்குப் பின் தொடர்ந்து பறக்க இயலாத அளவிற்கு வானிலை மேசமடைந்த காரணத்தால், ஜப்பான் நாட்டின் நகோயா நகர விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.[5]
 • பின்னர் நாஞ்சிங்கிலிருந்து 28 சூன் 2015 அன்று புறப்பட்டு, பசிபிக் கடல் மீது தொடர்ந்து ஐந்து பகல், ஐந்து இரவு, (117 மணி 52 நிமிடங்கள்) பறந்து அமெரிக்காவின், ஹவாய் மாநிலத்தின் கலிலீயோ பன்னாட்டு விமான நிலையத்தில் 3 சூலை 2015 அன்று தரை இறங்கியது. பசிபிக் கடல் பயணத்தின் போது சோலார் இம்பல்சு விமானத்தின் மின்கலங்களில் இரண்டு அதிக வெப்பம் காரணமாக சீர்செய்ய இயலாத அளவிற்கு பழுதாகிவிட்டது.[6] எனவே சோலார் இம்பல்சு வானூர்தி ஏப்ரல் 2016 முன்னதாக ஹாவாயை விட்டுப் புறப்படாது.[6]

பயண நிரல்தொகு

ஆதாரங்கள்:[7]

படி நிலை புறப்பட்ட நேரம் புறப்படுமிடம் சேருமிடம் பறந்த தொலைவு பறந்த நேரம் சராசரி வேகம் அதிகபட்ச பறப்பு உயரம் விமானி
1 9 மார்ச் 2015 - 03:12 UTC   அபுதாபி, ஐக்கிய அரபு அமீரகம்   மஸ்கட், ஓமன் 188 க. மை-(349 கி. மீ.,) 13.01 மணி 33.9 கி. மீ., 20,942 அடி (6,383 மீ) ஆண்ட்ரே போர்ஸ்பெர்க்[8]
2 10 மார்ச் 2015 - 02:35 UTC   மஸ்கட், ஓமன்   அகமதாபாத், இந்தியா[9]

[10]

802 க. மை-(1,485 கி. மீ.,) 15.20 மணி 96.9 கி. மீ., 29,114 அடி (8,874 மீ) பெர்ட்ராண்ட் பிக்கார்டு [11]
3 18 மார்ச் 2015 - 01:48 UTC   அகமதாபாத், இந்தியா   வாரணாசி, இந்தியா[12].[13] 578 க. மை, (1,071 கி, மீ.,) 15.56 மணி 91.7 கி. மீ., 17,001 அடி (5,182 மீ) ஆண்ட்ரே போர்ஸ்பெர்க்[14]
4 18 மார்ச் 2015 - 23:52 UTC   வாரணாசி, இந்தியா   மாண்டலே, மியான்மர்[15] 756 க. மை, (1,401 கி, மீ.,) 13.29 மணி 103.7 கி. மீ., 27,000 அடி (8,230 மீ) பெர்ட்ராண்ட் பிக்கார்டு[16]
5 29 மார்ச் 2015 - 21:06 UTC   மாண்டலே, மியான்மர்[17]   சோங்கிங், சீனா[18] 788 க. மை, (1,459 கி, மீ.,) 20.29 மணி 71.2 கி. மீ., பெர்ட்ராண்ட் பிக்கார்டு[19]
6 20 ஏப்ரல் 2015‎ - 22:06 UTC   சோங்கிங், சீனா   நாஞ்சிங், சீனா[20] 726 க. மை (1,344 கி. மீ) 17.22 மணி 77.4 கி.மீ 12,000 ft (3,700 m) பெர்ட்ராண்ட் பிக்கார்டு[21][22]
7 30 மே 2015‎ - 18:41 சனி UTC[23][24]   நாஞ்சிங், சீனா   நகோயா, ஜப்பான்N1 1,540 க. மை (2,852 கி. மீ) 44. 10 மணி 64.6 கி. மீ 28000 அடி ஆண்ட்ரே போர்ஸ்பெர்க்[25]
8 28 சூன் 2015 - 18:03 UTC   நகோயா, ஜப்பான்   ஹவாய், ஐக்கிய அமெரிக்கா[26] 4,474க. மை (8,285 கி. மீ) 118 மணி 70.3 கி. மீ 30,052 அடி ஆண்ட்ரே போர்ஸ்பெர்க்
9 21 ஏப்ரல் 2016 16:15UTC   ஹவாய், யுஎஸ்எ   மவுண்ட் வியூ, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா[27][28] 4086 கி மீ 62மணி & 29 நிமிடங்கள் 65.39 கி மீ 8634 மீட்டர் பெர்ட்ராண்ட் பிக்கார்டு[29][30]
10 2 மே 2016 12:03 UTC   மவுண்ட் வியூ, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா   பீனிக்ஸ், அரிசோனா, ஐக்கிய அமெரிக்கா 1113 கி மீ 15 மணி & 52 நிமிடம் 86 கி மீ 6706 மீட்டர்/22,000 அடி ஆண்ட்ரே போர்ஸ்பெர்க்[31]
11 12 மே 2016 10:05 UTC   பீனிக்ஸ், அரிசோனா, ஐக்கிய அமெரிக்கா   துல்சா, ஓக்லகோமா, ஐக்கிய அமெரிக்கா 1570 கி மீ 8 மணி & 10 நிமிடம் 86.42 கி மீ 22,001 ft (6,706 மீ) பெர்ட்ராண்ட் பிக்கார்டு[32]
12 21 மே 2016   துல்சா, ஓக்லகோமா, ஐக்கிய அமெரிக்கா   டேட்டன், ஒகையோ, ஐக்கிய அமெரிக்கா 1113 கி மீ 16 மணி & 34 நிமிடங்கள் 67.18 கி மீ 21,001 ft (6,401 மீ) ஆண்ட்ரே போர்ஸ்பெர்க் [33]
13 25 மே 2016   டேட்டன், ஒகையோ, ஐக்கிய அமெரிக்கா   லேஹை சமவெளி, பென்சில்வேனியா, ஐக்கிய அமெரிக்கா 1044 கி மீ 16 மணி & 49 நிமிடங்கள் 62.2 கி மீ 15,000 ft (4,572 மீ) பிக்கார்டு[34]
14 11 சூன் 2016   லேஹை சமவெளி, பென்சில்வேனியா, ஐக்கிய அமெரிக்கா   நியூயார்க் நகரம் நியூயார்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்கா 265 கி ம 4 மணி & 41 நிமிடங்கள் 56.6 கி மீ 3,002 ft (915 மீ) ஆண்ட்ரே போர்ஸ்பெர்க்[35]
15 20 சூன் 2016   நியூயார்க் நகரம், நியூயார்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்கா   செவீயா, ஸ்பெயின் 6265 கி மீ 71 மணி & நிமிடங்கள் 88.1 கி மீ 27,999 ft (8,534 மீ) பிக்கார்டு[36]
16 11 சூலை 2016 04:20   செவீயா, ஸ்பெயின்   கெய்ரோ, எகிப்து 3745 கி மீ 48 மணி & நிமிடங்கள் 76.7 கி மீ 27,999 ft (8,534 மீ) ஆண்ட்ரே போர்ஸ்பெர்க்[37][38]
17 23 சூலை 2016   கெய்ரோ, எகிப்து   அபுதாபி, ஐஅஅ 2794 கி மீ 48 மணி & 37 நிமிடங்கள் 57.5 கி மீ 27,999 ft (8,534 m) பிக்கார்டு[39][40]

சோலார் இம்பல்சு-2 வானூர்திக் குறிப்புகள்தொகு

Data from சோலார் இம்பல்சு திட்ட நிறுவனம்[41]

பொதுவான அம்சங்கள்

 • அணி: 1
 • நீளம்: 22.4 மீட்டர் (73.5 அடி)
 • இறக்கை நீட்டம்: 71.9 மீட்டர் (236 அடி)
 • உயரம்: 6.37 மீட்டர் (20.9 அடி)
 • இறக்கை பரப்பு: 269.5 சதுர மீட்டர் பரப்புள்ள இறக்கைகளில், 66 கிலோ வாட் திறன் கொண்ட 17,248 சூரிய மின்கலங்கள் பொருத்தப்பட்டுள்ளது. (269.5 சதுர மீட்டர்2)
 • ஏற்றப்பட்ட எடை: 2,300 கிலோ கிராம் (5,100 பவுண்டு)
 • மேல் எழும்பும் வேகம் மணிக்கு 35 கி. மீ.,

செயல்திறன்

 • கூடிய வேகம்: 77 kts (அதிகபட்ச வேகம் 140 கி. மீ.,) 49 kts
 • பயண வேகம் : பகலில் மணிக்கு 90 கி. மீ., (இரவில் மணிக்கு 60 கி. மீ.,)
 • பறப்புயர்வு எல்லை: 8,500 மீட்டர் (27,900 அடி)

மேற்கோள்கள்தொகு

 1. http://bertrandpiccard.com/home?width=1600#1
 2. Solar Impulse: Global flight completes first leg
 3. Pilots to develop unmanned version of Solar Impulse 2
 4. SOLAR IMPULSE 2, THE#RTW SOLAR AIRPLANE
 5. DIVERT TO NAGOYA (JAPAN)
 6. 6.0 6.1 http://www.solarimpulse.com/leg-8-from-Nagoya-to-Hawaii
 7. http://www.greatcirclemapper.net/en/great-circle-mapper/route/OMDB-OOMS-VAAH-VIBN-VYMD-ZUCK.html
 8. "Leg 1 of 12 - Abu Dhabi, United Arab Emirates to Muscat, Oman". Solar Impulse.
 9. Solar-powered plane SI2 lands in Ahmedabad
 10. World’s 1st solar plane landed in Ahmedabad-Photos
 11. "Leg 2 of 12 - Muscat, Oman to Ahmedabad, India". Solar Impulse.
 12. Solar Impulse: Plane completes Ahmedabad to Varanasi leg
 13. Solar-powered aircraft Solar Impulse 2 lands in Varanasi
 14. "Leg 3 of 12 - Ahmedabad to Varanasi, India". Solar Impulse.
 15. http://timesofindia.indiatimes.com/india/Solar-powered-aircraft-Solar-Impulse-2-reaches-Myanmar/articleshow/46625580.cms
 16. "Leg 4 of 12 - Varanasi, India to Mandalay, Myanmar". Solar Impulse.
 17. "மாண்டலேயிலிருந்து 1375 கி.மீ தூரத்தில் உள்ள சாங்கிங் பகுதிக்கு 18 மணி நேரத்தில் வானூர்தி பயணம் செய்யும்". 2015-04-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-03-30 அன்று பார்க்கப்பட்டது.
 18. http://www.bbc.com/news/science-environment-32110747 Solar Impulse plane lands in China
 19. "Leg 5 of 12 - Mandalay, Myanmar to Chongqing, People's Republic of China". Solar Impulse.
 20. Solar Impulse arrives in Nanjing
 21. "Leg 6 of 12 - Chongqing to Nanjing, People's Republic of China". Solar Impulse.
 22. http://www.solarimpulse.com/leg-6-from-Chongqing-to-Nanjing
 23. http://www.solarimpulse.com/leg-7-from-Nanjing-to-Hawaii?utm_source=Supporters&utm_campaign=af8fe98f3c-&utm_medium=email&utm_term=0_1fe3c4e880-af8fe98f3c-206535145
 24. பசிபிக் கடலை கடக்க புறப்பட்டது சோலார் வானூர்தி
 25. "Leg 7 of 13 – Nanjing, China to Nagoya, Japan". Solar Impulse.; "Solar Impulse touches down on unscheduled Japan stop", The Sun Daily (Malaysia), 2 June 2015
 26. http://www.bbc.com/news/science-environment-33383521 Solar Impulse plane lands in Hawaii
 27. உலகை வலம் வரும் சூரியசக்தி வானூர்தி கலிஃபோர்னியாவில்
 28. Solar Impulse 2 lands in California after Pacific flight
 29. "Leg 9 of 13 – Hawaii to Mountain View, USA". Solar Impulse. 21 April 2016 அன்று பார்க்கப்பட்டது.
 30. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; bbc20160421 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 31. André Borschberg to Phoenix Goodyear Airport
 32. "Leg 11: Phoenix to Tulsa". Solar Impulse.
 33. "Leg 12: Tulsa to Dayton". Solar Impulse.
 34. "Leg 13: Dayton to Lehigh Valley". Solar Impulse.
 35. "Leg 14: Lehigh Valley to New York". Solar Impulse.
 36. "Leg 15: New York to Seville". Solar Impulse.
 37. "Leg 16: Seville to Cairo". Solar Impulse.
 38. "Leg 16: Europe to Abu Dhabi". Solar Impulse. 2016-07-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-06-25 அன்று பார்க்கப்பட்டது.
 39. "We Are in Abu Dhabi", Solar Impulse, 26 July 2016
 40. உலகை முதல்முறையாக சுற்றி வந்து சோலார் இம்பல்ஸ் 2 விமானம் சாதனை
 41. "Building a Solar Airplane". Solar Impulse. Retrieved 19 January 2015.

வெளி இணைப்புகள்தொகு

இதனையும் காண்கதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோலார்_இம்பல்சு-2&oldid=3556278" இருந்து மீள்விக்கப்பட்டது