சோ. தர்மன் (பிறப்பு: ஆகஸ்ட் 8, 1953) என்பவர் ஒரு தமிழகத்தைச் சேர்ந்த புதின, சிறுகதை எழுத்தாளர். கரிசல் மண் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்க்கையை பதிவு செய்யும் படைப்பாளிகளில் முக்கியமானவர். கி. ராஜநாராயணனின் எழுத்துகள் ஈர்க்கப்பட்டு எழுத்தாளராகப் பரிணமித்தவர்களில் ஒருவர். [1] 2019ஆம் ஆண்டு வரை 13 நூல்களை எழுதியுள்ளார். இலக்கியச்சிந்தனை, தமிழ்வளர்ச்சித்துறை, சாகித்ய அகாதெமி விருதுகளைப் பெற்றவர்.

சோ. தர்மன்
பிறப்புசோ. தர்மராஜ்
கோவில்பட்டி
தேசியம்இந்தியர்

பிறப்புதொகு

விவசாயக்குடும்பத்தைச் சார்ந்த சோ. தர்மராஜ் எனும் இயற்பெயர்கொண்ட இவர், பொன்னுத்தாய், சோலையப்பன் ஆகியோருக்கு மகனாக 1952 ஆகத்து 8ஆம் நாள் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டத்திலுள்ள கடலையூருக்கு அருகில் உருளைகுடி என்னும் சிற்றூரில் பிறந்தார்.[1]

நூல்கள்தொகு

இவர் எழுதிய முதற்கதை 1980ஆம் ஆண்டில் அச்சேறியது. எட்டு சிறுகதைத்தொகுதிகள், நான்கு புதினங்கள், வில்லிசைபற்றிய ஆய்வுநூல் ஆகியன 2019ஆம் ஆண்டுவரையிலான இவரது படைப்புகள்.[1]

புதினம்தொகு

  1. கூகை (தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்). இப்புதினம் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தால் ஆங்கிலத்திலும் "மூங்கா" என்னும் பெயரில் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. [1]
  2. சூல் (2016) (சுஜாதா விருதையும் சாகித்ய அகாதெமி விருதையும் பெற்ற நூல்)
  3. தூர்வை (2017)
  4. பதிமூனாவது மையவாடி (2020)

சிறுகதைத்தொகுதிகள்தொகு

  1. ஈரம் (சிறுகதைத்தொகுதி)
  2. சோகவனம்
  3. வனக்குமாரன்
  4. அன்பின் சிப்பி (2019)
  5. நீர்ப்பழி
  1. சோகவனம்

வாழ்க்கைவரலாறுதொகு

  1. வில்லிசைக்கலைஞர் பிச்சைக்குட்டி (2014)

விருதுகள்தொகு

  1. 1992 மற்றும் 1994 ஆண்டுகளில் இலக்கியச் சிந்தனையின் சிறந்த சிறுகதைக்கான விருதினைப் பெற்றிருக்கிறார்.
  2. கூகை என்னும் புதினத்திற்காக தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலுக்கான பரிசினைப் பெற்றிருக்கிறார்.
  3. சூல் என்னும் புதினத்திற்காக 2016ஆம் ஆண்டிற்கான சுஜாதா விருதைப் பெற்றார்.[2]
  4. சூல் என்னும் புதினத்திற்காக 2019ஆம் ஆண்டில் சாகித்ய அகாதெமி விருதைப்பெற்றார். [3][4]

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 நூலக உலகம் மாத இதழ், 2019 திசம்பர், பக்.5
  2. பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தின் ‘வாசகர் வட்டம்' வெளியீடு
  3. "Press Release sahitya Akademi awards 2019". பார்த்த நாள் 18 December 2019.
  4. "சூல் நாவலுக்காக சோ. தர்மனுக்கு சாகித்ய அகாதெமி விருது". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2019/dec/18/sahitya-academy-award-announced-for-so-dharman-3309350.html. பார்த்த நாள்: 18 December 2019. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோ._தர்மன்&oldid=2894138" இருந்து மீள்விக்கப்பட்டது