ஜலந்தர் துளசி கோயில்

துளசி கோயில் (Tulsi Temple) (வடமொழி:துளசி மந்திர்) என அழைக்கப்படும் இக்கோயில், இந்திய பஞ்சாப் மாகணத்தின் ஜலந்தர் நகரில் அமைந்துள்ளது. ஜலந்தரின் புகழ் பெற்ற ஒரு நினைவுச் சின்னமாகவும், மற்றும் பண்டைய கோயிலாகவும் உள்ள இது, முற்காலத்தில் விருந்தா தேவி கோயில் என அழைக்கப்பட்டது.[1]

தல வரலாறு தொகு

தற்போதுள்ள துளசி கோயில், விருந்தா தேவியின் நினைவாக நிர்மாணிக்கப்பட்டதாக அறியப்படுகிறது. 'விருந்தா தேவி' என்பவள், ஒரு அரக்கர் குல அரசனான 'ஜலந்தரா' என்பவனின் மனைவி என்று கூறப்படுகிறது. மேலும், அதற்கு ஆதாரமாக இக்கோயிலுக்கு அருகில் ஜலந்தரா (நீருக்கு, வடமொழியில் ஜலம் என்று பொருள்) என்ற புனித குளமொன்று உள்ளது, அக்குளத்தில் ஜலந்தரா அரசன் நாள்தோறும் குளிக்கப் பயன்படுத்தியதாக அப்பகுதியில் நம்பப்படுகிறது.[2]

தலத் தகவல் தொகு

துளசி கோயிலுக்கு அருகில், துர்க்கையின் (தமிழ்: கொற்றவை) மாற்றொரு அவதாரமான அன்னபூர்ணா தேவியின் சிலை நிறுவப்பட்ட ஒரு குடைவரை காணப்படுகிறது. இந்து மரபில் உணவு மற்றும் தானிய செழிப்புக்கான கடவுளாக இந்த அன்னபூர்ணா தேவி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த துளசி கோயிலின் வளாகத்திலேயே அமைந்துள்ள மற்றுமொரு சன்னிதி, சீதலா தேவி கோயில். இக்கோயில், ஜலந்தர் நகரத்தை ஒத்த பழமையை உடையதாக கருதப்படுகிறது. இவை தவிர இந்த கோயில் பிரகாரத்தில் சிவன் கோயில் ஒன்றும், மற்றும் பிரம குண்டம் போன்ற இதர ஆன்மீக அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.[3]

சுற்றுலா தகவல் தொகு

ஜலந்தர் துளசி கோயில் சுற்றுலாப் பயணம் மேற்கொள்ள, அமிருதசரசுவில் உள்ள சுற்றுலா தகவல் மையத்தில் அதற்கான சுற்றுலா தகவல் அளிக்க தனி அலுவலகம் உள்ளது. மேலும், சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக, ஜலந்தர் நகரத்தில் பயணிகளின் வசதிக்கேற்ப எளிய, மற்றும் சொகுசுகளுடன் கூடிய பல விடுதிகள் உள்ளது. மேலுமறிய பின்வரும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

புற இணைப்புகள் தொகு

சான்றாதாரங்கள் தொகு

  1. "About Tulsi Mandir Information-Jalandhar". www.hoparoundindia.com (ஆங்கிலம்). © 2012. Archived from the original on 2018-05-30. பார்க்கப்பட்ட நாள் 2016-07-21. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. "Tulsi Mandir History-Origin-Importance-Architecture". www.hoparoundindia.com (ஆங்கிலம்). © 2012. Archived from the original on 2014-07-14. பார்க்கப்பட்ட நாள் 2016-07-22. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. "Tulsi Mandir". www.mapsofindia.com (ஆங்கிலம்). 17th Dec 2012. பார்க்கப்பட்ட நாள் 2016-07-22. {{cite web}}: Check date values in: |date= (help)
  4. "Tulsi Mandir Info-Contact Details". www.hoparoundindia.com (ஆங்கிலம்). 2016. Archived from the original on 2014-07-06. பார்க்கப்பட்ட நாள் 2016-07-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜலந்தர்_துளசி_கோயில்&oldid=3572925" இலிருந்து மீள்விக்கப்பட்டது