முதன்மை பட்டியைத் திறக்கவும்

ஜான் மேனார்ட் கெயின்ஸ்

ஜான் மேனார்ட் கெயின்ஸ் (John Maynard Keynes - ஜூன் 5, 1883 – ஏப்ரல் 21, 1946) ஒரு பிரித்தானியப் பொருளியலாளர். கெயின்சியப் பொருளியல் என அழைக்கப்படும் இவரது எண்ணக்கரு, தற்காலப் பொருளியல், அரசியல் கோட்பாடு என்பவற்றிலும், பல அரசாங்கங்களின் நிதிக் கொள்கைகளிலும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியது. பொருளாதாரப் பின்னடைவு, பொருளாதாரப் பூரிப்பு போன்ற வற்றினால் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளை மட்டுப்படுத்துவதற்காக நிதிசார்ந்த நடவடிக்கைகளை எடுக்கும் விதத்தில் அரசாங்கம் தலையீட்டுக் கொள்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என அவர் வாதிட்டார். தற்காலக் கோட்பாட்டுப் பருப்பொருளியலின் (macroeconomics) தந்தை எனக் கருதப்படுபவர்களில் ஒருவராக இருப்பதுடன், 20 ஆம் நூற்றாண்டின் செல்வாக்கு மிக்க பொருளியலாளராகவும் இவர் உள்ளார். [1][2][3][4]

ஜான் மேனார்ட் கெயின்ஸ்
மேற்கத்தியப் பொருளியலாளர்கள்
20ஆம்-நூற்றாண்டுப் பொருளியலாளர்கள்
(கெயின்சியன் பொருளியல்)
WhiteandKeynes.jpg
ஜான் மேனார்ட் கெயின்சும் (வலது) ஹாரி டெக்ஸ்டர் வைட்டும் பிரெட்டன் வூட்ஸ் கருத்தரங்கில்
முழுப் பெயர்ஜான் மேனார்ட் கெயின்ஸ்
பிறப்புசூன் 5, 1883(1883-06-05) கேம்பிரிட்ஜ், இங்கிலாந்து
இறப்புஏப்ரல் 21, 1946(1946-04-21) (அகவை 62) டில்ட்டன், கிழக்கு சசெக்ஸ், இங்கிலாந்து
சிந்தனை
மரபு(கள்)
கெயின்சியன்
முக்கிய
ஆர்வங்கள்
பொருளியல், அரசியல் பொருளாதாரம், நிகழ்தகவு
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
செலவுப் பல்பெருக்கம்

மேற்கோள்தொகு