ஜமீலா பிரகாசம்
ஜமீலா பிரகாசம் (Jameela Prakasam) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் 13வது கேரள சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார். இவர் ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) கட்சியின் உறுப்பினராக கோவளம் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1]
ஜமீலா பிரகாசம் Jameela Prakasam | |
---|---|
தொகுதி | கோவளம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 19 மே 1957 |
தேசியம் | இந்தியா |
துணைவர் | நீலலோகிததாசன் நாடார் |
பிள்ளைகள் | இரு மகள்கள் |
வாழிடம்(s) | கிளிவூர், திருவனந்தபுரம், கேரளம் |
தொழில் வாழ்க்கை
தொகு1972 ஆம் ஆண்டில் கேரளப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் துணைத் தலைவராக அரசியலில் நுழைந்தார். திருவனந்தபுரம் கிளையில் உள்ள திருவாங்கூர் ஸ்டேட் வங்கியின் துணைப் பொது மேலாளராக பணியாற்றினார். மார்ச் 2011 இல், இவர் தானாக முன்வந்து சேவையிலிருந்து ஓய்வு பெற்று முழுநேர அரசியல்வாதியாகவும் ஆர்வலராகவும் ஆனார்.
சொந்த வாழ்க்கை
தொகுஜமீலா, 1957 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதி ஆர். பிரகாசம் மற்றும் லில்லி பிரகாசம் ஆகியோரின் மகளாகப் பிறந்தார். இவர் முனைவர் நீலலோகிததாசன் நாடார் என்பவரை மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது மூத்த மகள் தீப்தி தலைமைச் செயலகத்தில் பணிபுரிகிறார். விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பணிபுரிந்த இளம் விஞ்ஞானியான இவரது இளைய மகள் திவ்யா 2010 ஆகஸ்ட் 29 அன்று தற்கொலை செய்து கொண்டார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Members - Kerala Legislature". Archived from the original on 13 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 30 April 2016.
- ↑ "Profile: Smt. Jameela Prakasam". Government of Kerala. Archived from the original on 3 April 2013. பார்க்கப்பட்ட நாள் 14 June 2013.