ஜவஹர்லால் நேரு அரசு கல்லூரி
ஜவஹர்லால் நேரு அரசு கல்லூரி (Jawaharlal Nehru Government College) அல்லது ஜவஹர்லால் நேரு ராஜ்கிய மகாவித்யாலயா, போர்ட் பிளேயர் என்பது 1967-ல் நிறுவப்பட்ட கலை அறிவியல் கல்லூரி ஆகும். இக்கல்லூரி இந்தியாவின் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள போர்ட் பிளேயரில் உள்ள பழமையான கல்லூரி ஆகும். இங்கு அறிவியல், கலை மற்றும் வணிகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை கல்வி போதிக்கப்படுகிறது. இக்கல்லூரி பாண்டிச்சேரியில் உள்ள புதுவைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[1]
முந்தைய பெயர் | அரசுக் கல்லூரி |
---|---|
குறிக்கோளுரை | உங்களால் என்ன செய்ய முடியும் என்பதை உலகுக்குச் சொல்லாதீர்கள், அதைச் செய்து காட்டுங்கள் |
வகை | இளநிலை & முதுநிலை |
உருவாக்கம் | 1967 |
மாணவர்கள் | 4500 |
அமைவிடம் | , , |
வளாகம் | நகரம் |
இணையதளம் | http://jnrm.and.nic.in/ |
வரலாறு
தொகுஜவஹர்லால் நேரு ராஜ்கிய மகாவித்யாலயா போர்ட்பிளேயரில் 1967ஆம் ஆண்டு அரசு கல்லூரியாக நிறுவப்பட்டது. இக்கல்லூரி முதலில் சண்டிகாரில் அமைந்துள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் இணைப்பின் கீழ் செயல்பட்டது. அந்தமான் & நிக்கோபார் தீவுகள் புவியியல் ரீதியாகத் தொலைவில் இப்பல்கலைகழக்த்திற்கு வெகு தொலைவில் உள்ளது. எனவே 1987-ல் நிர்வாக வசதிக்காக இக்கல்லூரியின் இணைப்பு பஞ்சாப் பல்கலைக்கழகத்திலிருந்து அருகில் உள்ள, புதுவைப் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்திற்கு மாறியது. இது அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் ஒன்றிய பிரதேசத்தில் முதல் பட்டப்படிப்பு கல்லூரி ஆகும். இந்த பிராந்தியத்தில் உயர் கல்வி வழங்கும் நோக்கத்தினைக் கொண்டு தொடங்கப்பட்டது.
துறைகள்
தொகுஅறிவியல்
தொகு- வேதியியல்
- இயற்பியல்
- கணிதம்
- தாவர அறிவியல்
- விலங்கியல்
- கணினி அறிவியல்
- பொருளாதாரம்
- மனைஅறிவியல்
வணிகம் மற்றும் கலை
தொகு- வர்த்தகம்
- ஆங்கிலம்
- இந்தி
- தமிழ்
- பெங்காலி
- நிலவியல்
- வரலாற்று ஆய்வுகள்
- அரசியல் அறிவியல்
- உடற்கல்வி
- சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை
அங்கீகாரம்
தொகுஇக்கல்லூரி தில்லியில் உள்ள பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.