ஜாஜ்ஜர் மாவட்டம்

அரியானாவில் உள்ள மாவட்டம்


ஜாஜ்ஜர் மாவட்டம் (Jhajjar district) வட இந்தியாவின் அரியானா மாநிலத்தின் இருபத்து ஒன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஜாஜ்ஜர் நகரமாகும். ரோதக் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு 15 சூலை 1997-ஆம் ஆண்டில் புதிதாக ஜாஜ்ஜர் மாவட்டம் துவக்கப்பட்டது.

ஜாஜ்ஜர் மாவட்டம்
झज्जर जिला
ஜாஜ்ஜர்மாவட்டத்தின் இடஅமைவு அரியானா
மாநிலம்அரியானா, இந்தியா
தலைமையகம்ஜாஜ்ஜர்
பரப்பு1,834 km2 (708 sq mi)
மக்கட்தொகை958,405 (2011)
மக்கள்தொகை அடர்த்தி523/km2 (1,350/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை25.39%
படிப்பறிவு80.65%
பாலின விகிதம்862
வட்டங்கள்4
மக்களவைத்தொகுதிகள்ரோத்தக் மக்களவை தொகுதி
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை4
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

புதுதில்லியிலிருந்து இருபத்து ஒன்பது கிலோ மீட்டர் தொலைவில் இம்மாவட்டம் இருப்பதன் காரணமாக, இம்மாவட்டத்தின் பேரி மற்றும் பகதூர்கர் நகரங்கள் தொழில் துறையில் நன்கு வளர்ச்சி கண்டுள்ளன.

ஜாஜ்ஜர் மாவட்டத்தின் நிவாதா எனும் சிறு கிராமத்தில் பிந்தாவாஸ் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.[1]

பொருளாதாரம்

தொகு

இம்மாவட்டம் 2408 மனைகளுடன் கூடிய பகதூர்கர் மற்றும் பேரி என இரண்டு தொழிற்பேட்டைகள் கொண்டது. ரூபாய் 3400 மில்லியன் மதிப்பிலான வெண் மண் ஓடுகள் (ceramics), கண்ணாடிகள், வேதியியல் பொறியியல், மின்சாரம் மற்றும் மின்னனு தொழிற்சாலைகள் கொண்டுள்ளது. மேலும் நாற்பத்தி எட்டு பெரிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளும், 2013 சிறு தொழிற்சாலைகளையும் கொண்டுள்ளது.

இம்மாவட்டத்தில் 648 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு வேளாண் நிலங்கள் நீர் பாசான வசதிகள் கொண்டிருப்பதால் கோதுமை, அரிசி, பார்லி பயிர்கள் பயிரிடப்படுகிறது.

மாவட்ட நிர்வாகம்

தொகு

ஜாஜ்ஜர் மாவட்டம் ஜாஜ்ஜர், பகதூர்கர் மற்றும் பேரி என மூன்று வருவாய் உட்கோட்டங்களும்; ஜாஜ்ஜர், மதன்காய்ல், பேரி, பகதூர்கர் என நான்கு வருவாய் வட்டங்களும் கொண்டுள்ளது.

அரசியல்

தொகு

இம்மாவட்டம் பகதூர்கட், பாதலி, ஜாஜ்ஜர், பேரி என நான்கு சட்டமன்ற தொகுதிகளையும், ரோத்தக் மக்களவை தொகுதியில் ஜாஜ்ஜர் மாவட்டம் உள்ளது.[2]

மக்கள் தொகையியல்

தொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி ஜாஜ்ஜர் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 958,405 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 74.61% மக்களும்; நகரப்புறங்களில் 25.39% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 8.90% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 514,667 ஆண்களும் மற்றும் 443,738 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 862 பெண்கள் வீதம் உள்ளனர். 1,834 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 523 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 80.65% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 89.31% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 70.73% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 120,051 ஆக உள்ளது. [3]

சமயம்

தொகு

இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 945,693 (98.67 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 1,042 (0.11 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 8,247 (0.86 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 734 (0.08 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 645 (0.07 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 105 (0.01 %) ஆகவும், பிற சமய மக்களின் தொகை 22 (0.00 %) ஆகவும், மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 1,917 (0.20 %) ஆகவும் உள்ளது.

மொழிகள்

தொகு

சஜ்ஜர் மாவட்டத்தில் அரியானா மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், பஞ்சாபி, உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. "Niwada a beautiful village". Archived from the original on 2017-06-03. {{cite web}}: |first= missing |last= (help)
  2. மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்
  3. Jhajjar District : Census 2011 data


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாஜ்ஜர்_மாவட்டம்&oldid=3584727" இலிருந்து மீள்விக்கப்பட்டது