ச. ஆ. பவானி தேவி
சந்தலவதா ஆனந்த சுந்தரராமன் பவானி தேவி (Chadalavada Anandha Sundhararaman Bhavani Devi) இந்திய வாள்வீச்சு வீராங்கனை ஆவார். பரவலாக சி. ஏ. பவானி தேவி என அறியப்படுகிறார். 1993 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 27 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக்கு போட்டிக்கு தகுதி பெற்ற பிறகு ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற முதல் இந்திய வாள் வீச்சு வீராங்கனை என்ற சிறப்பு இவருக்கு கிடைத்தது.[1] இராகுல் திராவிட் தடகள வழிகாட்டல் திட்டத்தின் மூலம் கோசுபோட்சு அறக்கட்டளை இவருக்கு ஆதரவளித்தது.[2][3] 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றதன் மூலம் ஆசிய வாள்வீச்சு வெற்றியாளர் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பும் இவருக்கு கிடைத்தது.[4][5]
தனிநபர் தகவல் | |
---|---|
பிறந்த பெயர் | பவானி தேவி |
முழு பெயர் | சந்தலவதா ஆனந்த சுந்தரராமன் பவானி தேவி |
தேசியம் | இந்தியன் |
பிறப்பு | 27 ஆகத்து 1993 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
விளையாட்டு | |
நாடு | இந்தியா |
விளையாட்டு | வாள்வீச்சு |
பயிற்றுவித்தது | சகர் எஸ் , இந்தியா |
சாதனைகளும் விருதுகளும் | |
மிகவுயர் உலக தரவரிசை | 43 |
ஆரம்பகால வாழ்க்கை
தொகுபவானி தேவி தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்தார். இவரது தந்தை ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள சமல்கோட்டு நகரத்தைச் சேர்ந்த தெலுங்கு குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் இறுதியில் சென்னைக்கு குடிபெயர்ந்தார்.[6] தந்தை ஒரு மதபோதகர், தாய் ஓர் இல்லத்தரசி என்பது இவர் குடும்பப் பின்னணியாகும். பவானி தேவி தனது விளையாட்டு வாழ்க்கையை 2004 ஆம் ஆண்டில் தொடங்கினார். சென்னை, முருக தனுசுகோடி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். பின்னர் சென்னையிலுள்ள புனித வளனார் பொறியியல் கல்லூரியில் பயின்றார்.[7] கேரளாவின் தலச்சேரியில் உள்ள அரசு பிரென்னன் கல்லூரியில் வணிக நிர்வாகப் படிப்பை முடித்தார்.[8]
2004 ஆம் ஆண்டில், பள்ளி அளவில் வாள்வீச்சுக்கு அறிமுகமானா.[9] 10 ஆம் வகுப்பு முடித்த பிறகு, கேரளாவின் தலச்சேரியில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் பயிற்சி மையத்தில் சேர்ந்தார். 14 ஆவது வயதில், துருக்கியில் நடந்த தனது முதல் பன்னாட்டுப் போட்டியில் தோன்றினார். அங்கு மூன்று நிமிடங்கள் தாமதமாக வந்ததற்காக கருப்பு அட்டை பெற்றார். 2010 ஆம் ஆண்டு பிலிப்பைன்சு நாட்டில் நடந்த ஆசிய வெற்றியாளர் போட்டியில் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.[10]
போட்டிகளும் பதக்கங்களும்
தொகு2009 ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற பொதுநலவாய வெற்றியாளர் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வாங்கி பவானி பதக்க வேட்டையைத் தொடங்கினார். 2010 ஆம் ஆண்டு தாய்லாந்தின் பன்னாட்டு திறந்த நிலை போட்டியில் ஓபனில் பவானி வெண்கலப் பதக்கம் வென்றார். பிலிப்பீன்சு நாட்டில் 2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய படைவீரர்களுக்கான ஆசிய வெறறியாளர் போட்டி, மங்கோலியாவின் உலன்பாதரில் 2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற 23 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஆசிய வெற்றியாளர் போட்டி, மற்றும் 2015 ஆம் ஆண்டில் பெல்சியம் நாட்டில் நடைபெற்ற பிளெமிசு திறந்தநிலை போட்டி ஆகியவற்றில் தொடர்ந்து வெண்கலப் பதக்கங்களை வென்றார்.
2014 ஆம் ஆண்டு பிலிப்பீன்சு நாட்டில் நடைபெற்ற 23 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஆசிய வெற்றியாளர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பவானி தேவி பெற்றார்.[11] இவ்வெற்றிக்குப் பிறகு , தமிழ்நாடு முதலமைச்சர் செயலலிதா, பவானி தேவி அமெரிக்காவில் பயிற்சி பெறுவதற்காக அவருக்கு மூன்று லட்சம் ரூபாய் நிதியுதவியாக வழங்கினார்.[12]
2015 ஆம் ஆண்டில், இராகுல் திராவிட் தடகள வழிகாட்டித் திட்டத்திற்காக ' கோ விளையாட்டு அறக்கட்டளை தேர்ந்தெடுத்த 15 விளையாட்டு வீரர்களில் இவரும் ஒருவரானார்.[13]
செர்சி தீவில் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய வெற்றியாளர் போட்டியிலும், 2014 ஆம் ஆண்டு இத்தாலியில் நடைபெற்ற தசுகனி கோப்பை போட்டியிலும் பவானி தங்கப் பதக்கங்களை வென்றார். இரெய்காவிக்கில் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற வைகிங் கோப்பை போட்டியில் ஐந்தாவது இடம் பிடித்தார். பெல்சியத்தில் 2019 ஆம் ஆண்டு போட்டியில், அசர்பைசானைச் சேர்ந்த பாசுடா அன்னாவிடம் தோல்வியடைந்த பிறகு, பெண்களுக்கான தனிநபர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.[14][15]
கான்பெராவில் நடைபெற்ற மூத்தோர் பொதுநலவாய வாள்வீச்சு வெற்றியாளர் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். இந்த சிறப்பைப் பெற்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றைப் படைத்தார். அரையிறுதியில் இசுக்காட்லாந்தைச் சேர்ந்த கேட்ரியோனா தாம்சனை தோற்கடித்தார், பின்னர் இங்கிலாந்தின் எமிலி ருவாக்சை தோற்கடித்தார்.
இத்தாலியிலும், கேரளாவின் தலச்சேரியில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்திலும் பயிற்சி பெறுகிறார்.[16]
2021 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு இரண்டாவது சுற்று வரை முன்னேறினார். உலக வாள் வீச்சு தரவரிசையில் பவானி தேவி 42 ஆவது இடத்தில் உள்ளார். 2021 ஆம் ஆண்டு பவானி தேவிக்கு அர்ச்சுணா விருது வழங்கப்பட்டது.[17]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Tokyo Olympics 2021: Bhavani Devi becomes first Indian fencer to qualify for the Games". India Today (in ஆங்கிலம்). March 14, 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-08-03.
- ↑ "Bhavani Devi becomes first Indian fencer to qualify for Olympics". The Hindu. 2021-03-14. பார்க்கப்பட்ட நாள் 2021-03-14.
- ↑ Anirudh Menon (2021-03-14). "Bhavani Devi becomes first Indian fencer ever to qualify for Olympics". ESPN. பார்க்கப்பட்ட நாள் 2021-03-14.
- ↑ "Bhavani Devi becomes first Indian fencer to win medal in Asian Championships, finishes with bronze". The Times of India. 19 June 2023.
- ↑ "Bhavani Devi wins bronze, becomes first Indian to win Asian Fencing C'ship medal". Sportstar. 19 June 2023.
- ↑ Adivi, Sashidhar (2021-03-19). "Fencing with destiny: Bhavani Devi". Deccan Chronicle (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-11.
- ↑ "Who is Bhavani Devi - The first Indian fencer to qualify for Olympics?". Olympics.com.
- ↑ "Chadalavada Anandha Sundhararaman Bhavani Devi". International Fencing Federation. Archived from the original on 11 May 2021.
- ↑ "Tamil Nadu fencer Bhavani talks about battling against the odds to succeed in a fledgling sport". Sportskeeda.com. பார்க்கப்பட்ட நாள் 2016-09-08.
- ↑ Roshne B (2016-04-13). "Will a Fencer's Sabre Strike Gold?". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2016-09-08.
- ↑ Venugopal, Ashok (2014-10-13). "Sword of Bhavani Fetches Asian First". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2016-09-08.
- ↑ "Jaya announces sports scholarship, reward for students".
- ↑ "Go Sports Foundation Selected 15 athletes for Rahul Dravid Athlete Mentorship Programme". Chennai Newz. Archived from the original on 3 June 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-09-08.
- ↑ "Tournoi Satellite Fencing: India's CA Bhavani Devi wins silver in sabre individual category after going down to Azerbaijan's Bashta Anna". Firstpost. 30 September 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-11-22.
- ↑ Venkatesan, S. Prasanna. "Bhavani Devi clinches silver in Belgium meet". Sportstar (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-13.
- ↑ Kishore, M. Hari (2018-11-24). "Commonwealth fencing championship: Bhavani Devi wins gold" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/sport/other-sports/commonwealth-fencing-championship-bhavani-devi-wins-gold/article25587330.ece.
- ↑ "National Sports Awards 2021 announced".