சனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி

(ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சனநாயகத் தெமிழ்த் தேசியக் கூட்டணி (Democratic Tamil National Alliance, DTNA), என்பது இலங்கையில் இலங்கைத் தமிழரைப் பிரதிநிதித்துவப் படுத்தும் ஓர் அரசியல் கூட்டணி ஆகும். இக்கூட்டணி இலங்கைத் தேர்தல் திணைக்களத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஓர் அரசியல் கட்சி ஆகும். இதன் தேர்தல் சின்னம் குத்துவிளக்கு ஆகும்.[1]

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி
Democratic Tamil National Alliance
சுருக்கக்குறிDTNA
செயலாளர் நாயகம்வேலாயுதம் நல்லநாதர்
தொடக்கம்2008 (2008) (தமிழ் சனநாயகத் தேசியக் கூட்டமைப்பாக)
சனவரி 13, 2023 (2023-01-13) (சனநாயகத் தமிழ்த் தேசியக் க்ட்டணியாக)
தலைமையகம்16 ஏக் வீதி, பம்பலப்பிட்டி, கொழும்பு
கொள்கைதமிழ்த் தேசியம்
நாடாளுமன்றம்
4 / 225
மாகாணசபைகள்
0 / 455
உள்ளூராட்சி சபைகள்
0 / 8,327
தேர்தல் சின்னம்
குத்துவிளக்கு
இலங்கை அரசியல்

வரலாறு

தொகு

2008 ஆம் ஆண்டில் தமிழ் சனநாயகத் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் (TDNA) சனநாயக மக்கள் விடுதலை முன்னணி,[a] ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா அணி),[b] தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியன இணைந்து 2008 கிழக்கு மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிட்டது.[2][3] இத்தேர்தலில் இக்கூட்டணி 1.30% வாக்குகளைப் பெற்று, ஒரு இடத்தை மட்டும் (ஆர். துரைரத்தினம்) மட்டக்களப்பு மாவட்டத்தில் பெற்றது.[4][5]

2009 இல் ஈழப் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதை அடுத்து, இலங்கைத் தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்குமாறு புலம்பெயர் ஈழத்தமிழர் அழுத்தம் கொடுக்கத் தொடங்கினர், எனவே தமிழ் சனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் புளொட், தவிகூ ஆகிய கட்சிகள் இலங்கைத் தமிழரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மிகப்பெரிய அரசியல் குழுவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் (ததேகூ) இணைந்தன.[6] சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ததேகூ உறுப்புக் கட்சியான ஈபிஆர்எல்எஃப் (சுரேஷ் பிரிவு) கட்சியின் எதிர்ப்பின் காரணமாக சுகு என்ற டி. சிறீதரன் தலைமையிலான ஈபிஆர்எல்எஃப் (பத்மநாபா பிரிவு) ததேகூ இல் சேர அனுமதிக்கப்படவில்லை.[6] தமிழ் சனநாயகத் தேசியக் கூட்டமைப்பு அதன் பிறகு செயலற்ற நிலையில் இருந்தது.

2022 திசம்பரில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய அங்கமான இலங்கைத் தமிழரசுக் கட்சி, 2023 இலங்கை உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்தது..[7][8] இதற்குப் பதிலடியாக, தமிழ் சனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் எஞ்சியிருந்த இரண்டு உறுப்பினர்களான புளொட், தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) ஆகிய கட்சிகள் 2023 சனவரி உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடுவதற்காக "சனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி" என்ற புதிய கூட்டணியைத் தொடங்கின.[7][9] இந்தக் கூட்டணியில் ஈபிஆர்எல்எஃப் (சுரேஷ்), தமிழ்த் தேசியக் கட்சி, சனநாயகப் போராளிகள் கட்சி ஆகியவை இந்தக் கூட்டணியில் இணைந்தன.[10][11][12]

கூட்டணிக் கட்சிகள்

தொகு

நடப்பு

தொகு
கட்சி தலைவர் நாடாளுமன்றம்
சனநாயகப் போராளிகள் கட்சி சிவானந்தன் நவீந்திரா
0 / 225
சனநாயக மக்கள் விடுதலை முன்னணி
(தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்)
தர்மலிங்கம் சித்தார்த்தன்
1 / 225
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (சுரேஷ்) சுரேஷ் பிரேமச்சந்திரன்
0 / 225
தமிழீழ விடுதலை இயக்கம் செல்வம் அடைக்கலநாதன்
3 / 225
தமிழ்த் தேசியக் கட்சி ந. சிறீகாந்தா
0 / 225

தேர்தல் முடிவுகள்

தொகு

மாகாணசபை

தொகு
தேர்தல் கிழக்கு மாகாண சபை வட மாகாண சபை நாடு முழுவதும்
வாக்குகள் % # இருக்கைகள் +/– அரசாங்கம் வாக்குகள் % # இருக்கைகள் +/– அரசாங்கம் வாக்குகள் % # இருக்கைகள் +/–
2008–09 7,714 1.30% 4-ஆவது
1 / 37
எதிர்க்கட்சி தேர்தல் இல்லை 7,714 0.09% 10-ஆவது
1 / 417
-

குறிப்புகள்

தொகு
  1. சனநாயக மக்கள் விடுதலை முன்னணி என்பது புளொட்டின் அரசியல் பிரிவாகும்.
  2. The ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எஃப், பத்மநாபா அணி) முன்னர் ஈபிஆர்எல்எஃப் (வரதர் அணி) ஆக இருந்தது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Details of Recognized Political Parties". Rajagiriya, Sri Lanka: Election Commission of Sri Lanka. 25 January 2023. Archived from the original on 28 September 2022. பார்க்கப்பட்ட நாள் 5 February 2023.
  2. "PLOTE, EPRLF, TULF to contest under one wing". தமிழ்நெட். 29 March 2008 இம் மூலத்தில் இருந்து 1 December 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221201125239/https://www.tamilnet.com/art.html?catid=13&artid=25136. 
  3. "New alliance for Eastern polls". பிபிசி Sinhala (London, U.K.). 30 March 2008. https://www.bbc.com/sinhala/news/story/2008/03/printable/080330_tamil_alliance. 
  4. "UPFA wins 'rigged' EPC election". தமிழ்நெட். 11 May 2008 இம் மூலத்தில் இருந்து 5 December 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221205041127/https://www.tamilnet.com/art.html?catid=13&artid=25609. 
  5. Muralidhar Reddy, R. (6 November 2009). "For a new term". பிரண்ட்லைன் (Chennai, India: தி இந்து குழுமம்) இம் மூலத்தில் இருந்து 22 September 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200922212229/https://frontline.thehindu.com/world-affairs/article30185191.ece. 
  6. 6.0 6.1 Jeyaraj, D. B. S. (18 May 2013). "Tamil National Alliance Faces Acute Political Crisis". டெய்லி மிரர் (Colombo, Sri Lanka) இம் மூலத்தில் இருந்து 2 July 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220702045449/https://www.dailymirror.lk/29624/tamil-national-alliance-faces-acute-political-crisis. 
  7. 7.0 7.1 Jeyaraj, D. B. S. (21 January 2023). "TNA was Born in 2001 Due to Elections Shock of 2000". டெய்லி மிரர் (Colombo, Sri Lanka) இம் மூலத்தில் இருந்து 24 January 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230124033717/https://www.dailymirror.lk/opinion/TNA-was-Born-in-2001-Due-to-Elections-Shock-of-2000/172-252665. 
  8. "Tamil parties circles as Tamil National Alliance in crisis". Tamil Guardian. 10 January 2023 இம் மூலத்தில் இருந்து 10 January 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230110195106/https://www.tamilguardian.com/content/tamil-parties-circles-tamil-national-alliance-crisis. 
  9. "Democratic TNA - New alliance formed ahead of local elections". Tamil Guardian. 14 January 2023 இம் மூலத்தில் இருந்து 14 January 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230114200417/https://www.tamilguardian.com/content/democratic-tna-new-alliance-formed-ahead-local-elections. 
  10. Jeyaraj, D. B. S. (25 January 2023). "How the TNA became 'Tiger Nominated Agents'". Daily FT (Colombo, Sri Lanka) இம் மூலத்தில் இருந்து 26 January 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230126193638/https://www.ft.lk/columns/How-the-TNA-became---Tiger-Nominated-Agents-/4-744490. 
  11. Kamalendran, Chris (15 January 2023). "TNA splits, new alliance emerges for local polls". சண்டே டைம்சு (Colombo, Sri Lanka). https://www.sundaytimes.lk/230115/news/tna-splits-new-alliance-emerges-for-local-polls-508687.html. 
  12. "சம்பந்தன் யார்?" (in ta). வீரகேசரி (இதழ்) (Colombo, Sri Lanka). 28 January 2023 இம் மூலத்தில் இருந்து 28 January 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230128211413/https://www.virakesari.lk/article/146913.