ஜி. தனஞ்சயன்
ஜி. தனஞ்சயன் (G. Dhananjayan) என்பவர் ஒரு இந்திய திரைப்பட தயாரிப்பாளர், விநியோகத்தர், கட்டுரையாளர் ஆவார். இவர் இந்திய திரைப்படங்கள் குறித்த நான்கு புத்தகங்களை எழுதியுள்ளார். இவர் பி.ஓ.எப்.டி.ஏ. திரைப்படக் கல்வி நிறுவனத்தின் நிறுவனர்-இயக்குநர் ஆவார். [1] இவர் சங்கத் சிட்டி (2009), கண்டேன் காதலை (2009), முகமூடி (2012), அஞ்சான் (2014), இறுதிச்சுற்று (2016), காற்றின் மொழி (2018), கபடதாரி (2021), கோடியில் ஒருவன் (2021) போன்ற பல படங்களைத் தயாரித்துள்ளார். இவர் இந்தி,[2] தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் படங்களைத் தயாரித்துள்ளார். இவர் இரண்டு தேசிய திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளார்.
ஜி. தனஞ்சயன் | |
---|---|
![]() சிறந்த திரைப்பட விமர்சகருக்கான ஸ்வர்ண கமல் விருதை தனஞ்செயனுக்கு பிரணாப் முகர்ஜி வழங்கும்போது. | |
பிறப்பு | செஞ்சியாகரம் சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
பணி | மேலாண்மை நிபுணர், - பி.ஓஎப்.டி.ஏ. திரைப்படக் கல்வி நிறுவன இயக்குநர் |
செயற்பாட்டுக் காலம் | 2006–தற்போது |
வாழ்க்கைத் துணை | லலிதா தனஞ்சயன் |
பிள்ளைகள் | டி.எல். ஹரிதா, டி.எல். ரேவதி |
கல்வியும் பணியும்
தொகுஜி. தனஞ்சயன் மும்பை பல்கலைக்கழகத்தின் சிடன்ஹாம் மேலாண்மை நிறுவனமான சிம்ஸ்ரீயில் (1991 ஆண்டு பிரிவு) எம்பிஏ பட்டம் பெற்றார். [3] மேலும் இந்திய திரைப்படத் துறை குறித்து ஆய்வை செய்து மும்பை பல்கலைக்கழகத்தில் 2019 மார்ச்சில் முனைவர் பட்டம் பெற்றார்.
இவர் ஏசியன் பெயிண்ட்ஸ் லிமிடெட், கன்சாய் நெரோலாக் பெயிண்ட்ஸ், சரிகம, பாரதி ஏர்டெல், வோடபோன் ஆகியவற்றில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றினார். 2006 ஏப்ரலில் மோசர் பேர் என்டர்டெயின்மென்ட்டின் இரண்டு நிறுவன உறுப்பினர்களில் ஒருவராக தனஞ்சயன் இருந்தார். பின்னர் ஹோம் வீடியோ பிசினஸ் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரியாக [4] இருந்தார், பின்னர் திரைப்பட வணிகத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார்.
மோசர் பேர் என்ற பதாகையின் கீழ், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி உள்ளிட்ட பத்து மொழிகளில் 10,000க்கும் மேற்பட்ட திரைப்படங்களின் பதிப்புரிமை/சந்தைப்படுத்தல் உரிமைகளை பெற்றார். இது பொதுவாக மிகக் குறைந்த விலைக்கு விற்கப்படும் திருட்டு குறுவட்டுப் (திருட்டு சி.டி) பிரதிகளுடன் போட்டியிட்டது. [5]
இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு திரைப்படக் கல்வி நிறுவனங்களின் மாணவர்களுடன் [6] தொடர்புகொள்வதில் இவர் கணிசமான நேரத்தை செலவிடுகிறார். இவர் ஐஐடி, என்ஐடி மற்றும் பிற மேலாண்மை நிறுவனங்களில் திரைப்பட வணிகம் குறித்து உரைகளை நிகழ்தியுள்ளார். திரைப்பட வணிகம், மேலாண்மை மற்றும் பல தலைப்புகளில் பேச பல்வேறு அமைப்புகள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு இவர் அழைக்கப்படுகிறார்.
புகழ்பெற்ற திரைப்படப் படைப்பாளிகள் குறித்த ஆவணப்படங்களையும் இவர் எடுத்துள்ளார். தயாரிப்பாளர்-இயக்குநர்-எழுத்தாளர் பஞ்சு அருணாச்சலம் பற்றிய இவரது முதல் ஆவணப்படமான 'எ கிரியேட்டர் வித் மிடாஸ் டச்' கோவாவில் (2016) நடந்த சர்வதேச திரைப்பட விழாவின் இந்திய பனோரமாவில் திரையிடப்பட்டது. இது பரவலான பாராட்டைப் பெற்றது. புகழ்பெற்ற இயக்குநர் கிருஷ்ணன்-பஞ்சு பற்றிய இவரது இரண்டாவது ஆவணப்படம் மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் (2017) திரையிடப்பட்டு விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது.
2023 ஆம் ஆண்டு பாடலாசிரியரும் திரைக்கதை எழுத்தாளருமான மதன் கார்க்கியுடன் தனஞ்சயன் இணைந்து, திறமையான திரைக்கதை எழுத்தாளர்களுக்கு உதவுவதற்காக, படப்பிடிப்புக்குத் தயாராக உள்ள திரைக்கதை வங்கியான ஸ்கிரிப்டிக் என்ற முன்னோடித் திட்டத்தைத் தொடங்கினார். [7]
திரைப்படத் தயாரிப்பு
தொகுமோசர் பேர் என்டர்டெயின்மென்ட்ட் பதாகையின் கீழ் இவர், இந்தியில் சௌர்யா, தமிழில் வெள்ளித்தெரை ஆகிய திரைப்படத் தயாரிப்பில் இறங்கினார். மோசர் பேர் பிறகு இந்தியில் சங்கட் சிட்டி, "ஹைட் & சீக்" ஆகிய படங்களையும், தமிழில் ராமன் தேடிய சீதை, பூ, அபியும் நானும், கண்டேன் காதலை, அவள் பெயர் தமிழரசி, சித்து +2 போன்ற படங்களையும், மலையாளத்தில் கானா கண்மணி ஆகியவற்றை இரண்டு ஆண்டுகளில் தயாரித்தார்.
திரைப்பட விநியோகம்
தொகுபுளூ ஓஷன் என்டர்டெயின்மென்ட் என்ற பதாகையின் கீழ் தனஞ்சயன் 2016 இல் ஜீரோ திரைப்படத்தை விநியோகித்தார். மே 2017 இல், இவர் விநியோக நிறுவனமான கிரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்சைத் தொடங்கி, வெற்றிப்படமான இவன் தந்திரனை விநியோகித்தார். [8] [9] 2018 ஆம் ஆண்டில், சமந்தா பிரபு நடித்த யூ டர்ன் [10] படத்தை தமிழ்நாட்டில் விநியோகித்தார்.
இவர் அண்மையில் விநியோகித்த படம் கொலைகாரன் [11] இது 2019 சூன் 7 அன்று வெளியானது. [12] 2020 இல் " காவல்துறை உங்கள் நண்பன், வெளியானது. இரண்டு படங்களும் வணிக ரீதியாக வெற்றி பெற்றன.[13] [14] [15]
எழுத்து வாழ்க்கை
தொகுஎழுதுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவரான தனஞ்சயன் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, தி இந்து தமிழ், தினத்தந்தி நெக்ஸ்ட், டெக்கான் குரோனிக்கிள், இந்தியன் மேனேஜ்மென்ட், டிஎன்ஏ, இந்தியா டுடே போன்ற பல இதழ்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். தமிழ் திரையலகம் குறித்து நூல்களையும் எழுதியுள்ளார்.
திரைப்படவியல்
தொகுமோசர் பேர் என்டர்டெயின்மென்ட்டில் தயாரிப்பாளராக அல்லது இணை தயாரிப்பாளராக
- வெள்ளித்திரை (2008)
- ராமன் தேடிய சீதை (2008)
- பூ (2008)
- அபியும் நானும் (2008)
- சங்கட் சிட்டி (2009) - இந்தி
- கானா கண்மணி (2009) – மலையாளம்
- கண்டேன் காதலை (2009)
- அவள் பெயர் தமிழரசி (2010)
- சித்து +2 (2010)
- ஹைட் & சீக் (2010) – இந்தி
- மயிலு (2012)
டிஸ்னி-யுடிவி மோஷன் பிக்சர்சில் இணை தயாரிப்பாளராக
- தெய்வத்திருமகள் (2011)
- முரண் (2011)
- வேட்டை (2012)
- கலகலப்பு (2012)
- வழக்கு எண் 18/9 (2012)
- கிராண்ட்மாஸ்டர் (2012) – மலையாளம்
- ஹஸ்பண்ட்ஸ் இன் கோவா (2012) – மலையாளம்
- முகமூடி (2012)
- தாண்டவம் (2012)
- சேட்டை (2013)
- தீயா வேலை செய்யணும் குமாரு (2013)
- இவன் வேற மாதிரி (2013)
- நான் சிகப்பு மனிதன் (2014)
- அஞ்சான் (2014)
- சிகரம் தொடு (2014)
- புறம்போக்கு என்கிற பொதுவுடமை (2014)
- யட்சன் (2015)
- இறுதிச்சுற்று (2016)
தயாரிப்பாளராக - கிரியேட்டிவ் எண்டர்டெயினர்ஸ்
- மிஸ்டர். சந்திரமௌலி (2018)
- காற்றின் மொழி (2018)
- கபடதாரி (2021)
கூட்டுத் தயாரிப்பாளராக - இன்ஃபினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ்
- கோடியில் ஒருவன் (2021)
- கொலை (2023)
- ரத்தம் (2023)
- வனமகன் (2017)
விநியோகத்தராக
- ஜீரோ (2016)
- இவன் தந்திரன் (2017)
- யூ டர்ன் (2018)
- கொலைகாரன் (2019)
- அசுரன் (2019)
- காவல்துறை உங்கள் நண்பன் (2020)
எண்ணிம விநியோகத்தராக
- இறுதி பக்கம் (2021)
- கயமை கடக்க (2021)
- விக்ரம் (2022)
- எறும்பு (2023)
ஸ்டுடியோ கிரீனில் இணை தயாரிப்பாளராக
- டெடி (2021)
- காட்டேரி (2022)
- தியேல் (2022)
- பத்து தல (2023)
- 80இஸ் பில்டப் (2023)
- ரெபெல் (2024)
- வா வாத்தியாரே (2024)
- தங்கலான் (2024)
- கங்குவா (2024)
ஆவணப்படங்கள்
- எ கிரியேட்டர் வித் மிடாஸ் டச் ( பஞ்சு அருணாசலம் பற்றிய ஆவணப்படம்) [16] [17] [18]
- தி பயனியரிங் டுயல் ( கிருஷ்ணன்-பஞ்சு பற்றிய ஆவணப்படம்) [19] [20]
நடிகராக
- மந்திரப் புன்னகை (2010)
- வந்தான் வென்றான் (2011)
- கதை திரைக்கதை வசனம் இயக்கம் (2014)
- இது நம்ம ஆளு (2016)
- உத்தரவு மகாராஜா (2018)
- பூமராங் (2019)
- கபடதாரி (2021)
எழுதிய நூல்கள்
தொகு- Best of Tamil Cinema: 1931 to 2010 (2 தொகுதிகள்) [21]
- Pride of Tamil Cinema: 1931–2013 [22]
- வெள்ளித்திரையின் வெற்றி மந்திரங்கள் (தமிழில்)
- The Art and Business of Cinema (ABC) [23] [24]
விருதுகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "BOFTA".
- ↑ "GD helps Disney-UTV establish credentials in south business". Box office India. Archived from the original on 20 November 2016. Retrieved 28 September 2013.
- ↑ "Guest Leacture by Dhanajayan Govind in SIMSREE". 17 August 2010. http://simsreeblog.blogspot.com/2010/08/guest-lecture-by-mr-dhananjayan-govind.html.
- ↑ Ravikumar, R. (10 March 2009). "Ten films in Moser Baer's production kitty for 2009". தி இந்து. Archived from the original on 24 June 2014. Retrieved 8 December 2013.
- ↑ "We want to be India's best entertainment company". rediff news. http://www.rediff.com/money/2008/apr/17moser5.htm.
- ↑ "Guest Lecture by Dhananjayan Govind". pragyan.org. NIT Trichy.
- ↑ "SCRIPTick". DT Next. 22 February 2023.
- ↑ "G Dhananjayan gets distribution right of Ivan Thandhiran". 29 May 2017. Retrieved 11 February 2018.
- ↑ "National Award Winner Dhananjayan Govind turns distributor with Ivan Thanthiran". www.moviecrow.com. Retrieved 11 February 2018.
- ↑ "G Dhananjayan to distribute Samantha's U turn in Tamil Nadu". 24 August 2018.
- ↑ "Distribution rights of 'Kolaikaaran' have been bagged by a famous production banner!". 17 April 2019. Archived from the original on 19 April 2019.
- ↑ "Vijay Antony's Kolaigaran tamilnadu theatrical Rights acquired by Dhananjayan's BOFTA". 17 April 2019.
- ↑ "Dhananjayan's Creative Entertainers & Distributors acquires all rights to Kavalthurai Ungal Nanban". 28 January 2020.
- ↑ "G. Dhananjayan acquires an interesting film – News". 29 January 2020.
- ↑ "'Kavalthurai Ungal Nanban' screened across several theatres in Chennai". 27 November 2020.
- ↑ "The man who made Rajinikanth". http://www.thehindu.com/features/cinema/a-documentary-on-panchu-arunachalam-veteran-screenwriter-and-producer-in-tamil-cinema/article8399359.ece.
- ↑ "The man who made Rajinikanth". https://www.thehindu.com/features/cinema/a-documentary-on-panchu-arunachalam-veteran-screenwriter-and-producer-in-tamil-cinema/article8399359.ece.
- ↑ "Documentary on Panchu Arunachalam". தி இந்து.
- ↑ "Documentary on pioneers of Indian cinema launched". https://www.dtnext.in/Lifestyle/LifeStyleTopNews/2017/04/09205411/1030959/Documentary-on-pioneers-of-Indian-cinema-launched.vpf?TId=112136.
- ↑ "Producer-writer G. Dhananjayan next project on legendary director duo of Krishnan-Panju". https://www.newindianexpress.com/entertainment/tamil/2017/apr/05/producer-writer-g-dhananjayan-next-project-on--legendary-director-duo-of-krishnan-panju-1590335.html.
- ↑ "The Best of Tamil Cinema, launched in style". சிஃபி. Archived from the original on 16 July 2014. Retrieved 4 March 2011.
- ↑ tabloid!, Mythily Ramachandran, Special to (4 December 2014). "' Pride of Tamil Cinema,' a treat for film buffs". Retrieved 11 February 2018.
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ "Art and Business of Cinema". சினிமா எக்ஸ்பிரஸ்.
- ↑ "What Kollywood needs to do better: 'Don't release six films on the same day, create more heroes'".
- ↑ "62nd National Film Awards announced". பத்திரிகை தகவல் பணியகம் (Press release). 24 March 2015. Retrieved 24 March 2015.
- ↑ "Producer Dhananjayan thanks the press for his National Award". 7 April 2017. Retrieved 11 February 2018.