ஜி. பாலகிருட்ணன்

கார்ட்டூனிஸ்ட் பாலா என்று பொதுவாக அறியப்படும் ஜி பாலகிருட்ணன் (தமிழ்நாடு, இந்தியா) ஒரு கேலிச் சித்திர வரைஞர் மற்றும் ஊடகவியலாளர். இவர் குமுதம் இதழில் கார்ட்டூனிஸ்ட் ஆகவும் ஊடகவியலாளராகவும் 12 ஆண்டுகளுக்கு மேல் பணி புரிந்தார்.[1] பின்னர் தனியாக லைன்ஸ்மீடியா என்னும் இணைய ஊடகத்தை நடத்தி வருகிறார். இவரது படைப்புக்கள் தமிழக மற்றும் நடுவண் அரசின் அரசியல்வாதிகளையும் ஆட்சியாளர்களையும் கடுமையாக விமர்சித்து அமைகின்றன.

கேலிச் சித்திரம் தொடர்பான கைது தொகு

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் கடன் தந்தவரின் தொல்லை தாங்க முடியாமல் கூலித்தொழிலாளி இசக்கிமுத்து, அவரது மனைவி மற்றும் இரு பிஞ்சுக்குழந்தைகள் என நான்குபேரும் தீக்குளித்து இறந்த சம்பவதத்தில் அரசின் செயலற்றதன்மையைக் கண்டித்து இவர் வெளியிட்ட ஒரு கேலிச் சித்திரத்துகாக இவர் நவம்பர் 2017 இல் கைது செய்யப்பட்டார். இவரது கைது பரந்த கவனத்தைப் பெற்றது.[2] இவரது கைதை ஊடகவியலாளர்கள், சிவில் சமூக அமைப்புகள், சில அரசியல் கட்சிகள் கண்டித்து உள்ளன. அதிமுக மற்றும் பிஜேபி தலைவர்கள் ஆதரித்து உள்ளார்கள்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "Who is cartoonist G Bala?". Indian Express. 2017-11-07. http://indianexpress.com/article/who-is/who-is-cartoonist-g-bala-4926408/. 
  2. "Cartoonist held for 'obscene' work on CM Palaniswami, officials". Times of India. 2017-11-06. https://timesofindia.indiatimes.com/city/chennai/cartoonist-held-for-obscene-work-on-cm-palaniswami-officials/articleshow/61523936.cms. 
  3. "TN Law Minister Slams Cartoonist G Bala Over His Caricature Criticising Govt". இந்தியா ருடே. 6 நவம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 8 நவம்பர் 2017.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._பாலகிருட்ணன்&oldid=3213886" இலிருந்து மீள்விக்கப்பட்டது