ஜம்யாங் செரிங் நம்கியால்

இந்திய அரசியலவாதி

ஜம்யாங் செரிங் நம்கியால் (Jamyang Tsering Namgyal) (பிறப்பு: 4 ஆகஸ்டு 1985) பாரதிய ஜனதா கட்சியின் இளம் அரசியல்வாதியான இவர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லடாக் மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக, 2019-ஆம் ஆண்டில் நடைபெற்ற 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்று இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ஆனார். இவரது சமயம் பௌத்தம் ஆகும்.

ஜம்யாங் செரிங் நம்கியால்
Jamyang Tsering Namgyal.jpg
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
23 மே 2019
தொகுதி லடாக் மக்களவைத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு 4 ஆகத்து 1985 (1985-08-04) (அகவை 34)
மாதோ கிராமம், லே, ஜம்மு காஷ்மீர், இந்தியா
வாழ்க்கை துணைவர்(கள்) சோனம் வாங்மோ
பணி அரசியல்வாதி

முன்னதாக இவர் லடாக் மலைப்பகுதி வளர்ச்சி தன்னாட்சி குழுவின் உறுப்பினராக 9 நவம்பர் 2018-இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]பின்னர் அதே வளர்ச்சிக் குழுவின் 8-வது தலைமை நிர்வாக கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

பாராட்டுகள்தொகு

உள்துறை அமைச்சர் அமித் ஷா 6 ஆகஸ்டு 2019 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்திய, 2019 ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்ட வரைவுத் தீர்மானித்தை ஆதரித்து ஜம்யாங் செரிக் நம்கியால் 20 நிமிடங்கள் பேசினார். மக்களவையில் இவரது பேச்சு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற உறுப்பினர்களின் பாரட்டைப் பெற்றது.[3] [4][5]

மேற்கோள்கள்தொகு

பகுப்பு:ஜம்மு காஷ்மீர் மக்கள்]]