ஜாரெட் லெடோ

ஜாரெட் லெடோ (ஆங்கில மொழி: Jared Leto) (பிறப்பு: டிசம்பர் 26, 1971) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் இசைக்கலைஞர் ஆவார். இவர் 1992 ஆம் ஆண்டு முதல் பலவிதமான வேடங்களில் நடிக்கும் முறைக்காக அறியப்பட்டவர், அதற்காக அகாதமி விருது, ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருது, கோல்டன் குளோப் விருது மற்றும் விமர்சகர்களின் சாய்ஸ் மூவி விருது[1] உட்பட மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்து பல பாராட்டுகளைப் பெற்றார். அத்துடன் ராக் இசைக்குழுவான தேர்ட்டி செகண்ட்ஸ் டு மார்ஸ் என்ற குழுவில் உறுப்பினராகவும் மிகவும் அறியப்படுகிறார்.

ஜாரெட் லெடோ
லெடோ 66th வெனிஸ் சர்வதேச திரைப்பட விழா செப்டம்பர் 2009
பிறப்புதிசம்பர் 26, 1971 ( 1971 -12-26) (அகவை 52)
லூசியானா, ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகர், இசைக்கலைஞர்
செயற்பாட்டுக்
காலம்
1992–இன்று வரை
வலைத்தளம்
jaredleto.com

இவர் 1994 ஆம் ஆண்டு மை சோ-கால்ட் லைஃப் என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் தனது திரைத்துறை வாழ்க்கையைத் தொடங்கிய பிறகு, 1995 இல் லெட்டோ ஹவ் டு மேக் அன் அமெரிக்கன் க்வில்ட் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் அதை தொடர்ந்து 1997 இல் ப்ரீஃபோன்டைன் என்ற படத்தில் அவரது நடிப்பிற்காக விமர்சன கவனத்தைப் பெற்றார். 1998 இல் த தின் ரெட் லைன், ஃபைட் கிளப் (1999), கேர்ள், இண்டரப்டட் (1999) மற்றும் அமெரிக்கன் சைக்கோ (2000) ஆகிய படங்களில் துணை வேடங்களில் நடித்த பிறகு, 2000 இல் ரெக்விம் ஃபார் எ ட்ரீம் என்ற படத்தில் அவரது முக்கிய பாத்திரத்திற்காக பரவலான பாராட்டுகளைப் பெற்றார். பின்னர் அவர் இசையில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினார். அதை தொடர்ந்து பேனிக் ரூம் (2002), அலெக்சாண்டர் (2004), லார்ட் ஆஃப் வார் (2005) மற்றும் மிஸ்டர் நோபடி (2009), டல்லாஸ் பையர்ஸ் கிளப் (2013), சூசைட் ஸ்க்வாட்[2] (2016), பிளேட் ரன்னர் 2049 (2017), தி லிட்டில் திங்ஸ் (2021), ஹவுஸ் ஆஃப் குஸ்ஸி (2021) மற்றும் மோர்பியசு[3] (2022) போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். 2013 இல் டல்லாஸ் பையர்ஸ் கிளப் என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான அகாடமி விருதைப் பெற்றார்.[4]

மேற்கோள்கள் தொகு

  1. Whitham, Alexis. "Fantastic Transformations". California Film Institute. Archived from the original on February 2, 2014. பார்க்கப்பட்ட நாள் January 24, 2014.
  2. Kroll, Justin (December 2, 2014). "'Suicide Squad' Cast Revealed: Jared Leto to Play the Joker, Will Smith is Deadshot". Variety. https://variety.com/2014/film/news/suicide-squad-cast-revealed-jared-leto-to-play-the-joker-will-smith-is-deadshot-1201368867/. 
  3. Dave Trumbore (November 13, 2017). "'Morbius': Marvel's Living Vampire Movie in the Works as a 'Spider-Man' Spin-off". Collider. பார்க்கப்பட்ட நாள் November 13, 2017.
  4. Wang, Andrea (March 2, 2014). "Oscars 2014: Jared Leto wins supporting actor Academy Award". Los Angeles Times. https://www.latimes.com/entertainment/envelope/moviesnow/la-et-mn-oscars-2014-best-supporting-actor-story.html. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாரெட்_லெடோ&oldid=3604343" இலிருந்து மீள்விக்கப்பட்டது