சோழர் கால அளவைகள்

சோழர் கால நீள, கன பரிமாண அளவுகள் தொகு

தஞ்சை மாவட்டம், திருவையாறு உலோகமாதேவீச்சுரம் கோயில் கல்வெட்டில் இவ்விவரம் காணப்படுகின்றது.

நீள அளவுகள் தொகு

100 குழி 1 மா

2000 குழி 1 வேலி

20 மா 1 வேலி அல்லது 1 நிலம்

கன பரிமாண அளவுகள் தொகு

8 நாழி 1 குருணி

4 குருணி 1 தூணி

3 தூணி 1 கலம்

முகத்தல் அளவைகள் தொகு

சோழர் கால முகத்தல் வாய்ப்பாடு தொகு

360 - 1 செவிடு 5 செவிடு - 1 ஆழாக்கு 2 ஆழாக்கு - 1 உழக்கு 2 உழக்க - 1 உரி (½ நாழி) 2 மரக்கால் - 1 பதக்கு 2 பதக்கு - 1 தூணி 3 தூணி - 1 கலம்

சோழர் கால நிறுத்தல் வாய்ப்பாடு தொகு

2 குன்றிமணி - 1 மஞ்சாடி 10 மஞ்சாடி - 1 கழஞ்சு 16 கழஞ்சு - 1 பலம் நீட்டல் அளவை 8 தேரை - 1 விரல் 24 விரல் - 1 முழம்

நில அளவு வாய்ப்பாடு தொகு

முந்திரி - 1ஃ320; 2 முந்திரி - அரைக்காணி (1ஃ160) 2 அரைக்காணி - 1 காணி (1ஃ80) 4 காணி - 1 மா (1ஃ20) 20 மா - 1 நிலம் 4 முந்தரி - 1 காணி (1ஃ80) 5 காணி - 1 மாகாணி ஜவீசம்(1ஃ16)ஸ 2 வீசம் - கால் (1ஃ4) 16 வீசம் - ஒன்று

இது தவிர சாண், அடி (காலடி) ஆகியவற்றாலான 16 சாண் கோல், 12 அடிக்கோல், 16 அடிக்கோல் போன்றவைகளும் இருந்தன. இராசராசன் காலக்கோலுக்கு ‘உலகளந்த கோல்’ என்ற பெயரும் இருந்தது. ஒரு கோலால் ஏற்படும் சதுரம் ஒரு குழி எனப்பட்டது. நூறு குழி ஒருமா, இரண்டாயிரம் குழி ஒரு நிலம் என்று நிலங்கள் அளக்கப்பட்டன.

சோழர் நாணயங்கள் தொகு

சோழர் ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட நாணயங்களில் மன்னனின் இயற்பெயரோ, சிறப்புப் பெயரோ பொறிக்கப்பட்டு நாடு முழுவதும் வழக்கில் இருந்ததைக் கல்வெட்டுகளும், செப்பேடுகளும் உறுதி செய்கின்றன. காசுகள் பொன்னாலும், வெள்ளியாலும், செம்பாலும் வெளியிடப்பட்டன. இராசராசன் மாடை, இராசராசன் காசுஎன்ற இருவகை காசுகள் வழக்கில் இருந்துள்ளது. மாடை என்பது ஒரு கழஞ்சு எடை கொண்டது. ஒரு மாடையின் மதிப்பு இரண்டு காசாகும். ஒரு காசு என்பது அரை கழஞ்சு எடை கொண்டதாகும்.

ஒரு மன்னனின் ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்டு அவன் ஆட்சியில் வழக்கில் இருந்த காசுகள் “அன்றாடு நற்காசு” என்று பெயா;. இவற்றை அன்றாடு நற்பழங்காசு என்றும், பழங்காசு நிறை இருபத்தைஞ்சு கழஞ்சு என்று கல்வெட்டுகள் கூறுகின்றன. முதலாம் இராசராசனின் ஈழ வெற்றிக்குப் பிறகு “ஈழக்காக” என்னும் பொற்காசு சோழநாட்டில் வழக்கில் இருந்துள்ளது. அக்காசு அரைக்கழஞ்சு எடையும் மாடையைப் போன்று மாற்றம் உடையதாக இருந்தது. இக்காசுகளை “ஈழக்கழஞ்சு நாற்ப்பதினால் பொன் 20 கழஞ்சு என்று கல்வெட்டு குறிப்பிடுகின்றது.

மேற்கோள்கள் தொகு

  1. இராசராசன் துணுக்குகள் நூறு வெளியீடு தமிழ்நாடு தொல்லியல் துறை பக்கம் எண்29
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோழர்_கால_அளவைகள்&oldid=3734242" இலிருந்து மீள்விக்கப்பட்டது