ஜித்தா
சவூதி அறேபியாவின் மேற்குப் பகுதியிலுள்ள ஒரு துறைமுக நகரம்
ஜித்தா (அரபு மொழி: جدّة) என்பது சவூதி அரேபியாவில் செங்கடலின் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள ஓர் நகரமாகும். மேற்கு சவூதி அரேபியாவின் முக்கியமான வணிக மையமும் ஆகும். மக்கா மாவட்டத்தின் மிகப் பெரும் நகரமாகவும், செங்கடல் துறைமுகங்களில் மிகப் பெரியத் துறைமுக நகரமாகவும், சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தை அடுத்து இரண்டாவது மிகப் பெரும் நகரமாகவும் விளங்குகிறது. ஜித்தாவின் தற்போதைய மக்கள்தொகை 3.2 மில்லியனாக உள்ளது. இசுலாமியர்களின் மிகுந்த புனிதத் தலமான மக்காவிற்குச் செல்லும் வாயிலாக ஜித்தா விளங்குகிறது. அடுத்து புனிதமிக்க மதீனா செல்லவும் இதுவே வழியாகும்.
ஜித்தா நகரம்
جدّة Jidda | |
---|---|
அடைபெயர்(கள்): செங்கடலின் மணப்பெண் | |
ஜித்தா அமைவிடம் | |
நாடு | சவூதி அரேபியா |
மாநிலம் | மக்கா மாநிலம் |
நிறுவப்பட்டது | கி.மு 6 ஆம் நூற்றாண்டிலிருந்து |
சவூதி அரேபியாவுடன் இணைந்து | 1925 |
அரசு | |
• நகரத்தந்தை | அனி அபு ராஸ்[1] |
• நகர ஆளுனர் | மிஷால் அல்சவூத் |
• மாநில ஆளுனர் | காலித் அல் ஃபைசல் |
பரப்பளவு | |
• நகர்ப்புறம் | 1,500 km2 (600 sq mi) |
• மாநகரம் | 3,000 km2 (1,000 sq mi) |
மக்கள்தொகை (2008) | |
• நகரம் | 32,34,000 |
• அடர்த்தி | 2,921/km2 (1,826/sq mi) |
• நகர்ப்புறம் | 38,55,912 |
• பெருநகர் | 45,00,000 |
ஜித்தா நகராட்சி மதிப்பீடு | |
நேர வலயம் | ஒசநே+3 (EAT) |
• கோடை (பசேநே) | ஒசநே+3 (EAT) |
அஞ்சல் குறியீடு | (5 எண்கள்) |
இடக் குறியீடு | +966-2 |
இணையதளம் | ஜித்தா நகராட்சி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Abu Ras promises new Jeddah". Saudigazette.com.sa. 2010-08-19. Archived from the original on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2011-04-17.
வெளியிணைப்புகள்
தொகு- Municipality of Jeddah பரணிடப்பட்டது 2007-05-31 at the வந்தவழி இயந்திரம் Official municipality website (in Arabic)
- City of Jeddah பரணிடப்பட்டது 2009-07-17 at the வந்தவழி இயந்திரம் Official website (in English)
- Interactive Jeddah Map from Jeddah Municipality (Official) பரணிடப்பட்டது 2012-02-22 at the வந்தவழி இயந்திரம்
- Jeddah Principality Principality official website (in Arabic)