ஜலந்தர் சோடல் கோயில்

சோடல் கோயில் அல்லது பாபா சோடல் மந்திர் (Sodal temple of Jalandhar) என்றறியப்படும் இந்தக் கோயில், இந்திய பஞ்சாப் பகுதியில் பஞ்சாப் மாகாணத்தின் ஜலந்தர் நகரில் அமைந்துள்ளது. 'பாபா சோடன்' என்பவருக்காக தாபிக்கப்பட்ட இக்கோயில், பஞ்சாப் ஜலந்தரின் பிரசித்தி பெற்ற புராதனக் கோயில்களில் ஒன்றாக அறியப்படுகிறது.[1]

தல வரலாறு தொகு

சோடல் பாபாவை பற்றி சொல்லப்படும் ஒரு புராண கதையின்படி, தனது தாயுடன் அருகிலிருந்த ஒரு குளத்திற்கு இந்த பாபா சென்றுள்ளார். அவர், சிறிய மண் உருண்டைகளை தன் தாய் மீது விட்டெறிந்து விளையாடியதாகவும், இதனால் சற்று சினங்கொண்ட அவரது தாய் கோபத்தில் தன்னை மறந்து அவரை சபித்ததாகவும் கூறப்படுகிறது. திரும்பவும் அவரை சபிக்க தூண்டிய பாபா அதன்படியே குளத்தில் விழுந்து பின் திரும்பவேயில்லை என்றும் பின்னர், ஒரு பாம்பு வடிவத்தில் குளத்திலிருந்து வெளிப்பட்ட பாபாஜி பின் இவ்வுலகைவிட்டு மறைந்ததாகவும் நம்பப்படுகிறது.[2]

தல விவரம் தொகு

இக்கோயிலில், ஒரு சிறிய ஆண் குழந்தை (சோடல்) கடவுளாக வழிபடப்படுகிறது. மேலும், இத்தலத்தின் மூலவராக உள்ள பாபா எனப்படும் சோடல், ஜலந்தர் நகரின் 'கத்ரி' சமுதாயத்தை (Khatri caste in Jalandhar) சார்ந்த சத்தா (Chadha) இனவழித் குடும்பத்திற்கு சொந்தமானவர் என நம்பப்படுகிறது. இந்த கோயிலில் சோடல் சிலையொன்று பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது, அச்சிலையை வணங்குவோருக்கு நினைத்தது நிறைவுறும் என்றும், அதிலும் குறிப்பாக குழந்தைகள் வேண்டுதல் விரைவில் நடப்பதாக ஒரு தொன்னம்பிக்கை உள்ளது.[3]

சுற்றுலா தகவல்: தொகு

பாபா சோடல் கோயிலுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்ள, அமிருதசரசுவில் உள்ள சுற்றுலா தகவல் மையத்தில் அதற்கான சுற்றுலா தகவல் அலுவலகம் உள்ளது. மேலும் தகவலுக்கு, பின்வரும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

சான்றாதாரங்கள் தொகு

  1. "Sodal Mandir, Jalandhar city (Punjab)". www.punjabspider.com (ஆங்கிலம்). 13 May 2011. பார்க்கப்பட்ட நாள் 2016-07-20.
  2. "Sodal Temple History-Origin-Importance-Architecture". www.hoparoundindia.com (ஆங்கிலம்). Feb 20 2014. Archived from the original on 2014-07-16. பார்க்கப்பட்ட நாள் 2016-07-20. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. "About Sodal Temple Information-Jalandhar". www.hoparoundindia.com (ஆங்கிலம்). Feb 20 2014. Archived from the original on 2018-05-30. பார்க்கப்பட்ட நாள் 2016-07-20. {{cite web}}: Check date values in: |date= (help)
  4. "Sodal Temple Info-Contact Details". www.hoparoundindia.com (ஆங்கிலம்). Feb 20 2014. Archived from the original on 2014-07-14. பார்க்கப்பட்ட நாள் 2016-07-21. {{cite web}}: Check date values in: |date= (help)

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜலந்தர்_சோடல்_கோயில்&oldid=3930390" இலிருந்து மீள்விக்கப்பட்டது