சோவியத் ஒன்றியத்தின் போலந்து படையெடுப்பு

சோவியத் ஒன்றியத்தின் போலந்து படையெடுப்பு (Soviet invasion of Poland) இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்தில் நிகழ்ந்தது. இது ஐரோப்பிய களத்தின் ஒரு பகுதியாகும். செப்டம்பர் 17, 1939 அன்று சோவியத் ஒன்றியம் முறையாகப் போர் சாற்றாமல் கிழக்கிலிருந்து போலந்து மீது படையெடுத்தது. இப்படையெடுப்பு மேற்கிலிருந்து நாசி ஜெர்மனி போலந்து மீது படையெடுத்து 16 நாட்கள் கழித்து நடைபெற்றது. அக்டோபர் 6 ஆம் தேதி முடிவடைந்தது. இதன் பலனாக மோலடோவ்-ரிப்பன்டிராப் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருந்தபடி போலந்தின பகுதிகளை நாசி ஜெர்மனியும் சோவியத் ஒன்றியமும் பகிர்ந்து கொணடன.

சோவியத் ஒன்றியத்தின் போலந்து படையெடுப்பு
போலந்து படையெடுப்பின் பகுதி
போலந்தில் அணுவகுத்துச் செல்லும் சோவியத் படைகள் (1939)
போலந்தில் அணுவகுத்துச் செல்லும் சோவியத் படைகள் (1939)
நாள் 17 செப்டம்பர் – 6 அக்டோபர் 1939
இடம் போலந்து
தெளிவான சோவியத் வெற்றி
நிலப்பகுதி
மாற்றங்கள்
நாசி ஜெர்மனியும், சோவியத் ஒன்றியமும் போலந்தின் பகுதிகளைப் பகிர்ந்து கொண்டன
பிரிவினர்
போலிய இரண்டாம் குடியரசு  சோவியத் ஒன்றியம்
தளபதிகள், தலைவர்கள்
எட்வர்ட் ரிட்ஸ்-ஸ்மிக்ளி சோவியத் ஒன்றியம் கிளிமெண்ட் வோர்ஷிலோவ்
பலம்
20,000 எல்லைப் பாதுகாப்புப் படையினர்,
250,000 போலியத் தரைப்படையினர்.
466,516–800,000 படைவீரர்கள்
33+ டிவிசன்கள்
11+ பிரிகேட்கள்
4,959 பீரங்கிகள்
4,736 டாங்குகள்
3,300 வானூர்திகள்
இழப்புகள்
மாண்டவர் / காணாமல் போனவர் : 3,000–7,000
காயமடைந்தவர் : 20,000 வரை
மாண்டவர் / காணாமல் போனவர் : 1,475–3,000
காயமடைந்தவர் : 2,383–10,000

ஆகஸ்ட் 1939 இல் நாசி ஜெர்மனியும் சோவியத் ஒன்றியமும் மோலடோவ்-ரிப்பன்டிராப் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இரு நாடுகளும் ஐரோப்பாவைப் பகிர்ந்து கொள்ளவும் ஒருவரையொருவர் வலிந்து தாக்காதிருக்கவும் ஒத்துக் கொண்டன. இவ்வொப்பந்தம் கையெழுத்தாகி ஒரு வாரத்தில் ஜெர்மனி போலந்து மீது மேற்கிலிருந்து படையெடுத்தது. அதனை சமாளிக்க இயலாத போலியப் படைகள், முன்பே திட்டமிட்டிருந்தபடி கிழக்கு நோக்கிப் பின்வாங்கின. வடக்கு தெற்காக அமைந்திருந்த உருமேனிய பாலமுகப்பு எனும் அரண்நிலைகளை அடைந்து அங்கிருந்து ஜெர்மானியர்களை எதிர்கொள்ள திட்டமிட்டனர். ஆனால் செப்டம்பர் 17ம் தேதி கிழக்கிலிருந்து சோவியத் ஒன்றியப் படைகள் போலந்தைத் தாக்கின. போலிய அரசு பலமிழந்து போய்விட்டது, அதனால் போலந்தின் கிழக்குப் பகுதியில் வாழும் உக்ரெய்னியர்களையும் பெலாருசியர்களையும் பாதுகாக்க இயலாது. எனவே அவர்களைக் காப்பதற்காக போலந்து மீது படையெடுப்பதாக சோவியத் அரசு காரணம் கூறியது. இரு முனைத் தாக்குதலகளைச் சமாளிக்க இயலாத போலியப் படைகள் அக்டோபர் 6ம் தேதி சரண்டைந்தன. 13.5 மில்லியன் போலிய மக்கள் வாழ்ந்த பகுதிகள் சோவியத் ஒன்றியத்தால் ஆக்கிரமிக்கப்பட்டன. இப்பகுதி 1941 இல் நாசி ஜெர்மனி சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுக்கும் வரை சோவியத் கட்டுப்பாட்டில் இருந்தது.

குறிப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு