ஜஸ்ரின் ஞானப்பிரகாசம்

பேரருட்திரு ஜஸ்ரின் பேனார்ட் ஞானப்பிரகாசம் (Right Reverend Justin Bernard Gnanapragasam, பிறப்பு: 13 மே 1948) இலங்கைத் தமிழ் கத்தோலிக்கக் குருக்களும், தற்போதைய உரோமன் கத்தோலிக்க யாழ்ப்பாண ஆயரும் ஆவார்.

பேரருட்திரு
ஜஸ்ரின் ஞானப்பிரகாசம்
Justin Gnanapragasam
யாழ்ப்பாண ஆயர்
சபைகத்தோலிக்க திருச்சபை
மறைமாநிலம்கொழும்பு
மறைமாவட்டம்யாழ்ப்பாணம்
ஆட்சி துவக்கம்13 அக்டோபர் 2015
முன்னிருந்தவர்தோமசு சௌந்தரநாயகம்
பிற தகவல்கள்
பிறப்பு13 மே 1948 (1948-05-13) (அகவை 72)
கரம்பொன், இலங்கை
படித்த இடம்திருத்தந்தைக் குருமடம், புனே, இந்தியா

ஆரம்ப வாழ்க்கைதொகு

ஞானப்பிரகாசம் 1948 மே 13 இல் இலங்கையின் வடக்கே கரம்பொன் என்ற ஊரில் பிறந்தார்.[1][2] ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியிலும், யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியிலும் கல்வி கற்றார்.[3][4] பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்ட பின்னர் கண்டி தேசிய குருமடத்திலும், பின்னர் புனேயில் உள்ள பாப்பிறைக் குருமடத்திலும் கற்று இறையியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[1]

பணிதொகு

ஞானப்பிரகாசம் 1974 ஏப்ரலில் குருநிலைப்படுத்தப்பட்டார்.[1][2] கிளிநொச்சி, வலைப்பாடு (1974-75), உருத்திரபுரம் (1975-76), இளவாலை (1976-79) ஆகிய இடங்களில் துணைக்குருக்களாகப் பணியாற்றினார்.[1] 1979-80 காலப்பகுதியில் இங்கிலாந்து ஹல் பல்கலைக்கழகத்தில் படித்து பொதுப்படையான இறையியலில் பட்டம் பெற்றார்.[1] பின்னர் இலங்கை திரும்பி இளவாலை மாரீசன்கூடல் கோவிற்பற்று குருக்களாகவும், இளவாலை புனித என்றீசு கல்லூரியில் துணைத் தலைவராகவும் (vice-rector, 1980-85) பணியாற்றினார்.[1] 1982-1984 காலப்பகுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக்க்ழகத்தில் கிறித்தவ நாகரிகத் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.[5]

1986 இல் மீண்டும் இங்கிலாந்து சென்று சவுத்தாம்ப்டனில் கல்வியியல் அறிவியல் பயின்று 1989 இல் பட்டம் பெற்றார்.[1] பின்னர் இளவாலை புனித என்றீசு கல்லூரியின் தலைவராகவும் (1990-94), இளவாலை Deanery இன் பீடாதிபதியாகவும் (1995-02), யாழ்ப்பாணக் குருமடத்தின் வருகைதரு பேராசிரியராகவும் (1992-06), யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியின் தலைவராகவும் (2002-07) பணியாற்றினார்.[1]

20007 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் ஆயர் பொதுப் பதில்குருவாக நியமிக்கப்பட்டார்.[1] 1998 முதல் 2014 வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மூதவை உறிப்பினராகவும் பணியாற்றினார்.[5] 2015 அக்டோபரில் 11-வது யாழ்ப்பாண ஆயராக திருத்தந்தை பிரான்சிசுவினால் நியமிக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்தொகு