ஜிம் பார்சன்ஸ்

ஜிம் பார்சன்ஸ் (Jim Parsons, பிறப்பு: மார்ச் 24, 1973) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், நகைச்சுவையாளர் மற்றும் குரல் நடிகர் ஆவார். இவர் சிபிஎஸ் என்ற தொலைக்காட்சியில் தி பிக் பேங் தியரி என்ற தொடரில் ஷெல்டன் கூப்பர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.[2][3][4] இந்த தொடரில் நடித்ததற்காக எம்மி விருது, போன்ற விருதுகளை வென்றுள்ளார்.[5] இவர் ஹேப்பி எண்ட், கார்டன் ஸ்டேட், ஹைட்ஸ், தி நோர்மல் ஹார்ட் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ஹோம் என்ற திரைப்படத்திற்கு குரல் கொடுத்துள்ளார். மற்றும் பல மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிம் பார்சன்ஸ்
பிறப்புஜேம்ஸ் ஜோசப் பார்சன்ஸ்
மார்ச்சு 24, 1973 (1973-03-24) (அகவை 50)[1]
ஹூஸ்டன்
டெக்சாஸ்
அமெரிக்கா
இருப்பிடம்லாஸ் ஏஞ்சல்ஸ்
கலிபோர்னியா
அமெரிக்கா.
கல்விக்ளீன் ஓக் உயர்நிலை பள்ளி
படித்த கல்வி நிறுவனங்கள்ஹியூஸ்டன் பல்கலைக்கழகம் (பிஏ)
சான் டியாகோ பல்கலைக்கழகம் (எம்ஏ)
பணிநடிகர்
குரல் நடிகர்
நகைச்சுவையாளர்
செயற்பாட்டுக்
காலம்
1994–இன்று வரை
பெற்றோர்மில்டன் ஜோசப் பார்சன்ஸ், ஜூனியர்
ஜூடி ஆன் மெக்நைட்
துணைவர்டோட் ஸ்பிவக் (2002–இன்று வரை)

ஆரம்பகால வாழ்க்கை தொகு

ஜிம் பார்சன்ஸ் மார்ச் 24, 1973ஆம் ஆண்டு ஹூஸ்டன் டெக்சாஸ் அமெரிக்காவில் பிறந்தார். இவரின் தந்தை மில்டன் ஜோசப் பார்சன்ஸ், ஜூனியர் ஆவார், மற்றும் தாயார் ஜூடி ஆன் மெக்நைட் ஒரு ஆசிரியர் ஆவார். இவருக்கு ஜூலி ஆன் என்ற ஒரு சகோதரி உண்டு அவரும் ஒரு ஆசிரியர் ஆவார்.[6][7][8] இவர் தனது படிப்பை க்ளீன் ஓக் உயர்நிலை பள்ளியில் பயின்றார். இவர் பிஏ மற்றும் எம்ஏ பட்டம் பெற்றவர்.

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

இவர் தற்பொழுது நகரில் லாஸ் ஏஞ்சல்ஸ் கலிபோர்னியாவில் வசித்து வருகின்றார்.[9] 2012இல் நியூ யோர்க் டைம்ஸ் இதழில் தன்னை தன்பாலீர்ப்பாளராக அடையாளப்படுத்திக்கொண்டார். இவர் 2017ஆம் ஆண்டில் டோட் ஸ்பிவக் என்ற கலை இயக்குநரைத் திருமணம் செய்துகொண்டார்.[10]

திரைப்படங்கள் தொகு

  • 2003: ஹேப்பி எண்ட்
  • 2004: கார்டன் ஸ்டேட்
  • 2005: ஹைட்ஸ்
  • 2005: தி கிரேட் நியூ வொண்டர்புல்
  • 2005: தி கிங்'ஸ் இன்
  • 2006: 10 இட்ம்ஸ் ஓர் லேஸ்
  • 2007: கார்டனர் ஒப் எடேன்
  • 2011: தி பிக் இயர்
  • 2012: சன்செட் ஸ்டோரீஸ்
  • 2014: தி நோர்மல் ஹார்ட்
  • 2015: ஹோம் (குரல் மட்டும்)

தொலைக்காட்சி தொகு

மேடை நாடகங்கள் தொகு

  • தி பால்கனி
  • 1995: லா ரோன்டே
  • 1995: எண்ட்கேம்
  • 1996: ஒதல்லோ
  • 2011: டா
  • 2011: தி நோர்மல் ஹார்ட்
  • 2012: ஹார்வி

மேற்கோள்கள் தொகு

  1. "Monitor". Entertainment Weekly (1252): 30. Mar 29, 2013. https://archive.org/details/sim_entertainment-weekly_2013-03-29_1252/page/30. 
  2. Oswald, Brad. "The buzz: Jim Parsons as Sheldon". Winnipeg Free Press இம் மூலத்தில் இருந்து பிப்ரவரி 17, 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090217221127/http://www.winnipegfreepress.com/entertainment/the_tab/the_buzz-39481582.html. பார்த்த நாள்: February 13, 2009. 
  3. Salem, Rob (January 24, 2009). "Nerd herd doing a bang-up job". The Toronto Star. http://www.thestar.com/Entertainment/Television/article/575764. பார்த்த நாள்: February 13, 2009. 
  4. Gilbert, Matthew (February 8, 2009). "Gentle twists on reliable formulas keep viewers hooked". The Boston Globe. http://www.boston.com/ae/tv/articles/2009/02/08/gentle_twists_on_reliable_formulas_keep_viewers_hooked/. பார்த்த நாள்: February 13, 2009. 
  5. "61st Primetime Emmy Awards | Academy of Television Arts & Sciences". Emmys.tv. பார்க்கப்பட்ட நாள் January 30, 2010.
  6. Yates, Gerrie Jones Dickens. "Milton Joseph Parsons, Jr". Find a Grave. பார்க்கப்பட்ட நாள் September 22, 2005.
  7. Cogan, Jennifer (September 8, 2010), "Klein Oak grad takes home Emmy", Klein Sun News[தொடர்பிழந்த இணைப்பு]
  8. "Biography". Saintmarylancaster.org. 1974-03-24. Archived from the original on 2013-12-29. பார்க்கப்பட்ட நாள் 2013-08-23.
  9. Getlen, Larry (April 27, 2009). "'Big Bang Theory' Nerd May Get The Girl". New York Post. http://www.nypost.com/p/entertainment/tv/item_wdQH8p7Q2HrdQ8qX3pGa2L. பார்த்த நாள்: February 27, 2010. 
  10. Healy, Patrick (May 23, 2012). "Stalked by Shadows (and a Rabbit)". த நியூயார்க் டைம்ஸ் (The New York Times Company). http://www.nytimes.com/2012/05/27/theater/jim-parsons-prepares-for-his-lead-role-in-harvey.html?pagewanted=3&_r=1&smid=fb-share&adxnnlx=1337795070-OqM3Ntiv2kIkzKeFelw8yg. பார்த்த நாள்: May 23, 2012. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிம்_பார்சன்ஸ்&oldid=3780021" இலிருந்து மீள்விக்கப்பட்டது