ஜிபனிக்கா (gibanica) (செருபிய மொழி: гибаница, வார்ப்புரு:IPA-sr) என்பது சேர்பியா நாட்டில் காணப்படும் பாரம்பரிய பேஸ்ரி உணவு வகையாகும். இது பால்கன் குடாவில் காணப்படும் உணவுவகைகளுள் இதுவே பிரசித்தமானது. இது வெண் பாலாடைக்கட்டி மற்றும் முட்டையினைக் கொண்டு செய்யப்படுகின்றது. இவ்வுணவை இனிப்புடையதாகவோ உறைப்பானதாகவோ செய்கின்றனர். அத்துடன் பல அடுக்குக்களைக் கொண்ட கேக் வகை போன்றும் ஜிபனிக்கா செய்யப்படுகின்றது.[1] பொதுவாக இது காலை உணவாக எடுக்கப்படுகின்றது. இதனை சாதாரண யோக்கட்டுடனும் அல்லது கெபிர் (Kefir) எனப்படும் பாற்பானத்துடனும் சேர்த்து உண்ணப்படுகின்றது. நத்தார், உயிர்த்த ஞாயிறு போன்ற பண்டிகை நாட்களில் இவ்வுணவு அதிகமாக மக்களால் கொள்வனவு செய்யப்படுகின்றது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிபனிக்கா&oldid=3782105" இலிருந்து மீள்விக்கப்பட்டது